தீபாவளி ஃபேஷன்



தீபாவளி கொண்டாட்டத்தில் மிஸ் ஆகாத ஒரே விஷயம், புது டிரஸ். எந்த வயதிலும் இது மாறுவதில்லை. தீபாவளி ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்காகவே புதுப்புது மாடல்களில், புதுப்புது டிசைன்களில் ஏகப்பட்ட கலெக்‌ஷன்களை ஒவ்வொரு நிறுவனத்திலும் குவித்து வைத்திருக்கிறார்கள். எந்த டிரஸ், என்ன டிசைனில், எங்கே வாங்கலாம் என பிளான் பண்ணும் எல்லோருக்குமாக, இதோ ஆல் நியூ வெரைட்டி ரவுண்ட் அப்!

* தி சென்னை சில்க்ஸ்

தி சென்னை சில்க்ஸின் தீபாவளி வரவுகள் அனைத்தும் கலர்ஃபுல் கலக்கல் ரகங்கள்!  எல்லா பட்ஜெட்டுக்கும் இங்கே அசத்தல் ரகங்கள் கிடைப்பது ஸ்பெஷல்! இளசுகளுக்காக மின்னும் கலரில் ‘சாமெல்லி நாணல்’ சேலைகள், லைட் வெயிட்டில் கோட்டா சேலைகள் என அள்ளும் அழகு வெரைட்டிகள் காத்திருக்கின்றன. கூடவே, மென்மையான லைட் வெயிட்டில் ஜொலிக்கும் ‘சாஹித்யம்’ ஸ்ெபன் சில்க் புடவைகள் பளபளக்கின்றன. இதுதவிர, தூய ஜரிகையில் மின்னும் ‘காஞ்சி கோல்டன் ஆர்கன்ஸா’ பட்டுப் புடவைகளும், காஞ்சி ரெயின்போ பட்டும் ‘ஆஹா’ ரகங்கள்! அணிபவர்களுக்கு ரிச் லுக்கைத் தருபவை. இதனுடன், தூய பட்டில் ெஜாலிக்கும் ‘த்ரீ பார்ட் புட்டா’ புடவைகள் கொள்ளை அழகு! இதன் விலை ரூ.14,995!

* போத்தீஸ்

வசுந்தரா கிளாஸிக், சனா சில்க், சைனா நெட் புடவைகள், 3டி புடவைகள், சிந்து குர்தீஸ், மஸ்த்தானி மற்றும் மஸ்த்களி சுடிதார், ரெமோ பாய்ஸ் கிட்ஸ், ஆண்களுக்கான கபாலி டிரஸ் என போத்தீஸின் தீபாவளி வரவுகள் அத்தனையும் சரவெடி! மென்மையான பட்டில் வட இந்திய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட ‘சனா சில்க்’ துள்ளலாக இருக்கிறது. வடிவமைப்பில் அவ்வளவு நேர்த்தி. இதன் விலை ரூ.1700 முதல் ரூ.6000 வரை. இதுதவிர, பெண்களின் இதயம் கவர்ந்த வசுந்தரா பட்டுப் புடவைகள் புதுவித டிசைன்களில் ராயலாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* ரதி சில்க்ஸ்

குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளின் சூப்பர் சாய்ஸாக ஜொலிக்கிறது சேலம் ‘ரதி சில்க்ஸ்’! இந்த தீபாவளிக்கு, ஜோதிகா பாவாடை, நைனிகா பாவாடை, ஷிவானி பாவாடை என வெரைட்டிகளில் பின்னியெடுக்கிறார்கள். பெரிய பார்டரில் அழகிய வேலைப்பாடுகளுடன் வந்திருக்கும் இவை, குழந்தைகளுக்கு அத்தனை அழகைத் தருகின்றன. விலை ரூ.650 முதல் ரூ.1200 வரை மட்டுமே. இவற்றுடன் இங்கு அலினா மாடல் ஃப்ராக், நக்‌ஷத்ரா, சன்ஃபிளவர் புடவைகள், பாகல்புரி பிரின்ட் பாவாடை ரகங்கள் என ஒவ்வொன்றும் கிராண்ட் லுக்!

