Stars Pet Animals



-மை.பாரதிராஜா

பொசுபொசு நாய்க்குட்டிகள், புஸ்ஸு புஸ்ஸு பூனைக்குட்டிகள் என செல்லப்பிராணிகளை வளர்க்காத நட்சத்திரங்களே இல்லை. குறிப்பாக நடிகைகள் எப்போது பேட்டி அளித்தாலும் அவர்களது மனதில் இருந்து வரும் ஒரே வாக்கியம், ‘I love my pets..’ எதனால் பெட் அனிமல்ஸ் மீது பிரபலங்களுக்கு அத்தனை காதல் என கேட்பவர்களும் உண்டு. ‘நடிகைகள் ஏன் நாய் வளர்க்கிறாங்க தெரியுமா..?’ என கமுக்கமாக சிரிப்பவர்களும் உண்டு.

போலியாக மரியாதை காட்டுபவர்களே திரைத்துறையில் அதிகம். நட்சத்திரங்களின் மார்க்கெட், வசதி வாய்ப்புகள், சம்பளம் பார்த்து பழகுபவர்களே அதிகம். எனவே எது உண்மையான அன்பு... எது டூப்ளிகேட்... என நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த சூழலில் நடிகைகளின் க்ளாமருக்காகவோ, ‘அவங்க நாலு கோடி பேமெண்ட் வாங்கறாங்க...’ என்பதற்காகவோ இந்த செல்லங்கள் வாலாட்டி சுற்றுவதில்லை.

‘பொண்ணு செம ஃபிகர்...’ என பெருமூச்சு விடுவதில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களை உடலாகப் பார்க்காமல் உள்ளமாக பார்ப்பவை பெட் அனிமல்ஸ் மட்டும்தான். இதனால்தான் நடிகைகள் லவ் அனிமல்ஸ். ஓகே. எந்தெந்த நட்சத்திரங்கள் என்னென்ன செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள்?

இலியானா - இவரது கோவா வீட்டில் ஒரு டஜன் பூனைக்குட்டிகள் இருக்கின்றன. இவற்றில் blueவும் trukeyயும் இலியானாவின் மனம் கவர்ந்தவை.

அமலாபால் - இவரது அன்பு முத்தங்களை குறைவின்றி பெறுபவர் mynoo மட்டுமே. 
நமீதா - சில வருடங்களாக ‘சாக்லெட்’ வளர்த்து வந்தவர், இப்போது ‘கேரமல்’ வளர்க்கிறார்.
அமிதாப்பச்சன் - பத்து வருடங்களுக்கு மேலாக இவரது அன்பை பெற்ற ஒரே ஜீவன், dane shanouk.
எமிஜாக்‌சன் - babloதான் தோஸ்த். பாக்ஸர் இன நாய்க்குட்டி. வயது நான்கு மாதங்கள்.
விஷால் - சங்க வேலைகள், ஷூட்டிங் டென்ஷன் என இவரது எல்லா மன அழுத்தங்களையும் போக்கும் வல்லமை romeoக்கு மட்டுமே உண்டு.
தமன்னா - மூன்று வருடங்களாக உயிருடன் கலந்திருக்கிறது இந்த pebbles.

பார்வதி நாயர் - பார்க்க முரடனாக இருந்தாலும் ரொம்பவே சாஃப்ட் வாலு இந்த jack.
சோனாக்‌ஷி சின்ஹா - இப்போதுதான் புத்தம் புதிகாக kuroவை வாங்கியிருக்கிறார்.
லேகா வாஷிங்டன் - பூனையின் காதலி. மடியில் கொஞ்சுவது swami.
நிக்கி கல்ரானி - நிக்கியின் ஃபேமிலிக்கே ஃபேவரிட், இந்த junior.
ராய் லட்சுமி - மும்பையில் கிடைத்த கிஃப்ட் இந்த cooper.
அனுஷ்கா சர்மா - ஸ்பெயினுக்கு ஷூட்டிங் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் கொடுத்த க்யூட் கிஃப்ட், இந்த dude.
அனுஷ்கா - நிறைய நாய்க்குட்டிகள் வளர்க்க வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால், தினம் ஒரு ஸ்டேட்டில் ஷூட்டிங் பறப்பதால் எந்த petsம் வளர்க்கவில்லை.
த்ரிஷா - செல்ஃபி எடுப்பது, பர்த் டே செலிபரேட் செய்வது என எல்லா விழாக்களையும் பெட்ஸுடனேயே கொண்டாடுகிறார். லேட்டஸ்ட் ஃபேவரிட், teddy.
ஸ்ருதி ஹாசன் - ஆசையாய் அள்ளி அணைத்துக் கொண்டிருப்பது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த கெஸ்ட்டை. மும்பை வீட்டை ஆள்பவர் shitzu.
ஹன்சிகா - மும்பைக்கு எப்போது இவர் சென்றாலும் தாவி வந்து அணைப்பது bruzoதான். சில ஆண்டுகளுக்கு முன்புதான் மேடம் மனதில் இந்த ‘சார்’ இடம் பிடித்தார்.
ப்ரியாஆனந்த் - ஷாப்பிங் போனாலும், வாக்கிங் போனாலும் நிழலாக இருக்கும் bumblebee இதுதான்.
மாதவன் - சென்னையில் கொஞ்சிய ‘சிம்பா’வே இப்போது மும்பையிலும் வலம் வருகிறது.
ப்ரியங்கா சோப்ரா - நியூயார்க்கில் இருந்தாலும் மும்பையில் இருக்கும் brandoவிடம் தினமும் ஸ்கைபில் பேசிவிட்டுதான் உறங்கவே செல்கிறார்.