வலைப்பேச்சு



ஞாயிற்றுக்கிழமைன்னாலே செலவு பண்ணணும்னு மட்டும் கத்து வச்சிருக்கோம்! ஆனால் ஞாயிற்றுக்கிழமைய எப்படி செலவு பண்ணணும்னு ஒருத்தரும் கத்துத் தரலையே!
 டி எஸ் கவுதமன்



மல்லையாவின் ரேஷன் கார்டு ரத்து.
# ஆஹா! இருந்த ஒரு வழியையும் இவிங்க அடைச்சிட்டாங்களே... ரேஷன் கார்டு மட்டும் மல்லையாவிடமே இருந்திருந்தால், அவர் மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடை வரும்போது, கோழி அமுக்குவது போல் அமுக்கி பிடித்திருக்கலாம்!
 இளையராஜா அனந்தராமன்

பருப்புல தண்ணி அதிகமா ஊத்திக்கிட்டா பருப்பு விலை குறையும்  பாபா ராம்தேவ்
# அப்படியே பைக், கார் பெட்ரோல் டாங்க்ல தண்ணி அதிகமா ஊத்துனா பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சுடும்.
 இனிகோ பயஸ் பயஸ்

காலையில டி.வி.ல பக்திகரமா ‘ஜனனி... ஜனனி...’ பாட்டு பாடிக்கிட்டு இருந்தது. பையன் உடனே, ‘‘அப்பா! எங்க க்ளாஸ்ல ஜனனினு ஒரு கேர்ள் இருக்கு’’னு சொல்லிட்டு சிரிச்சுட்டே பாடினான். அப்படியே அப்பன் புத்தி!
 வெ. பூபதி



@munnajafar 
ரயில் கக்கூஸ்ல ஒரு சொம்பு வைக்க மாட்டேங்கிறாங்க. இவங்ககிட்ட போய் ரயில்வே ஸ்டேஷன்ல கேமரா வைக்க சொல்லிக்கிட்டு...

தந்தை மகள் மீது வைக்கும் பாசம் எல்லையற்றது என்பதற்கு சமீபத்திய உதாரணம்... பீகாரில் ‘‘குறுக்கு வழியில் என்னை +2வில் எப்படியாவது பாஸ் பண்ணும்படி செஞ்சிடுங்க, அது போதும்’’னு கேட்ட மகளை மாநிலத்திலேயே முதலாவதாக ஆக்கினார் அவரது தந்தை!
 தடாகம் முகுந்த்

@CreativeTwitz 
செல்போன் கண்டுபிடிச்சதுலர்ந்து பல பேரோட போன் வயர் அறுந்து போனத யாராலயும்
கண்டுபிடிக்க முடியறதில்ல!

@karthiykj 
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவேன்  ஜெ
கொலை, கொள்ளை... இதுலதானே முதன்மை மாநிலமா ஆக்குவீங்க?  மக்கள்

‘காட்டுக்குள் வீடு கட்டி பொதுமக்கள் அட்டகாசம்... யானைகள் அவதி!’
 இப்படித்தான் நியாயமா நியூஸ் போடணும்!

பக்கத்து வீட்டுக்காரன் ஷூவைப் போட்டு தரையில தட்டறான். உள்ள பூச்சி போய் உக்காந்திருக்குமாம். அதுக்குதான்டா சாக்ஸையும் உள்ளயே வைக்கணும். பாம்பே உள்ள போனாலும் செத்துரும்!
 பூபதி முருகேஷ்

மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க மம்மி முடிவு!
# இப்படி ஒரு முடிவு எடுத்துருக்காங்கன்னா, மேயர் அப்டியே மாறாம இருக்கறது எவ்ளோ எரிச்சலா இருந்துருக்கும் மம்மிக்கு? இனி வாரம் ஒரு மேயர் எல்லாருக்கும்!
 ஷர்மிளா ராஜசேகர்

@mpgiri 
என் கவலையெல்லாம் இந்த சுவாதி, வினுப்ரியா பிரச்னைகளிலிருந்து மக்களை மறக்கடிக்க என்ன குண்டை இவ்வரசாங்கம் போடுமோ என்பதாகவே இருக்கிறது!

