காம்போ கெமிஸ்டரி!



‘கடம்பன்’ ஸ்டில்களில் ஆர்யாவின் மஸ்குலர் பாடியும், தெரசாவின் மகரந்த மேனியும் இணைந்த காம்போ கெமிஸ்ட்ரியில் எகிறுகிறது ஹை வோல்டேஜ் போதை.
- கே.நேசமணி, சென்னை-78

ரைட் டைமிங்கில் ‘டிஜிட்டல் வாலட்’ குறித்த பிளஸ், மைனஸ்களை சிம்பிளாகப் புரிய வைத்த கட்டுரைக்கு அனேக அப்ளாஸ்.
- பி.எம்.சினேகா செல்லய்யா, திருவள்ளூர்.

படத்தின் செலக்‌ஷன் கடந்து ‘ஹிட்’ பேச்சிலும் சூப்பர் வாரியராகிவிட்டார் விஷ்ணு விஷால்.
- ச.மணியரசன், விழுப்புரம்.

ஆன்ம உணர்ச்சிகளை உசுப்பும் இனிய ஸ்‌ருதி பாடலாக சுதா ரகுநாதனின் ‘Download மனசு’ பரவசம்.
- ஏ.ராஜாமணி, நாகர்கோயில்.

வழிப்போக்கனாக அறிந்த ஒருவரிடம் தன் வாழ்க்கை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்ட பெரியவரைப் பற்றிய ஜெயமோகன் கட்டுரை நெஞ்சம் கனக்கச் செய்தது. ‘நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்லீங்களா? சாமின்னு ஒண்ணு இருக்கு இல்லீங்களா?’ என்ற அவரின் குரல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் காதுகளில் ஒலிக்கிறது.
- மா.திவ்யதாரணி, சேலம்.

 ராஜமுருகனின் அக்கறை எழுத்தில் ‘உயிரமுது’ தொடர் அகநலம் காக்கும் இனிய உணவுகளின் முகவரி.
- யூ.அருட்பிரகாசம், காரைக்குடி.

மூலநோய்க்கான முழுமையான வழிகாட்டியாக ‘செகண்ட் ஒப்பீனியன்’ தொடர் ஃபேமிலி டாக்டர் டச்.
- ஆர்.கணேஷ், திண்டுக்கல்.

கைகுலுக்கலில் துளிர்க்கும் நட்பின் அக்மார்க் தூய்மையைப் பேசும் ‘நட்புமொழி’, நியூ ஜெனரேஷனுக்கு தோழமைப் பரிசு.
- கி.சரோகதிரவன், திருச்செந்தூர்.

தனது புற்றுநோய் அனுபவங்களை சமூகத்துக்கு விழிப்புணர்வாக்கிய உஷா ஜேசுதாசனுக்கு வார்ம் கங்கிராட்ஸ்.
- ஆர்.சிவகுமார், வேலூர்.

‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடரில் என்.சி.ராகவாச்சாரி கடைப்பிடித்த பொன்விதிகளும், பின்பற்றிய கொள்கைகளும் இன்றைய அட்வகேட்களுக்கு வாழ்வியல் பாடம்.
- எஸ்.கார்த்திக், பெங்களூரு.

வாழ்வின் சவால்களைக் கடந்து சமூகத்திற்கே நம்பிக்கை தந்த நிஜசாட்சியங்களை கண்முன்னே நிறுத்தி விடைபெற்ற ‘உறவெனும் திரைக்கதை’ அருஞ்
சுவைக்கேணி.
-டி.ஏ.தீபமல்லிகா, மதுரை.

அவசிய அவசரமானாலும் ‘ஹெல்த் முக்கியம்’ என்று உணர்த்திய கருத்தடை மாத்திரை
கட்டுரை, குட் ஒப்பீனியன் ஸ்டோரி.
- எஸ்.சுசீலா, காஞ்சிபுரம்.

சமூகப் பிரச்னைகளை தாறுமாறாக கலாய்க்கும் ‘ஸ்மைல் சேட்டை’ குழுவுக்கு காத்திருக்கிறது ஃப்யூச்சரில் சூப்பர் வேட்டை.
- க.த.சுந்தரேசன், நாகர்கோவில்.