jokes



‘‘தலைவரோட சுயசரிதையில அவரோட குடும்ப வாழ்க்கை பற்றி எதுவும்
இல்லையே... ஏன்?’’
‘‘அதை எல்லாம் அவரோட சம்சாரம் சென்சார்
பண்ணிட்டாங்க..!’’



‘‘எதுக்காக தலைவர் அடிக்கடி வக்கீலை மாத்தறார்..?’’
‘‘தலைவர் சம்பாதிச்சு இருக்கற சொத்துக்
கணக்கை நினைச்சு வாதாட
வர்ற வக்கீல்கள் ரொம்ப
மலைக்கிறாங்களே!’’

‘‘கணிசமான அளவுக்கு கூட்டம் சேர்ந்துடுச்சு... 
கிளம்புங்க தலைவரே!’’
‘‘எந்த மீட்டிங்?’’
‘‘மீட்டிங் இல்லை
தலைவரே... கோர்ட்டை
சொன்னேன்!’’

‘‘என்னை நோக்கிப் பாயும் தோட்டான்னு தலைவர் ஏன் அடிக்கடி சொல்றார்?’’
‘‘தேர்தல்ல தோற்றா பழைய தொழிலுக்குப் போவேன்னு அவர் சொன்னதும், போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கண்டித்து போன் வந்திருக்கு!’’
- அம்பை தேவா, சென்னை-116.