கொஞ்சம் கெட்டவனா இருப்பதுதான் நல்லது.. ரொம்ப நல்லவனா இருந்தா ‘‘நல்லா நடிக்கிறான் பாரு’’ என சொல்லும் இந்த உலகம்!
 குமரன் கருப்பையா

@saathaan_ 
நகரத்தின் எல்லா கொண்டாட்டங்களுக்குப் பின்னும் வெறும் குப்பைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன...

@palanikannan04 
ஒருவனுடைய பேச்சு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவன் ஏதோ ஒரு நல்ல செயலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

கல்யாணமான ஒருவன் தன் மொபைலில் கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’ என்று சேமித்திருந்தானாம். அதுவும் ரிங்டோன் எதுவும் இல்லாமல். அவன் வீட்டில் இல்லாதபோது அவள் போன் செய்தால், அவன் மனைவி போனை சார்ஜரில் சொருகிவிட்டு வேலையைப் பார்ப்பாள். அந்த ஆள் சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் அமைதி விருதுக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறான்!

ஒரு மாருதி 800 காரை ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள். ‘5 லட்சம்... 10 லட்சம்... 20 லட்சம்... 40 லட்சம்...’ என ஏலம் ஏறிக்கொண்டே போனது. அப்போது அங்கே வந்த ஒருவன் விசாரித்தான்.. ‘‘என்னய்யா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குப் போயி இத்தனை விலையா?’’ அங்கிருந்த ஒருவர் சொன்னார், ‘‘விஷயம் தெரியாம பேசாதய்யா. இந்த மாருதி கார் இதுவரை 24 தடவை ஆக்சிடென்ட் ஆகிருக்கு. 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான். மனைவி மட்டுமே செத்துப் போயிருக்கா!’’ உடனே நம்ம ஆளு கத்தினான்... ‘‘ஒரு கோடி!’’

பொய் சொன்னால் கன்னத்தில் அறையும் ரோபோ ஒன்றை வாங்கி வந்தான் ஒருவன். இரவு உணவு உண்ணும்போது அதை டெஸ்ட் செய்து பார்க்க நினைத்து மகனைக் கேட்கிறான். ‘‘இன்னைக்கு ஏன்டா ஸ்கூலுக்கு போகல?’’
மகன்: ஸ்கூல்லதான் இருந்தேன்பா!
ரோபோ பளீரென்று மகனுக்கு ஒரு அறை விட்டது. அதிர்ச்சியடைந்த மகன், ‘‘ஓகே! உண்மைய சொல்லிடறேன். ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம்!’’
மீண்டும் ரோபோ மகனுக்கு ஒரு அறை விட்டது. மறுபடியும் அதிர்ச்சியடைந்த மகன், ‘‘சாரிப்பா! ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பார்ல தண்ணியடிச்சோம். அதான் ஸ்கூலுக்கு போகல!’’
அப்பா: ‘‘என்னது! தண்ணியடிச்சியா? டேய், உன் வயசுல எனக்கு பார் எப்படி இருக்கும்னுகூட தெரியாது!’’
இப்பொழுது ரோபோ அந்த அப்பாவை ஓங்கி ஒரு அறை விட்டது.
நடந்ததைப் பார்த்த அவன் மனைவி நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னாள்... ‘‘ஹ்ம்ம்! உங்களுக்குப் பொறந்த பையன் உங்கள மாதிரியே இருக்கான்!’’
இப்பொழுது ரோபோ அவன் மனைவியை ஓங்கி பளீரென்று ஒரு அறை விட்டது.
அடுத்த நாளே முதல் வேலையாக அந்த ரோபோவை OLXல் விற்றுவிட்டான் கணவன்.

@SENTHIL_WIN 
ஆபீசர்... நாட்ல இல்லாதவனோட ரேஷன் கார்டைத் தேடித் தேடி எடுக்கறீங்க. ரேஷன் கார்டு கேட்டு நான் எழுதிக் குடுத்து 6 மாசமாச்சு. கவனிங்க!

