வலைப்பேச்சு



‏@ameerfaj 
‘‘வேலைக்குப் போனா சரியாயிடும், கல்யாணம் பண்ணா சரியாயிடும், குழந்தை பொறந்தா சரியாயிடும்’’னு ஒருத்தன் சொல்வான் பாரு... முதல்ல அவனை மிதிச்சா எல்லாம் சரியாயிடும்!



@i_am_v_jey 
வேம்பின் சக்தியுள்ள சோப்பு, எலுமிச்சையின் நலனுள்ள பேஸ்ட்டை கடையில வாங்குற மாதிரி அசல் ஆக்ஸிஜனையும் வாங்கிக்கலாம்னுதான் மரங்களை வெட்டறாங்க போல...

@skpkaruna 
உலகில் வேறெங்காவது, அந்த
மாநில மொழியில் வாதாடியதால் வழக்கு தள்ளுபடி ஆகியிருக்குமா? நீதி தேவதை செவிடாகவும் போகக் கடவது!

@Kozhiyaar 
வீட்டுக் கடலில் ‘புயல் அறிவிப்பு சின்னங்கள்’ குழந்தைகள்தான்! ‘‘அப்பா... அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க!’’


‏@pshiva475 
கண்ணாடிக் கடையின் வாசகம்: ‘தயவுசெய்து பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரவும்; பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை!’

@kumarfaculty 
முதலில் சைக்கிள் ஓட்டி, பிறகு இரண்டு, நான்கு சக்கர வாகனம் ஓட்டியதால் வந்த உடம்பைக் குறைக்க மீண்டும் சைக்கிள் ஓட்டுவதும் ரீசைக்கிள்தான்!

@kanagu_v 
சிறந்த மருத்துவரான பாட்டியை முதியவர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு, மகனை மருத்துவத்திற்குப் படிக்க வைக்கும் தலைமுறை நம்முடையது!

@aruntwitz
கடவுளுக்குப் பயந்து தப்பு செய்த காலம் மாறிப் போய், கடவுளே பயப்படும் அளவுக்கு தப்பு செய்யும் மனிதர்கள் பெருகி விட்டனர்.

@Ramyatwip 
சிறையில் 30 போலீஸார் பூட்ஸ் காலால் தாக்கினர் - சுற்றுச் சூழல் போராளி பியூஸ் மனுஷ்
# ரௌடியாக இருந்திருந்தால் 30 பேர் கால் பிடித்திருப்பர்!

@star_jeyabal
இந்தியாவுல ரெண்டுவிதமான டிரைவிங் லைசன்ஸ்கள் இருக்கு... ஒண்ணு, ஆர்.டி.ஓ ஆபீஸ்ல கொடுக்கறது; இன்னொண்ணு ரிசர்வ் பேங்க் அடிக்கிறது!

@BoopatyMurugesh 
தாத்தா, பாட்டியை எல்லாம் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டு, ‘‘நம்ம வீட்ல யாருக்கு வயசு அதிகம்’’னா ‘‘வேப்ப மரத்துக்கு’’ன்னு சொல்றானுங்க விளம்பரங்களில்...

விடுதலைக்கு வாய்ப்பில்லை... சிறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம்!
- ராஜா சந்திரசேகர்

இதுவரை நிறைவேறாத ஆசைகளைவிட, நிறைவேறியும் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஆசைகள்தான் வாழ்க்கையில் நம்மை வழி நடத்துகின்றன...
- சுஹைனா மஜ்ஹர்

எளிமையான வாழ்க்கையை போதிப்பவர்கள் யாரும் எளிமையான வாழ்க்கையை வாழ்வதில்லை...
‪#‎ ஆன்மீகவாதிகள்,
மதபோதகர்கள்‬
- வசந்த மலர்

லேண்ட்லைன் போனின் ‘‘ஹலோ... எப்படி இருக்கீங்க?’’ எனும் நலன் விசாரிப்பு போய், ‘‘ஹலோ! இப்ப எங்கே இருக்கீங்க?’’ எனும் புலன் விசாரிப்புதான் இந்த செல்போனிலே...
- சண்முக வடிவு

‘சுற்றுச்சூழல் ஆர்வலர்’ என களமிறங்கிய எவருக்கும் நம் அரசு தந்த விருது... கைதும், ‘ஏகாதிபத்திய கைக்கூலி’ பட்டமும்!
- எழிலன் எம்

தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம் - வைகோ
# ‘கபாலி’ டயலாக் நம்ம அண்ணாத்தைக்குதான் பொருந்தும்
- தேவி கமல்

சல்மான் கானுக்கு ஒவ்வொண்ணா இப்படி ரிலீஸ் கொடுக்கிறதுக்கு பதிலா அவருக்கு லைஃப் டைமுக்கு மொத்த பேக்கேஜா ரிலீஸ் கொடுக்க சட்டத்தில் ஏதாவது இடம் இருக்கா யுவர் ஆனர்?
- மனுஷ்ய புத்திரன்

ஆன்டி வைரஸ்க்கு தமிழ்ல ‘அத்தைக்கிருமி’தானே?
- சுரேஷ்குமார் மடுரசி எம்

நெரிசலான பேருந்தில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகும் பயணி, மூன்று ரூபாயை கைகள் மாற்றிக் கொடுத்து, சீட்டுப் பெறும் அவசரத்தில் அழகாக வெளிப்படுகிறது நேர்மை!
- யுவராஜன்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் கிடையாதுன்னு சொல்லிருக்க ஓ.பி.எஸ்.க்கு சில கேள்விகள்...
வேலைக்குப் போறதுன்னா கவர்ன்மென்ட் வேலையா, பிரைவேட் வேலையா?
வேலைக்குப் போகலைன்னு சொல்லிட்டு வண்டி வாங்கினா என்ன பண்ணுவீங்க?
வண்டி வாங்கிட்டு வேலைக்குப் போனா அப்போ வண்டிய பாதியில பிடுங்கிக்குவீங்களா?
படிக்கும்போது மானிய வண்டி தருவீங்களா, மாட்டீங்களா?
அப்படி வாங்கிட்டா அப்புறம் வேலைக்குப் போலாமா, கூடாதா?
அப்புறம் யாருக்குத்தான் அந்த வண்டிய குடுப்பீங்க? எப்போ குடுப்பீங்க???
- ஷர்மிளா ராஜசேகர்

‘‘நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்... ஏன்டா எடுக்கல?’’
‘‘நான் வீட்டுக்குப் போன உடனே ஒய்ஃப் சைலன்ட் மோட்ல போட்ருவா!’’
‘‘உன் மொபைலை உன் ஒய்ஃப் ஏன் சைலன்ட் மோட்ல போடணும்?’’
‘‘மொபைல இல்ல! என்னையவே சைலன்ட் மோட்லதான் போடுவா(ங்க)..!’’
- அமுதன் சாந்தி

கரூர்ல 1600 கோடி கன்டெய்னர் லாரி பத்தி நியூஸ் பார்த்ததும் வீட்டம்மா ‘‘நம்ம ரோட்லயும் அதே மாதிரி ஒரு கன்டெய்னர் லாரி போச்சுங்க’’ என்றார். ரோட்ல எந்த கன்டெய்னர் லாரிய பார்த்தாலும் ‘‘இதிலயும் பணம்தான் இருக்குமா?’’ன்னு கேட்டு ஒரே நச்சரிப்பு. நானும் எந்த கன்டெய்னர் லாரியைப் பார்த்தாலும், ஏதாவது ஓட்டையில் ஒழுகி நாலு கட்டு விழாதான்னு தேட ஆரம்பிச்சுட்டேன்...
- சுந்தரம் சின்னுசாமி

கபாலி இணையத்தில் வெளியானது எப்படி - அரசிடம் நீதிமன்றம் கேள்வி
அது இருக்கட்டும்... சல்மான் கான் வெளியானது எப்படி? - நீதிமன்றத்திடம் பொதுமக்கள் கேள்வி
- பூபதி முருகேஷ்

‘‘நேத்து சாயங்காலம் போன் பண்ணேன்... ஏன்டா எடுக்கல?’’
‘‘நான் வீட்டுக்குப் போன உடனே ஒய்ஃப் சைலன்ட் மோட்ல போட்ருவா!’’
‘‘உன் மொபைலை உன் ஒய்ஃப் ஏன் சைலன்ட் மோட்ல போடணும்?’’
‘‘மொபைல இல்ல! என்னையவே சைலன்ட் மோட்லதான் போடுவா(ங்க)..!’’
- அமுதன் சாந்தி

கட்டிக்க எவனும் பொண்ணு தராம கஷ்டப்பட்டு பொண்ணு தேடுனா அவன் காவாலி... கட்டிக்கிட்ட பொண்டாட்டியவே கஷ்டப்பட்டு தேடுனா அவன் கபாலி!

