ஹீரோயின்ஸ் ஸ்பாட்!



-மை.பாரதிராஜா

சம்மர் வந்தாச்சு. இந்தக் கோடையை எங்கு கொண்டாடலாம் என திட்டமிட ஆரம்பித்திருப்பவர்களுக்கு இது குளுகுளு சேதி. விமானப் பயணத்தையே உள்ளூர் ஷேர் ஆட்டோ ட்ரிப் போல் பயன்படுத்தும் இந்த ஹீரோயின்ஸ் ரிலாக்ஸுக்காக அடிக்கடி ஜாலி ட்ரிப் அடிக்கும் கலர்ஃபுல் ஸ்பாட்ஸ் எவை?

* ‘இயக்குநர் ஆகும் கனவிலேயே மிதந்ததாலோ என்னவோ, ஷூட்டிங் சென்ற இடங்களை எல்லாம், தான் இயக்கப் போகும் படத்திற்கான லொகேஷனாகவே பார்த்து ரசிக்கிறார் நித்யாமேனன்’ எனச் சொல்லி கண்சிமிட்டுகிறது கோடம்பாக்கம். கேரளா, கோவா, லண்டன் இதெல்லாம் நித்யாவின் ஃபேவரிட் பிளேசஸ்.

* அனுஷ்காவுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது ‘ஸ்பிரிச்சுவல் கேர்ள்’. நாளுக்கு நாள் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்து வரும் இவருக்குப் பிடித்த லொகேஷன் இந்தோனேஷியா.

* அட இந்தப் பொண்ணுக்கும் இந்தப் பாலைவனம் பிடிக்குமா? என விழிகளை விரிய வைத்துவிடுகிறார் நம்ம சன்னி லியோன். உலக நாடுகள் அத்தனையும் சுற்றி வந்தவருக்கு துபாய் மிகவும் பிடிக்குமாம்.

* ஃபேஷன் அண்ட் செல்ஃபி குல்ஃபி ராய் லட்சுமியும் ஒரு Beach babeதான். ‘Nature brings joy in me’ என உருகும் பியூட்டி குயினுக்கு பாரீஸும் ரொம்ப பிடிக்குமாம்.

* பெருமழையின் போது நம் மக்கள் ஹன்சிகாவிற்கு காட்டிய அன்பில் திக்குமுக்காடியதிலிருந்து ‘ஐ லவ் சென்னை’ என எப்போதும் கசிந்து உருகுபவரின் ஃபேவரிட் ஸ்பாட்டில் மும்பைக்கு எப்போதும் முதலிடம் உண்டு.

* கீர்த்தி சுரேஷுக்கு பிடித்த ஸ்பாட், கோவாவில் உள்ள செயின்ட் பிராசின்ஸ் சேவியர் சர்ச். ஃபாரீனில் பிடித்த இடம், ஸ்விட்சர்லாண்ட். ‘பைரவா’ பாடல் காட்சிக்காக ஸ்விஸ் சென்றதில் இருந்து அந்த சிலுசிலு நாட்டையே 24 X 7 நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

* ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே டீப் ப்ளூ ஸீயை ரசிப்பது ப்ரியா ஆனந்திற்கு பிடித்த ஹாபி. கன்னட ‘ராஜகுமாரா’வின் பாடல் படப்பிடிப்புக்காக மெல்போர்ன் சென்றார். போதாதா? அந்த இடம் பச்சக் என அவர் மனதில் ஒட்டிக்கொண்டது!

* Beach babe என்றாலே அது அமலாபால்தான். Sand - sea- ocean ஏரியாக்கள்தான் எப்போதும் விருப்பம். கடவுளின் சொந்த தேசத்திற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ். ‘Always stay curious and never lose your sense of wonder’ என விழிகளில் சிறகடிப்பது அமலாபாலுக்கு அம்புட்டு இஷ்டம்.

