மினுமினுப்பு தூக்கல்!



சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை விசேஷம். இப்போ ‘குங்குமம்’ கிடைப்பதால் ரொம்ப
விசேஷம்.
- கே.பூபதி, திருப்பூர்.



எங்களின் வீக் எண்ட் சோர்வை விரட்ட வெள்ளிக்கிழமையே வெளியாகும் ‘குங்குமம்’ இதழுக்கு ஒரு வெல்கம் பொக்கே!
- ஜி.ரவிகுமார், புதுச்சேரி.

கொலை, கொள்ளைகளை அடுத்து பரவலாகும் கஞ்சா சாக்லெட் பேராபத்து... அரசின் செயல்பாட்டுக்கு கரும்புள்ளிகள் வரிசை கட்டுகின்றனவே!
- பி.வி.விலாசினி சேகரன், சென்னை-4.

சென்னையின் இரவு முகத்தைக் காட்டும் ‘மாநகரம்’ ஒளிர்கிறதோ இல்லையோ... ரெஜினாவின் ஸ்டில்களில் மினுமினுப்பு தூக்கல்!
- ஜி.மாணிக்கம், திருவள்ளூர்.

இடி, மின்னலில் இப்படி எல்லாம் ஆபத்து இருக்கா? இனி, சேஃபான இடத்தில் உட்கார்ந்து ‘குங்குமம்’ படிப்போம் சார்!
- எம்.பி.திருக்கண்ணன், வேலூர்.

 புலி வேஷத்தில் ராஜகுமாரனா? ‘கடுகு’, பத்து எண்றதுக்குள்ளேயே அதிரடியாக பொரிய ஆரம்பிச்சிருச்சே! மில்டனின் நம்பிக்கை வெல்லட்டும்.
- கல்.சீனிவாசன், திருவண்ணாமலை.

இத்தனை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியரா பெருமாள் முருகன்! ஆச்சரியப்பட வைக்கிறது ‘எங்கள் ஐயா’ நூல்.
- எஸ்.பி.நல்லசாமி, திருப்பூர்.

குழம்புக்கு ஒரு கடை என ‘தமிழன் வீட்டுக்குழம்பு’ செம ஹிட் ஐடியா. படிக்கும்போதே நாக்கு ஊறுதே!
- ஏ.எல்.சிவகண்ணு, ஈரோடு.

நேரடியாகப் பார்க்கும் டாக்டரையே நம்ப முடியாத இந்தக் காலத்தில் இன்டர்நெட் மருத்துவம் இன்னல் தீர்க்காது என்பதை விளக்கிய கட்டுரை சூப்பர்! வாட்ஸ்அப் ஃபார்வேர்டு தகவல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை ஊட்டியதற்கு நன்றி. 
- டி.வேணி, சென்னை-33 .

முகமறியாத ரகசிய சிநேகிதங்களின் அருமையை காதோரமாய் பேசிச் சென்ற உறவெனும் திரைக்கதை, க்ளாஸிக் டச்!
- எம்.தனபால், திண்டுக்கல்.

குங்குமம் டாக்கீஸில் ஹூமா குரேஷி, மஞ்சிமா, லாவண்யா என கலக்கல் பெண்களின் கவர்ந்திழுக்கும் ஸ்டில்கள் ஸ்பெஷல் அழகு!
- எல்.ராஜிவ், மதுரை.

செக்கடி சீனிவாசனின் செக்கு எண்ணெய்க்கு நாங்கள் போடுகிறோம் நூறு லைக்ஸ்!
- ராஜன், துறையூர்.

அடுத்த விஜய் படத்தில் லூட்டி அடிக்கப் போகும் க்யூட்டி மோனிகா குட்டியின் லைம்லைட் பிரவேசம் அட்டகாசம்!
- கி.பார்த்திபன், சென்னை-5.