வலைப்பேச்சு



@_Mயynaah_
நடக்காது, சேராது, பொருந்தாதுன்னு தெரிஞ்சும் அவங்ககிட்ட இருந்து விலகாம இருக்குறதுக்குப் பெயர் காதல் இல்ல... துரோகம்!

@josh_offl
மோடி வெடின்னு ஒண்ணு புதுசா வந்திருக்காம். இங்க பத்த வச்சா, ஃபிளைட் புடிச்சு அமெரிக்கா போய்தான் வெடிக்குமாம்!

@altaappu
ஒரு மாசமாச்சு, ஒரு ஃபர்ஸ்ட் லுக் இல்ல, ஒரு டீசர் இல்ல, ட்ரைலரும் இல்ல... என்னய்யா யாவாரம் பண்றீங்க?
# அப்போலோ

@mrithulaM
தானா தேடி எடுத்துக்கணும்னு வீராப்போட வீடெல்லாம் தேடிட்டு, கடைசியா மனைவிகிட்டதான் கேட்டு அசடு வழியிறாங்க கணவர்கள் பொதுவாவே!

இட்லி என்ன இசம்?
‘இட்லி வெந்திருக்கு’ன்னு சொன்னா ‘ஆப்டிமிஸம்’. ‘இட்லி வேகலை’ன்னு சொன்னா ‘பெஸிமிஸம்’. ‘இட்லியெல்லாம் சுட முடியாது, போடா’ன்னு பொண்டாட்டி சொன்னா ‘ஃபெமினிசம்’. ‘இட்லிய சுட்டது யாரு’ன்னு பரபரப்பு கிளப்பினா அது ‘ஜர்னலிசம்’. இட்லி ‘அரசாள்வோர் சாப்பிட்ட பிறகுதான் நமக்கு’ன்னு சொன்னா ‘இம்பீரியலிசம்’. இட்லியை வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் ‘போஸ்ட் மாடர்னிசம்’. இட்லி மேல ‘மேட் இன் இந்தியா’ன்னு சீல் வச்சா அது ‘நேஷனலிசம்’.

‘இட்லி உனக்குக் கிடையாது’ன்னா அது ‘ஃபாஸிசம்’. ‘இட்லி என்னடா சிறுத்துப் போயி கிடக்குது’ன்னு சொன்னா ‘ரேசிசம்’. இட்லி காசு கொடுத்தாதான் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கறது ‘ரியலிசம்’. ‘இதுக்கு மேல இட்லி கிடையாது’ன்னு சொன்னா ‘கேப்பிடலிசம்’. கடைசியா, ‘இட்லியேவேணா... எந்திரிச்சு போ, நாயே’ன்னா ‘கவுண்டரிசம்’.

எனக்கு எவ்வளவு கவலைகள் என பட்டியலிட்டுப் பார்த்தால், ‘எனக்கு இவ்வளவு கவலைகளா?’ எனப் புதிதாக ஒரு கவலையும் பட்டியலில் இணைந்து விட்டது.
- ராஜா ஷா

ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தின் வைட்டமின் ‘ஏ’ உள்ளது.
ஒரு கிலோ அகத்திக் கீரையில் 113 கிலோ ஆப்பிளின் கால்சியம் சத்து உள்ளது.
ஒரே ஒரு மனைவிக்குள் முப்பது டீச்சரும் அறுபது ஹெட்மாஸ்டரும் தொண்ணூறு ஜட்ஜும் இருக்கிறார்கள்!

மனைவி: என்னங்க... என் வாய்க்குள்ள கொசு போயிடுச்சு.
கணவன்: உடனே ஆல் அவுட் எடுத்து குடிக்க வேண்டியதுதானே... ஆறே செகண்டுல அது வேலை செய்ய ஆரம்பிச்சிடும்.

