குங்குமம் டாக்கீஸ்



* நடிக்க வருவதற்கு முன்பே விஸ்காம், டைரக்‌ஷன் கோர்ஸ் எனப் படித்துவிட்டு வந்தவர் ஷாம்லி. இப்போது நடிப்பு தொடர்பான கோர்ஸ் ஒன்றை அமெரிக்காவில் படிக்கப் போகிறார். ‘‘ஒன்றரை மாதத்தில் முடிந்துவிடும் சின்ன கோர்ஸ்தான் அது. அதை முடித்த பின்பே மீண்டும் தமிழில் படங்கள் ஒப்புக்கொள்வேன்’’ என்கிறார் ஷாம்லி.

* ‘‘சல்மான்கானுடன் நடித்த ‘சுல்தான்’ வெற்றிக்கு கிடைத்த பாராட்டுகள் என்னை வியக்க வைக்குது’’ என சொல்லும் அனுஷ்கா சர்மா, ‘‘ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அந்தப் படத்தில் நான் நடிப்பதில்லை. அதுதான் என் பாலிஸி’’ என்கிறார் கறாராக.

* ‘ரெமோ’ படம் தமிழகத்தில் முதல் காட்சி வெளியான பிறகே வெளிநாடுகளில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இது இதற்கும் முன்னர் யாரும் எடுக்காத புது முடிவு.

* அருண் சிதம்பரம் இயக்கிய ‘கனவு வாரியம்’ படம் இதுவரை ஆறு சர்வதேச விருதுகளை பெற்றுவிட்டது. மேலும் வடகொரியா, இத்தாலி, கென்யாவில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வாகியுள்ளது. திரைக்கு வரும்முன் இவ்வளவு விருது
களைப் பெற்ற தமிழ்ப் படம் இதுவே.

* ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப் போகிறார்கள்.

* இந்தி சினிமா கை கொடுக்காதது குறித்து மனம் திறந்திருக்கிறார் தமன்னா. ‘‘இந்தியில் என்னோட படங்கள் சரியா போகாமல் இருந்தது எனக்கு ஹோம் சிக் மாதிரி ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் இந்தியில் நடிக்கப் போறேன். ரோஹித் ஷெட்டியோட படம் அது’’ என ஃபீல் ஆகியிருக்கிறார்.

* ‘‘வாழ்க்கை எதிர்பாராத திருப்புமுனைகளால் நிறைந்தது. நம்முடைய அறிவுக்கு எட்டாமல் அது நிகழ்ந்துவிடும். அதனால் நம்ம மனசு ஸ்ட்ராங்கா இருக்கணும்’’ என தத்துவம் உதிர்த்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா.

* ‘காஸ்மோரா’, ‘சங்கிலிபுங்கிலி கதவ திற’, ‘மாவீரன் கிட்டு’ என தமிழில் மூன்று படங்களில் ஸ்ரீதிவ்யா பிஸி.

* ‘2.0’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு சுமார் ஒரு வருடத்திற்கு கதை எதையும் கேட்காமல் முழு ஓய்வில் இருக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக்கூட தவிர்த்துவிடுவாராம்.

* இப்போது கேரளாவில் வசித்து வரும் அமலாபால், கன்னடத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சுதீப்புடன் ‘ஹெப்புலி’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ‘வி.ஐ.பி’ ரீமேக்கில் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் தனுஷின் ‘வட சென்னை’யில் அமலாபால்தான் ஹீரோயின்.

* அடுத்து சூர்யா-பா.ரஞ்சித் படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது ரஞ்சித்துக்கு பதிலாக ‘கொம்பன்’ முத்தையாவுக்கு தேதிகளை மாற்றிக் கொடுத்துவிட்டார் சூர்யா.

* இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி, விஷால், தனுஷ் என மூன்று ஹீரோக்களும் மோதுகிறார்கள். இவர்களோடு விஜய்சேதுபதி படமும் வரலாம்.

* ‘வாகா’ ஹீரோயின் ரன்யா ராவுக்கு கோலிவுட் மிகவும் பிடித்துவிட்டது. மும்பையில் வசித்து வரும் ரன்யா, தமிழில் அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். ‘‘என்னோட மும்பை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் தமிழ்ல நடிக்கறதைப் பத்தி சொன்னேன். அவங்களுக்கு ஆச்சரியமாகிடுச்சு’’ என்கிறார் ரன்யா.

* சிரஞ்சீவி வெகுநாட்களுக்குப் பிறகு தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.  அதில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். அதற்கு சம்பளம் அதிகமில்லை ஜென்டில்மேன்... 1 கோடி ரூபாய்தான்.

* இந்த தீபாவளிக்கு அஜித், விஜய் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட இரண்டு படக் குழுக்களும் திட்டமிட்டு இருக்கின்றன. டீஸரும் விரைவில்  வெளியாக இருப்பதால் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

* விஜய்சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ யில் நடித்து வரும் ரித்திகாசிங், ‘‘நார்மல் மாடர்ன் பொண்ணு கேரக்டர்ல நடிக்கிறேன். தமிழ்ல பேச கொஞ்சம் ட்ரை பண்ணினேன். இன்னும் சரியா வரல’’ என்கிறார் வெட்கத்துடன்.