வலைப்பேச்சு



மொட்டை போடும் அமைச்சர்கள் நாட்டுக்கு எதையோ குறிப்பால் உணர்த்துகிறார்கள்!
- கருப்பு கருணா

உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது இலுமினாட்டியாம்! அடேய்... அதுக்கு பேரு பொண்டாட்டிடா!
- பூபதி முருகேஷ்

முதல்ல ராஜ ராஜ சோழன் மாதிரி தெரிஞ்ச மோடி, போகப் போக ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மாதிரி தெரியுறார்!
- முல்லை வேந்தன்

18 வழிகளில் உபயோகமா இருந்தா அது டேபிள்மேட்... 18 வழிகளில் தொந்தரவாக இருந்தா அதுதான் ரூம்மேட்!
- பிரதீப் ராஜ்

எதிரியை ஒழிக்க முதலில் அவர்களை நமது நண்பர்களாக்குங்கள். நம்ம கூட சேர்ந்த அப்புறம் உருப்படவா போறான்!
- குட்டி கண்ணன்

இங்கிலீஷில் சேர்க்க புது வார்த்தைகள்...
Cashual Leave - Leave taken to withdraw cash from ATM/Bank
Nillionaire - Someone having little to no money

@gpradeesh
‘வின்னர்’ல ‘நான்தான் ஹீரோ’னு பிரசாந்த் நம்பிட்டிருக்கற மாதிரி, ‘இவனுக நம்மளதான் கும்பிடுறானுக’னு மம்மி நம்பிட்டு இருந்துருக்கும் போல!

@iindran
தண்ணிக்குள்ளேர்ந்து அம்மாவோட கை மட்டும் ‘சென்னை’னு எழுதின ஒரு கொழந்தைய தாங்கிப் பிடிச்சாப்புல போன வருஷம் போஸ்டர் ஒட்டினவனெல்லாம் இப்ப  என்ன பண்ணிட்டிருப்பான்!

@meenammakayal
இத்தனை வருஷ வாழ்க்கைல சலிக்காத ஒண்ணு இருக்குன்னா, அது சோறுதான்!

@mpgiri
இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு ஒவ்வொரு பெரிய பேங்க்லயும் ஒரு ஸ்பை இருக்கான் போல!

@_thara
வாழ்க்கை லட்சியங்களை பெற்றோர்கிட்ட பகிரும்பொழுது, ‘‘போயி உருப்படியா எதுனா செய்!’’ என்ற அவர்களின் பதிலிலேயே அவை முற்றுப் பெற்றுவிடுகின்றன.

@Bubbly_Girl__
காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம்; காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்!

@ArchanaArchuu
‘ஒரு ஆணிடம் பிடித்தது என்ன?’ என்று ஒரு பெண்ணிடம் ஆண் கேட்டால், வேண்டுமென்றே அந்த ஆணிடம் இல்லாததாகப் பார்த்து கரெக்டா சொல்வாள் அப்பெண்!

‘‘இல்ல, தெரியாமத்தான் கேட்கிறேன்... நாங்க மீம்ஸ் போட்டா, பதிலுக்கு நீங்க மீம்ஸ்தானே போடணும்? உள்ள தூக்கி போடுவேன்றது என்ன நியாயம்!’’
- பார்த்திபன்

சிறுவன்: ரெண்டு வில்ஸ் சிகரெட் கொடுங்க.
கடைக்காரர்: டேய்... இந்தச் சின்ன வயசுல உனக்கு இந்தப் பழக்கம் வேறயா!
சிறுவன்: ச்சீ... எனக்கு இல்லைங்க.
கடைக்காரர்: அதானே பார்த்தேன்!
சிறுவன்: என் தம்பிக்கு வாங்கறேன். எனக்கு பீடி கொடுங்க.
கடைக்காரர்: !!!
- பிரேம் குமார்

சரித்திரத்தைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்க, அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான்... நாம வாழணும்னா யாரை வேணும்னாலும், எத்தனை பேரை வேணும்னாலும் அம்மா, சின்னம்மா, பெரியம்மான்னு கூப்பிடலாம்!
- ராஜசேகர்

எவ்ளோ விலை ஏறினாலும் நாம 50 ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போடப் போறோம். இப்படியே அளவு கொறஞ்சு ஒரு நாள் 50 ரூபாய்க்கு இங்க் ஃபில்லர்ல ரெண்டு சொட்டு தெளிச்சு ‘அவ்ளோதான்... போடா’ன்னு விரட்டப் போறானுங்க. அன்னைக்கு வெடிக்கும்டா மக்கள் புரட்சி!
- சத்யா சுரேஷ்

வீட்டுக்கு விளக்கு ஏத்த வர்றியான்னு என் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட கேட்டேன். ‘‘வெளக்குமாத்தோட வர்றேன்’’னு சொல்லுது.
ஒருவேளை வீட்ட கூட்டி விட்டுட்டு விளக்கு ஏத்துவாளோ!

