வலைப்பேச்சு



@sss_offl  
சின்ன வயசுல என்கூட விளையாடின பையன், என்னைவிட சின்ன பையன், அவனுக்கு கல்யாணம்னு பத்திரிகை குடுக்க வந்தாங்க. நான் ‘சோட்டா பீம்’ பாத்துட்டு இருக்கேன்!

@kalasal
ஒரு பெண் எப்போது பேசத் துவங்குவாள் என்பதில் துவங்கி, எப்போது பேச்சை நிறுத்துவாள் என்பதில் முடிகிறது வாழ்க்கை...

@Kannan_Twitz 
குடிச்சிட்டு போதையோட அளவைத் தெரிஞ்சுக்க ஊதிப் பாத்தது போய், செல்ஃபியை ஷேக் ஆகாம எடுத்து பாக்குறதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்!

@aruntwitz 
குப்பை போடுவதும், தொப்பை போடுவதுமே நாட்டின் தலையாய பிரச்னை
களாக இருக்கின்றன.

@Sweetie_Girl__ 
பச்சோந்தி தற்கொலை செய்யும் முன் கடிதத்தில் இப்படி எழுதியது, ‘நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம் நான் தோல்வி
யடைந்தேன்!’

ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்...
நீதிபதி: எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?
அவன்: ஒரே இருட்டு... நான் 80 கிலோமீட்டர் வேகத்தில் வந்தேன். திடீர்னு லாரி பிரேக் பிடிக்கவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டியை நிறுத்த முடியல...
நீதிபதி: அப்புறம்?
அவன்: எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க ஐயா! நான் என்ன செய்திருக்கணும்?
நீதிபதி: கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.
அவன்: அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்...
நீதிபதி: அப்படின்னா வெறும் 2 பேர்தானே செத்திருக்கணும். எப்படி 50 பேர் செத்தாங்க..?
அவன்: அப்படிக் கேளுங்க! நான் அந்த 2 பேர் மேல மோதினபோது ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுலதான் இப்படி ஆயிடுச்சு...

@palanikannan04  
சொந்தக்காரன், பக்கத்து வீட்டாரிடம் ஒதுங்கி வாழ்ந்து விட்டு, கடைசி காலத்துல ‘‘என்கிட்ட பேசறதுக்கு யாருமே இல்ல’’னு பொலம்பறவங்கதான் நகரத்துவாசிகள்.

@Nunmathiyon 
கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் கடைசி ஆசையெல்லாம், ‘எப்படியாவது இது படிக்கப்பட்டுவிட வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும்.

@chevazhagan1 
கொஞ்சமாவது நல்லவனாய் மாற முயற்சி செய்யும்போதெல்லாம்... ‘‘நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே’’ என்கிறது வாழ்க்கை!

‏@mujib989898 
முப்பது நாள் உழைத்து வாங்கும் சம்பளத்துக்கு, மூன்று நிமிடத்தில் செலவுக் கணக்கு சொல்லி விடுகிறார்கள் வீட்டு அம்மணிகள்...

@natty_nataraj 
‘செவாலியே’ இரண்டாவது முறையாக விருது பெற்றது!

@DineshRainaa 
ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவுனு சோதித்துப் பார்க்கவே படைக்கப்பட்டவள்தான், அவனோட காதலி.

@arattaigirl  
‘ஒரு எழவுக்கு போயிட்டு வந்தேன்’ என்பதுதான் நம் பற்றிய கடைசி உரையாடலாய் இருக்கும்!

@vigneshvicky341 
அந்தக் கடைசி ஷாட்ட லெஃப்ட்ல திருப்பி லைட்டா ரைட்ல தட்டிருந்தா தங்கம் கெடச்சிருக்கும்னு கோளாறு சொல்லலாம்னு பாத்தா, அந்த வௌாட்டு பேரு மறந்து போச்சு!

@pshiva475 
எல்லா சந்துலயும் பசங்க மூணு குச்சிய நட்டு கிரிக்கெட்  விளையாடினாங்க. இனிமேல் ரெண்டு குச்சிய நட்டு, நெட்ட கட்டி ஆர்வமா  பேட்மின்டன் விளையாடுவாங்க!

@jaga_twits05  
உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்க... அந்த 7 பேரையும் ஒண்ணா நிக்க வச்சு செல்ஃபி எடுப்பேன், நான் கடவுளானால்!

@gokula15sai 
எவனாவது கவலைப்பட்டானா? மேட்டூர் 120 அடி கொள்ளளவில் 54 அடிதான் தண்ணீர் இருக்கு! எப்ப நிரம்பி
எப்ப திறப்பாங்களோ? குறுவை? சம்பா?

மதுரையில் ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் சென்ற கன்டெய்னர் லாரிகள் பழுது: செய்தி
# அதுல ஒரு ரெண்டு கட்டை எடுத்து புது லாரி வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே! இதெல்லாம் நியூஸ்னு போட்டுட்டு இருக்காங்கே...
- திப்பு சுல்தான் கே

கமல் பேசுனது நமக்கு புரிஞ்சதோ இல்லையோ... பிரான்ஸ்காரனுக்கு புரிஞ்சிருக்கு!
- பூபதி முருகேஷ்

விளையாட்டின்மீது மக்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் கவனத்தைப் பயன்படுத்தி நம்மூர் தனியார் பள்ளியினர் ‘அதைச் சொல்லித் தருகிறோம், இதற்குப் பயிற்சி தருகிறோம்’ என்று கூடுதலாக பத்தாயிரம் பிடுங்குவார்களே என்பதுதான் என் கவலையாக இருக்கிறது!
- கவிஞர் மகுடேசுவரன்

