அட்ரினலின் வேகம்!



மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் முதல்வரால் பிரபலமாகியுள்ள மருத்துவப் பிரச்னைகள் குறித்த டீடெய்ல், செம டைமிங்! 
- கா.சீனிவாசன், வேலூர்.

‘ஃபிராக் ப்யூட்டி’ சோனமின் தாராள அழகில் ததிங்கிணத்தோம் ஆனது நெஞ்சு.
- உ.சிபிச்செல்வன், ஈரோடு.

ரஜினியோடு இணைந்த ஸ்டன்ட் சில்வாவின் பரபர பேட்டி அட்ரினலின் சுரக்க வைக்கும் 2.0 வேகம்.
- பி.கணியமாறன், புதுச்சேரி.

இசை, உறவு, பணி என வாழ்வனுபவச் சொற்களால் கைபிடித்து கூட்டிச்சென்ற  கங்கை அமரனின் டவுன்லோடு மனசு ஆல் டைம் டிலைட்.
- எஸ்.சுரபி ராமன், திருச்சி.

மூன்றாவது பெற்றோரைத் தேடிப் பிடித்து உதவி வாங்கி குழந்தை பெறுவது சரியா, தப்பா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். மரபணு சிக்கலால் தாயாக முடியாமல் தவித்த ஒரு பெண்ணுக்கு அறிவியல் கிராண்ட் கிஃப்டாக குழந்தை வரம் தந்திருக்கிறதே. அது எல்லாம் கடந்த மகிழ்ச்சி தந்தது.
- சி.யாழினிநாதன், சென்னை-4.

குணசித்தர்களாக வாழும் மனிதர்களை வாரம்தோறும் சந்திக்கவைக்கும் ‘முகங்களின் தேசம்’ தொடர் சமரசமற்ற கண்ணாடியாக மின்னுகிறது.
- ஆர்.குணாளன்ரவி, திருவண்ணாமலை.

வயிற்றின் ரொட்டீன் வேலைகளை விளக்கிய ‘செகண்ட் ஒப்பீனியன்’, நலன் காக்கும் அசத்தல் ரெமெடி.
- பா.சண்முகம், திருச்செந்தூர்.

ஆண்களுக்கு சோஷியலாக ரிஜெக்‌ஷன் கற்கக் கூறும் ராப் சிங்கர் ஷோஃபியாவின் கருத்துக்கு நோ அப்ஜெக்‌ஷன்.
- ஜி.கார்த்திகா, கோவை.

குலுக்குரொட்டி, முந்திரிக்கொத்து என பக்குவ பாரம்பரிய உணவுகள் வாய்க்குள் உமிழ்நீர் சுனாமியைத் தூண்டின.
- மு.அய்யாசாமி, தர்மபுரி.

கீழடி வரலாற்றின் மேல் ஆர்வமில்லை, ஆனால் அரசினால் பாதுகாக்கக்கூட முடியாதா என்ன?
மூதாதைகளின் வாழ்வு தூக்கியெறியப்படும் குப்பையானது, வேதனை.
- டி.துரைசாமி, விழுப்புரம்.

ஹாச்சி நாயின் பனித்துளி அன்பைக் கூறி, விலங்குகளின் நேசத்தை புடமிட்ட ‘உறவெனும் திரைக்கதை’ ரீவைண்டிங் நாஸ்டால்ஜியா.
- இ.சம்பந்தன்காளி, சென்னை-78.

சினிமா விமர்சனங்கள் அனைத்தும் தூள். நவீன யூத்களுக்கு ராங் ரூட் காட்டிய ‘ரெமோ’வை நச்செனக் குட்டி காது முறுக்கிய ‘குங்கும’த்தின் அக்கறைக்கு எங்கள் ஷொட்டு.
- ஆர்.ஜானகி கிருஷ்ணா, சென்னை-33.

தீபாவளிக்கான ஸ்பெஷல் நகைகள் ட்ரெண்டி அழகில் சொக்க வைத்தன.
- ச.வித்யா, பழனி.