பருப்பில் தண்ணீர் நிறைய ஊற்றிக் குழம்பு வைத்தால் பருப்பு விலையைக் கட்டுப்படுத்தலாம்  பாபா ராம்தேவ்
# ‘மேக் இன் இந்தியா... மேக் இன் இந்தியா...’ன்னு சொல்லி, கடைசியில சாம்பார் வைக்கிறதுக்குக்கூட வக்கில்லாம பண்ணிட்டாங்க!
 நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

@Tamil_Typist 
சிறு வயதில் எல்லோரும் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவனால் அது ‘கோலிக்குண்டு’ சீசனாக மாற்றப்படும்!
# இன்று வரை புரியாத புதிர்

@writernaayon 
இளவட்டங்கள் ஐபோன் பயன்படுத்துவதில் மட்டுமன்று, முதியவர்கள் தாம் செய்துகொண்ட பைபாஸ் சர்ஜரியை சிலாகிப்பதிலும் ஸ்டேட்டஸ் ஸிம்பல் உண்டு.

வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட் போட்டா... ‘‘என்னய்யா டி.டி.ஆர் மாதிரி இது?’’ன்னு கேக்கற சமூகம், அதையே பெண் போட்டுக்கிட்டு வந்தா, ‘‘ஹாய் ஏஞ்சல்’’ என்கிறது!
 வாசுதேவன்
ராஜகோபால்

@iamparattai 
ஜோதிடர்: வலது கையில் இருக்கும் இந்த மச்சத்தால் உங்களுக்கு நல்ல மனைவி அமையும்.
வந்தவர்: அடேய்! அது சூடு வச்ச தழும்பு. அதை
வச்சதே என் மனைவிதான்!

@Piramachari 
ஏன்டா படிச்சோம்னு நினைக்காத படிச்சவனும் இல்லை; கொஞ்சம் படிச்சிருக்கலாம்னு நினைக்காத படிக்காதவனும் இல்லை!

ஜாதிச் சண்டை போட்டுக் கொலை செய்வார்கள்... இல்லையேல் கொலையை வைத்து ஜாதிச் சண்டை போடுவார்கள்...
ஆனால் ஜாதியைக் கொலை செய்ய மட்டும் இங்கே யாருக்கும் மனமில்லை.
 நல்லு ஆர் லிங்கம்

@aruntwitz 
கிழிஞ்ச பேன்ட்டை தைக்குறதுக்கு கடைக்குப் போனதுக்கும், கடையில் இருந்தே கிழிஞ்ச ஜீன்ஸை வாங்கிட்டு வர்றதுக்கும் இடைப்பட்ட காலம்தான் தலைமுறை இடைவெளி.

@ivivasai 
நகரத்து ஆளுங்களுக்கு  சொசைட்டி என்றால்  சமூகம்; கிராமத்து ஆளுங்களுக்கு  சொசைட்டி என்றால் அரிசி, மண்ணெண்ணெய் கொடுக்கிற இடம்...

திரும்பிப் பார்க்கையில், அருமையான வாய்ப்புகளின் அருமை தெரியாத, அருகில் இருந்த புன்னகையின் ஆழம் உணராத, சுரணை கெட்ட கழுதைப் பருவம்தான் இளமையோ என்று தோன்றுகிறது.
 கவிஞர் மகுடேசுவரன்

@pshiva475 
முடி வெட்டியதற்குப் பின் தலைல முடி கொறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருதோ, இல்லையோ... ஆனா உடம்பு 4 கிலோ கொறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருது!

மீண்டும் கண்டெய்னர்களில் பணம் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால்தான் நாங்கள் மேயர் தேர்தல் வேண்டாம் என்கிறோம்.
இப்படிக்கு,
கோடி எண் 570
 செல்வ குமார்

ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒரு அழகான பெண், ‘‘நீங்க என்னோட குடைக்குள்ள வந்தா என்ன?’’ என்று கேட்டாள். ‘‘வேண்டாம். நன்றி சகோதரி...’’ அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான்.
கருத்து...
கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல. அவனுக்குப் பின்னால அவனோட மனைவி வந்துக்கிட்டிருந்தா..!