ஓட்டலுக்குள் மூன்று பேர் நுழைந்தனர். சர்வரிடம் அதில் ஒருவர், ‘‘ஸ்ட்ராங் டீ’’ என்றார். இரண்டாமவர், ‘‘லைட் டீ’’ என்றார். மூன்றாமவர் ‘‘கிளாஸை நன்றாகக் கழுவிவிட்டு ஒரு டீ’’ என்றார். சிறிது நேரத்தில் மூன்று டீ கிளாஸ்களுடன் வந்த சர்வர், ‘‘யாருங்க நன்றாகக் கழுவுன கிளாசில் டீ கேட்டது? இந்தாங்க!’’ என்றார்.

இனி புதுப்பட சி.டி. விக்கக் கூடாதுனு லத்தியோட வந்து, ஏட்டய்யா சொன்னவுடனே கைய கட்டிக்கிட்டு குனிஞ்சு நின்னுக்கிட்டு ‘சரிங்க எஜமான்’னு சொல்லிட்டு கடைய சாத்திட்டுப் போற ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

1. ஃபேஷனின் உச்சகட்டம்: ஜிப் வைத்த லுங்கி
2. சோம்பேறித்தனத்தின் உச்சகட்டம்: காலை நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது
3. ஆர்வக்கோளாறின் உச்சகட்டம்: வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது
4. நேர்மையின் உச்சகட்டம்: பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது
5. வறட்சியின் உச்சகட்டம்: பசு பால் பவுடராகக் கொடுப்பது
6. நம்பிக்கையின் உச்சகட்டம்: 99 வயது ஆள், லைஃப்டைம் ரீசார்ஜ் செய்வது
7. முட்டாள்தனத்தின் உச்சகட்டம்: கண்ணாடிக் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது
8. தற்கொலை முயற்சியின் உச்சகட்டம்: ஒரு குள்ளன் ரோட்டில் நடைபாதையில் குதிப்பது
9. வேலைவெட்டி இல்லாததின் உச்சகட்டம்: மேலே இருந்து கீழ வரை இந்த மெஸேஜை பொறுமையா படிக்கறது... எப்பூடி... கடைசியில வச்சமில்ல ஆப்பு!

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்...

‘‘என்னைத் தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க. அவர் நிச்சயமா என் நண்பராதான் இருப்பார்!’’ அமிதாப் எரிச்சலுடன் கேட்டார், ‘‘டாம் க்ரூஸை தெரியுமா?’’ ‘‘ஓ! அவன் என் பழைய நண்பன். வாங்க, போய்ப் பார்க்கலாம்!’’ இருவரும் ஹாலிவுட் சென்று, ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத் தட்டினர். டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார், ‘‘தலைவா! வாங்க... வாங்க... நீங்க வந்ததுல மிக்க மகிழ்ச்சி. நீங்களும் உங்க நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்!”

அமிதாப் கொஞ்சம் அசந்து போனார். ஆனாலும் கேட்டார்... ‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?’’ ரஜினி சொன்னார் ‘‘நன்றாகத் தெரியுமே!’’ இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். ரஜினியைப் பார்த்த ஒபாமா, ‘‘என்ன ஒரு சர்ப்ரைஸ்! ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வாங்க, காபி சாப்பிடுவோம். கூட்டம் கிடக்கட்டும்!’’அமிதாப் கொஞ்சம் ஆடிப் போனார். இருந்தும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் கேட்டார்... ‘‘போப் ஆண்டவரைத் தெரியுமா?’’

ரஜினி சொன்னார்... ‘‘நாங்க ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஸ்!’’ இருவரும் வாடிகன் சென்றனர். போப்பை பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. ரஜினி அமிதாப்பிடம் சொன்னார், ‘‘இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது. நான் காவலர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன்.. பாருங்கள்!’’

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி. திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. ‘‘என்ன ஆச்சு?’’ என ரஜினி கேட்டார். அமிதாப் சொன்னார்... ‘‘நீங்கள் போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்னையும் இல்லை. நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின், ‘பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?’ என அருகில் நின்ற இத்தாலியர் கேட்டார். அப்போதுதான் நெஞ்சு வலி வந்தது.