@maya_alazhi
பெண்ணைப் புரிந்துகொள்ள ஆண் அமைதியாக இருந்தாலே போதும். பெண் தன்னைத் தானே புரிய வைத்திடுவாள்.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து பசங்களோட டீ குடிச்ச பிறகு...
* ஐந்நூறு ரூவா நோட்டை நீட்டுனா ‘வந்து ஒரு வாரம் ஆச்சு’ன்னு அர்த்தம்.
* நூறு ரூவா நோட்டை நீட்டுனா, ‘வந்து ரெண்டு வாரம் ஆச்சு’ன்னு அர்த்தம்
* கரெக்ட்டான சில்லறை கொடுத்தா, ‘மூணு வாரம் ஆச்சு’ன்னு அர்த்தம்.
* பாக்கெட்டைத் தடவி சில்லறை இல்லைன்னு சொன்னா, ‘லீவு முடியப்போகுது’ன்னு அர்த்தம்.

@shaan_64
சில பேர் ‘டக்’குன்னு புருஷனையே மாத்திடுறாங்க. நமக்கு டெய்லரை மாத்துனதே ஃபீலிங்கா இருக்கு!

மனைவி கேட்காமலேயே வீட்டுக்குப் போகும்போது கணவன் வாங்கிட்டுப் போகும் பூவுக்கு வாசம் அதிகம்.
- வெ. பூபதி

உலகத்துலயே சஸ்பென்சான விஷயம் எதுன்னா... வீட்டுக்காரம்மா எதுக்கு கோவமா இருக்குன்னு கண்டுபுடிக்கிறது தான்!
- ரிட்டயர்டு ரவுடி

மாப்பிள்ளைக்குத் தங்கை உண்டுன்னு சொன்னா பொண்ணுக்கு முகம் வாடும்; பொண்ணுக்கு தங்கை உண்டுன்னு சொன்னா மாப்பிள்ளைக்கு முகம் மலரும்...
- பார்த்திபன் தா

@Geethu
டீசல், பெட்ரோல், பால் எல்லாம் கூட லாரிலதான் கொண்டு போறாங்க. ஒரு சொட்டுகூட ஒழுகுறதில்ல. தண்ணீர் லாரி மட்டும் ஏன் ஒழுகுது?

என்னதான் சரவெடி, ஆட்டம் பாம்லாம் இருந்தாலும் நம்ம சாம்சங் கேலக்ஸி 7 மாதிரி வெடிக்குமா?
- குட்டி கண்ணன்

மனைவி: நேத்திக்கு நீங்க யாரோ ஒரு பொண்ணோட சினிமாவுக்குப் போனீங்களாமே?
கணவன்: ஆமாம்மா... இந்தக் காலத்து படங்கள் குடும்பத்தோட பாக்கற மாதிரியா இருக்கு!

@udaya_Jisnu 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் நகை அடகு வைத்தவர்களை விட, ‘சேட்’ பேங்க் ஆஃப் இந்தியாவில் நகை
அடகு வைத்தவர்கள்தான் அதிகம்.

@Writter_Naina
இனிமே விஜய்னா ஸ்டில்லு வெளியிடும்போது ‘இந்த ஸ்டில்லு இந்த படத்தோடது’ன்னு டைட்டில் போட்டா வசதியா இருக்கும்! எல்லாமே ஒரே மாதிரி இருக்குதுல!
# கன்பியூஸ்டு

@Endhirapulavan
அவ்ளோ பெரிய சனி, வியாழன் கிரகம்லாம் கூட கரெக்டா அதோட ரூட்ல போவுது... இத்துனூண்டு பைக்க வச்சிக்கிட்டு ஒருத்தனாச்சும் ரோட்ல ஒழுங்கா ஓட்றானா பாரு!

‘‘எதைப் பார்த்தாலும் உன் முகம்தான் தெரியிது டார்லிங்...’’
‘‘அப்படியா! எங்க இருக்கீங்க?’’
‘‘zooல இருக்கேன் டார்லிங்’’

கணவர்களை அடிப்பதில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாம் இடம்: செய்தி
# அப்பாடா! ஏதோ ரெண்டு நாட்ல நம்மள மிஞ்சி அடி வாங்குறாய்ங்களா?
- ராஜு பாய்

சீனப் பட்டாசுகளை எப்படிக் கண்டறிவது?
# லட்சுமி வெடியில, லட்சுமிக்கு மூக்கு சப்பையா இருந்தா அது சீனப் பட்டாசாம்.

