கமென்ட் கோயிந்து



செக்ஸ் வைத்துக்கொள்ளாவிடில் நீண்ட நாள் வாழலாம்: 120 வயது முதியவர் அறிவுரை
தாத்தா, நீங்க 120
மார்க் எடுத்தும் ஃபெயில். ஆனா நாங்க 25 மார்க்லயே பாஸ். பாஸ் பெருசா? ஃபெயில் பெருசா?

ஜல்லிக்கட்டை விட மத்திய அரசிற்கு முக்கிய பணி இருக்கிறது: மத்திய அமைச்சர் மேனகா
ஏம்மா! ஃபாரீன் டூர் போறதெல்லாம் ஒரு வேலையாம்மா... என்னம்மா, இப்புடி பண்றீங்களேம்மா!

வெளிநாட்டுப் பயணிகள் வருவதில் சென்னை ஏர்போர்ட் மூன்றாவது இடம்: செய்தி
ஏர்போர்ட் மேற்கூரை இடிந்து விழுவதில் முதல் இடம்ங்குறதை சொல்ல மறந்துட்டீங்க ஆபீசர்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து  விட முடியாது: கர்நாடக அரசு திட்டவட்டம்
இந்த வாட்டி செம்பரம்பாக்கம் ஏரியை திருப்பி கர்நாடகா பக்கம் வுட்டாதான் சரியா வரும் போல!

இந்திய ஒலிம்பிக் குழுவுக்கு தலைமை மருத்துவ அதிகாரியாக சென்றவர் போலி மருத்துவர்: செய்தி
போட்டியில கலந்துக்கிட்டதுல கூட பாதிப் பேர் போலி வீரர்களோன்னு டவுட்டாவே இருக்கு!

கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கு மீன்கள் ஏற்றுமதி: அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணே! அப்டியே அதுல கொஞ்ச மீனை தமிழ்நாட்டுக்கும் ஏற்றுமதி பண்ணுங்கண்ணே, எங்க ஊருல மீனு அநியாய விலையா இருக்கு!