* தோழி ப்ளஸ் காஸ்ட்யூம் டிசைனரான நீரஜாவுடன் சமீபத்தில் பாங்காக் பறந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். பிடித்த ஸ்பாட், காஷ்மீர்தானாம்.

* இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியின் அழகில் மயங்கியவர்களில் காஜல் அகர்வாலும் ஒருவர். சரித்திர இடங்களை ஆச்சரியமாகப் பார்த்து மகிழும் காஜல், சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள ஜதாவுகத் கோட்டையை விசிட் அடித்து பரவசப்பட்டிருக்கிறார்.

* எமிஜாக்சன் பார்க்காத beaches உலகிலேயே குறைவு. ஆனாலும் நம்ம ஊர் கோவா மேல்தான் ப்ரியம் அதிகம். ‘சிங் இஸ் பிளிங்’ இந்திப் படத்திற்காக முதல் முறையாக கோவா சென்றவர், ‘I Love Goa!! Never want to leave’ என உருக ஆரம்பித்து... இன்னமும் மெல்ட் ஆகிக் கொண்டிருக்கிறார்.

* கடலில் ஸ்விம் பண்ணுவது ‘வாட்டர் பேபி’ நிக்கி கல்ரானிக்கு பிடித்தமான ஹாபி. சமீபத்தில் ஸ்விட்சர்லாண்ட் சென்று வந்ததில் இருந்து ஸ்நோ கேமும் இவரது ஃபேவரிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.

* ஃபங்ஷன்... ஜங்ஷன்... என வெளியிடங்களுக்கு விசிட் அடிக்கும் தமன்னா இப்போது காஸ்ட்யூமில் தனி கவனம் செலுத்த காரணம் பாரீஸ்தானாம். ‘தோழா’வுக்காக அங்கே ஒரு மாதம் டேரா போட்டார். அவ்வளவுதான். இண்டு இடுக்கு விடாமல் தம்ஸுக்கு பாரீஸ் முழுக்க பழக்கமாகிவிட்டது. ‘I would love to go to Paris for a vacation... my favorite place’ என உருகுகிறார்.

* த்ரிஷாவிற்கு பிடித்த வெளிநாடுகளின் லிஸ்ட்டில் உலகமே அடங்கியிருந்தாலும் நேபாளம் மனம் கவர்ந்த தேசமாகி விட்டது. ‘அழகும் அமைதியும் தவழும் நாடு!’ என்கிறார் கண்களை மூடியபடி.

* ‘லண்டனைப் பற்றி நாலு வரி எழுதுங்கள்’ என்றால் ‘நோ நோ’ எனச் சொல்லிவிட்டு... நாலாயிரம் வார்த்தைகள் எழுதிக் குவித்து விடுவார் ஸ்ருதிஹாசன். அப்படி ஒரு லண்டன் கிரேஸி. அங்கு நிலவும் க்ளைமேட், கிடைக்கும் இத்தாலியன் ஃபுட் அத்தனையும் ஸ்ருதியின் ஃபேவரிட்.

* ‘இனி ஹைதராபாத்தான் ஃபேவரிட் ஸ்பாட்’ என சமந்தா சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் சமந்தாவின் சமத்து ரிலாக்ஸ் ஸ்பாட் இப்போது பாண்டிச்சேரிதானாம்!

* ‘பே வாட்ச்’ ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவில் டேரா போட்டு டோராவாகி விட்டார் ப்ரியங்கா சோப்ரா. அங்கே சொகுசு படகில் ரிலாக்ஸ் மூடில் இருந்தவர், ‘Sometimes it’s ok. let ur eyes be moist and your heart be soft.. Sometimes... u just have to allow yourself to feel...’ என கவிதைகளைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

(பின்குறிப்பு: சென்னை தாம்பரத்தை தாண்டினாலே நமக்கு அது வெளிநாடுதான் என்பவர்கள் இதையெல்லாம் ஒரு பெருமூச்சோடு நிறுத்திக்கொள்வது பர்ஸுக்கு நல்லது!)