@Railganesan
கணவன் தன்னுடைய சகோதரிகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் பெரும்பாலான பெண்கள், அவர்களின் சகோதரர்கள் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்வதில்லை!

காதல் என்பது கமென்ட் மாதிரி... எவ்வளவு வேணாலும் பண்ணலாம். ஆனால், கல்யாணம் என்பது லைக் மாதிரி... ஒண்ணே ஒண்ணுதான் பண்ண முடியும்; திரும்பவும் லைக் பண்ணா அன்லைக் ஆயிடும்.
- தேவா ஜித்து

ஆசிரியர்: என்கிட்ட நல்லா படிச்சவன் டாக்டராகி இருக்கான். சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராகி இருக்கான். இதுல இருந்து என்ன தெரியுது?
மாணவன்: ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கற வேலையில இருக்காங்கன்னு தெரியுது.

சின்னப் பசங்களுக்கு நல்லதைச் சொல்லிக் கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்டுல ரெண்ட எடுத்தா ஊரைக் கூட்டி கத்துதுங்க!
- நாகராஜ் எல்லப்பன்

‘‘மச்சான்... புதுசா ஓப்பன் பண்ண பிரியாணிக் கடைக்குப் போனேன்டா. அங்க உன் லவ்வர் இன்னொரு பையனோட சாப்பிட்டுக்கிட்டு இருந்தா மச்சி!’’
‘‘என்னது... புது பிரியாணி கடையா? எங்கடா மச்சி?’’
- ராமு ராம்

மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள்; ஏனெனில், கீழே இறங்கும்போதும் அவர்களைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள்.
- ஜேஎஸ்கே கோபி

‏‏@surya_ofcl
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லைன்னு ஆட்டோ பின்னாடி எழுதிருக்கான். நாலு கிலோ மீட்டரா ஓவர்டேக் பண்ண ஹார்ன் அடிக்கறேன், கண்டுக்க மாட்டேங்கறான்!

நீ பேசேன்...
ஏன் நீ பேசேன்...
ஏன், நீதான் பேசேன்..
ஏன் நீயே பேசேன்...
இப்படியாக சிறப்பாக விவாதிக்கப்பட்டு ஓபிஎஸ் தலைமையிலான அமைச்சரவை இனிதே முடிவுற்றது.
- பழனிவேல் மாணிக்கம்

உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான்... ‘‘எப்படி சுவாமி இந்தக் குளிரைத் தாக்குப் பிடித்து தனிமையில் இருக்கீங்க?’’ என்று.
‘‘அது வேறொன்றுமில்லை! துளசியும், க்ரீன் டீயும்தான் காரணம். இதில் உனக்கு ஏதாவது ஒன்று கேள்... தருகிறேன்’’ என்றார் சுவாமி.
‘‘க்ரீன் டீ குடுங்க சுவாமி...’’ என்றான் சிஷ்யன்.
சுவாமி உள்ளே குரல் கொடுத்தார்... ‘‘துளசி! ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா...’’

‘நாம லவ் பண்ற பொண்ணு நம்மள ‘மாமா’ன்னு கூப்பிட மாட்டாளான்னு ஏங்குறோம்... ஆனா அவங்க புள்ளைங்களதான் நம்மள ‘‘மாமா’’னு கூப்பிட வைக்குறாங்க!
# நிதர்சனமான உண்மை...
- ராம். கண்ணன்

@simiveera 
தமிழ்நாட்டிலும் மஞ்சள் பூசிய முகங்களில் ஒளிந்திருக்கிறார்கள், பல ஐஸ்வர்யா ராய்களும் ஷில்பா ஷெட்டிகளும்..!