எவ்வளவு பெரிய விமானம் என்று அதிசயிக்கும் அதே நேரத்தில், மாயமாகும் விமானங்கள் பற்றி நினைத்தால் ‘கடலில் கரைத்த பெருங்காயம்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது!
- சுந்தரம் சின்னுசாமி

ஆசையை விட்டொழிக்க புத்தனா எல்லாம் ஆக வேண்டாம்... ஏழையா இருந்தாலே போதும்!
- சஃபா

‘‘சீச்சீ... அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா’’ என்றபிறகே சிலபல காதல்கள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன!
- ப்ரீதா

மனைவியை எம்.எல்.ஏ ஆக்குவதற்காக வீடு புகுந்து கொள்ளையடித்ததாக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கைது - செய்தி
# எம்.எல்.ஏ.வான பிறகுதானே கொள்ளையடிப்பீங்க! ஆகறதுக்கேவா... இது அநியாயமில்லையா?
- கவிதா பாரதி

பார்வையற்றவன் 1 ரூபா 2 ரூபா காயின்களை தடுமாறாம கண்டுபிடிச்சிடுறான்... ஆனா பார்வையுள்ள நாம்தான் அது 1 ரூபாயா 2 ரூபாயான்னு தடவிக்கிட்டு இருக்கிறோம்...
- பொம்மையா முருகன்

இப்ப தெரியுதா, ஆண்கள் தங்கம், வெள்ளி, பித்தளைன்னு எதுக்கும் ஆசைப்படமாட்டோம்னு!
- பிளாக் கனி

காலைல நியூஸ் சொல்றாங்க, ‘சிந்து’ன்னு டைப் செஞ்சாலே சிந்துவோட ஜாதிதான்  கூகுள்ல வருதாம்... இப்போ புள்ளையோட ஜாதி, மதம், குலம், கோத்திரம்  இதெல்லாம் தெரிஞ்சுட்டு அவிங்க வீட்டு பையனுக்கு கட்டி வெக்கப் போறாங்களா  இந்த ஸ்டுப்பிட்ஸ்?
- விமலா சஞ்சீவ்குமார்

சிந்துவுக்கு ஆடச் சொல்லிக் குடுத்ததே எங்க அம்மாதான்னு எவனாவது கெளப்பிவிடப் போறத நெனச்சாதான்...
- சீவரம் கார்த்திக்

பசங்க எல்லாம் வீடியோ கேம்ஸ் விளையாடியே ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கலாம்னு ட்ரை பண்ணிட்டு இருக்காங்க!
- ஷர்மிளா ராஜசேகர்

சந்தோஷங்களின் அளவு நாம் அதைக் கொண்டாடு
வதில்தான் உள்ளடங்கியுள்ளது!
- தமிழ் அரசி

சாக்‌ஷி மாலிக் - கோச் குல்தீப்
தீபா கர்மாகர் - கோச் பிஸ்வேஷ்வர்
சிந்து - கோச் கோபிசந்த்
இந்திய ஆண்கள் தைரியமாகச் சொல்லலாம், ‘ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான்!’

புருஷன் பொண்டாட்டி பிரச்னைகளை ஒரே அறையில் பேசி தீர்த்துக்கோங்கன்னு பெரியவங்க சொன்னத சில பொண்டாட்டிங்க தப்பா புரிஞ்சிக்கிறாங்க...
‪#‎ ஒரே அறை‬!
 - சரவ் யுஆர்எஸ்

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாட்டு மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி... ‘சூடு செய்யும்போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது?’
சீனா: வாய்ப்பே இல்லை! இது போன்ற கேள்விக்கு எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.
பிரிட்டன்: எந்த இணையதளத்திலும் பதில் இல்லை.
பிரான்ஸ்: அர்த்தமற்ற கேள்வி.
அமெரிக்கா: பதில் தெரியாது.
இந்தியா: லூசு பசங்களா! இதுகூடவா தெரியாது? ‘இட்லி’டா!

‘என் புருஷன் நம்ம பிரதமர் மோடி மாதிரி...’’
‘‘பெரிய அரசியல்வாதியா?’’
‘‘அதெல்லாம் இல்ல. எப்பவும் ஊர் சுத்திக்கிட்டே இருப்பார்!’’

மனைவி கத்த ஆரம்பிச்சதும் கதவு, ஜன்னலை மூடுறவன் மனுஷன்; டி.வி வால்யூமை கூட்டுறவன் பெரிய மனுஷன்; சட்டையை போட்டுக்கிட்டு வெளில போறவன் ஞானி; காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்து இருக்கறவன்தான் ‘வாழும் கடவுள்’!

மனைவி வழக்கத்தைவிட தாமதமாக வீட்டிற்கு வந்தாள். நேராக தனது படுக்கை அறைக்குச் சென்றாள். அங்கே போர்வைக்கு வெளியே  4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும் அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள். அடித்துவிட்டு தோட்டத்துப் பக்கம் போனாள். அங்கே காபி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். மனைவியைக் கண்டதும், ‘‘உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க. நம்ம படுக்கை அறையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்’’ என்றார்.

இந்தியாவில் காய்கறி வாங்குவதில் இருந்து ஒலிம்பிக் மெடல் வாங்குவது வரை எல்லாவற்றையும் பெண்களே செய்ய வேண்டி இருக்கிறது!