‏@withkaran
‘உயிரின் உயிரே’ன்னுலாம் எழுதுனா தமிழ்ல எழுதுங்கய்யா... இங்கிலீஷ்ல எழுதுனா ‘யூரின்’னே படிக்க வருது!

@bri2o
‘‘என்ன சார் பேசிட்டே இருக்கானுங்க... எப்ப சார் வரும்’’ என்றபடியே தொடங்குகிறது பலரின் உலகப்படம் பார்க்கும் பழக்கம்!

@thalabathe      
‘அழுதுட்டே கிடந்து சாவுடா’ என்பதே, அவள் கடைசியாக என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தமாக இருக்கும்.

@ramcharan
இலையில ஊத்துற ரசம் மாதிரி, வாழ்க்கை எங்க போகுதுன்னே தெரியல!

@aruntwitz
புதிதாக வாங்கிய பொம்மையின் காலை உடைத்துவிட்டு, அதனிடம் மன்னிப்பு கேட்கும் இயல்புடன் இருப்பதே ‘குழந்தை மனது’.

இந்தியா முதன்முறையாக பணம் இல்லாத ‘கேஷ்லெஸ்’ இந்தியாவாக மாறியிருக்கிறது!
பேங்க் - கேஷ்லெஸ்
ஏ.டி.எம் - கேஷ்லெஸ்
மக்கள் - கேஷ்லெஸ்

லவ் ஃபெயிலியர் ஆனால் தாடியை மட்டும்தான் வளர்க்க வேண்டும். கல்யாணம் ஆனா, பொண்டாட்டி புள்ளையையும் சேர்ந்து வளர்க்க வேண்டும்.
# நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க மக்கா!

கஸ்டமர்: செக்யூரிட்டி... ஏ.டி.எம்ல ஏன் ‘நாகேஷ்’னு எழுதி ஒட்டியிருக்கீங்க?
செக்யூரிட்டி: யோவ், ‘நோ கேஷ்’னு எழுதியதை எவனோ ரெட்ட கொம்பை சுரண்டிட்டுப் போயிருக்கான்!

‘‘ஏங்க, என்னைய மனசுல நெனச்சு ஒரு கவிதை சொல்லுங்க...’’
‘‘அன்பே! நீ
ஆயிரம் ரூபாய் நோட்டு
டிசம்பர் 31தான்
கடைசி டேட்டு!’’

@udanpirappe      
பெண் குழந்தைக்கு ‘ஜெய
லலிதா’ என பெயர் சூட்டினார் சசிகலா!
# இப்ப பொன்னையன் வந்து, ‘அம்மாவுக்கு ஜெயலலிதானு பேர் வச்சதே சின்னம்மாதான்’னு விடுவார் பாரேன்!

@Kozhiyaar      
நல்ல முடிவு எடுப்பதற்காக செய்யப்படுவது ‘விவாதம்’ எனவும், முடிவு எடுத்தபின் செய்யப்படுவது ‘வீண் வாதம்’ எனவும் கொள்ள வேண்டும்!

ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாளன் ஒருவன், பைலட் அறையை  சுத்தம் செய்யும்போது, ‘விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி’ என்ற புத்தகத்தைக் கண்டான். அவன் அந்தப் புத்தகத்தைப் பிரித்தான். முதல் பக்கத்தில், ‘எஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் பட்டனை அழுத்துக’ என எழுதி இருந்தது. அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான். எஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது!

அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது. இரண்டாவது பக்கத்தைப் புரட்டினான். ‘விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற பட்டனை அழுத்துக’ என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓடத் துவங்கியது. இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தைப் பிரித்தான். ‘விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் பட்டனை அழுத்தவும்’ என்று இருந்தது. அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான். விமானம் மேலெழும்பிப் பறக்க ஆரம்பித்தது.

அவன் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான். தன் திறமையில் மிகவும் திருப்தி அடைந்தவனாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் நான்காவது பக்கத்தைப் பிரித்தான். அவ்வளவுதான்! அவனுக்கு மயக்கம் வந்து கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. காரணம், நான்காவது பக்கத்தில் இப்படி எழுதி இருந்தது... ‘விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கிப் படியுங்கள்!’

அந்த பணியாளனின் பெயர் பிரதமர் மோடி! ‘500, 1000 ரூபாய் நோட்டு’ என்கிற விமானத்தை எப்படி பத்திரமாகத் தரையிறக்குவது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்!

இ.பிக்கு போன் பண்ணி ‘‘புயல் போய் ரெண்டு நாள் ஆச்சி... கரன்ட் எப்ப வரும்?’’னு கேட்டா... ‘‘உன் போன்ல இன்னுமா சார்ஜ் இருக்கு! என்ன மாடல்’’னு கேக்குறாங்க. அடேய்ய்...
- சுரேஷ் ஆதித்யா

சிறு வயதில் ஒரு ஊசிக்குப் பயந்து ஓடிய நாம்தானா, இன்று வாழ்க்கை கொடுக்கும் சம்மட்டி அடிகளைத் தாங்கிக்கொண்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் காலம் கழிக்கிறோம்..!
- கண்ணன் ராமசுப்ரமணியன்