சன்னி லியோனுக்கு மார்க்கெட் இல்லையா?



கடந்த ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் சன்னி லியோன். ஆனாலும் தொடர்ந்து நான்கு படங்கள் ஃப்ளாப். கவலையில் கட்டுடல் மேலும் இளைக்க... கவர்ச்சி கூடியிருக்கிறார் சன்னி லியோன். இத்தனைக்கும் எல்லாமே இந்தக் கவர்ச்சிக் கடலை முன்னிறுத்திய கதைகள். ஏராள தாராளமாக செக்ஸைக் கொட்டிக் கொடுத்த படங்கள்.

‘‘படம் ஓட கவர்ச்சி மட்டும் போதாது என்பதை மக்கள் நிரூபித்துவிட்டார்கள்’’ என விமர்சகர்கள் இந்தத் தோல்வியைக் கொண்டாடுகிறார்கள். ‘‘மக்களுக்கு சன்னி லியோனின் கவர்ச்சி போரடித்துவிட்டதா?’’ எனக் கேட்டால் கொதித்து, குதிக்கிறார் சன்னி. ‘‘இந்தி சினிமாவில் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைத்து நானேதான் கதைத் தேர்வு செய்கிறேன். அது சில சமயம் தப்பாய்ப் போனால், என்ன செய்வது? நடிப்பதை நிறுத்தி விடவா முடியும்?’’ என சீறுகிறார் அழகாக! இதுதான் சமயம் தமிழ் டைரக்டர்ஸ்... அள்ளிட்டு வாங்க!

- ரெமோ