* ராம்ராஜ்

பாக்கெட் வேஷ்டி, லினென் ஷர்ட் என ஆண்களின் பிரத்யேக உலகமாகத் திகழும் ராம்ராஜின் இந்த ஆண்டு தீபாவளி வரவு, வேட்டியின் பார்டருக்கு மேட்ச் கலரில் ஷர்ட்கள்! இதனுடன், முதல்முறையாக இளசுகளைக் குஷிப்படுத்த அகலமான ஃபேன்ஸி பார்டர் வேட்டிக்கு மேட்ச்சாக லினென் ஷர்ட்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். தரத்தில் அசத்தும் இந்த லினென் ஷர்ட் விலை ரூ.1,895 முதல். ஃபேன்ஸி பார்டரில் சிங்கிள் வேஷ்டி, டபுள் பார்டர் வேஷ்டிகள் 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை கிடைக்கின்றன. அதேபோல, முதல்முறையாக பெண்களுக்கென பிரத்யேக சேலை ரகங்களையும் தீபாவளி ஸ்பெஷலாக கொண்டு வந்துள்ளனர். கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சேலைகளும், சுடிதார்களும் செம!

* சாகம்பரி சில்க்ஸ்

காஞ்சிபுர கலை வண்ணத்தைக் காட்டும் பண்டோரா பட்டு, டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு என தீபாவளி ஸ்பெஷல் வரவில் சாகம்பரி சில்க்ஸ் அத்தனை பியூட்டி! இதுதவிர, பதினாறு வயது முதல் அனைத்து வயதுப் பெண்களும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரே மாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு என அனைத்தும் பரவச ரகம். லெனின், மணிப்பூரி, நேகமன், கலம்கரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற விதவிதமான சல்வார்கள் புதுப்புது டிசைன்களில் மனதை அள்ளுகின்றன.

* ட்வின் பேர்ட்ஸ்

இளம் பெண்களுக்கான லெக்கிங்ஸில் விதவிதமான வெரைட்டி காட்டுகிறது ட்வின் பேர்ட்ஸ்! இந்த ஆண்டு தீபாவளி புது வரவில், இரண்டு வயதுக் குழந்தைக்கு அழகான கலர்களில் லெக்கிங்ஸ் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் விலை ரூ.199லிருந்து தொடங்குகிறது. இதுதவிர எட்டு வயதிலிருந்து 14 வயது வரையான குழந்தைகளுக்கும் பல டிசைன்களில் லெக்கிங்ஸ் கலக்கல் சாய்ஸாக வந்துள்ளன. இவை, ரூ.249லிருந்து கிடைக்கின்றன. த்ரீ ஃபோர்த் லெக்கிங்ஸ், முழு லெக்கிங்ஸ் என வெரைட்டியையும், புதுமையையும் இங்கே பார்க்க முடிகிறது.

* ஃபேக்டம் வியர்ஸ்

இளம்பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற லெக்கிங்ஸில் விதவிதமான வெரைட்டியை காட்டுகிறது ‘ஃபேக்டம் வியர்ஸ்’. இந்த தீபாவளிக்காக காட்டன் லெக்கிங்ஸ், ஆங்கிள் லென்த் ஸ்ட்ரெச் லெக்கிங்ஸ், பிரீமியர் விஸ்கோஸ் லெக்கிங்ஸ் எனப் புதுப்புது  ஸ்டைலில், விதவிதமான வண்ணங்களில் புது வரவுகள் வந்துள்ளன. இவை தவிர, ஜீன்ஸ் கிளாத் ஜெக்கிங்ஸ், டெனிம் கிளாத் ஜெக்கிங்ஸ் பல பாக்கெட்டுகளுடன் வசதியான டிசைனில் ஃபேஷனாக உள்ளன. விளையாடும்பொழுது அணிவதற்கு தகுந்த காட்டன் கேப்ரி ஜெக்கிங்ஸ் பல வண்ணங்களில் அழகாய்
காட்சியளிக்கிறது.

* சுந்தரி சில்க்ஸ்

பாரம்பரிய புடவைகளுக்குப் பெயர் போன சுந்தரி சில்க்ஸின் தீபாவளி வரவு ‘மத்தாப்பு கலெக்‌ஷன்ஸ்’! குறிப்பாக, காப்பர் ஜரிகை வேலைப்பாடுகளுடன் வந்திருக்கும் பட்டுச்சேலைகள் அத்தனை ராயல்! விலை ரூ.7 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. இதுதவிர, தங்கம், வெள்ளி, காப்பர் ஜரிகைகளை மிக்ஸ் செய்து உருவான பட்டுச்சேலைகளும் அழகாய் மின்னுகின்றன. சாஃப்ட் சில்க் கலெக்‌ஷன்ஸ் மக்களைக் கவரும் இன்னொரு ரகம். இதில், சில்க் புடவைகள் ரூ.4 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இதனுடன், சுந்தரி ஸ்பெஷல் தயாரிப்பு சல்வார் செட், அனார்கலி டிரஸ், குழந்தைகளுக்கான பாவாடை, சல்வார், வேஷ்டிகள் என வெரைட்டியில் செம அப்ளாஸ்!