வலைப்பேச்சு



@pshiva475 
சின்ன சந்துல யாராவது காரை ஓட்டிக்கிட்டு வந்து மாட்டிக்கிட்டா, நம்ம ஆளுங்க கிட்ட நின்னு ஏதோ டைனோசர் வந்து மாட்டிக்கிட்ட மாதிரியே பார்ப்பாங்க!



பாதுகாப்பு, விவசாயம், சிறு வணிகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நூறு சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி
# வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 40 பர்சன்ட் மட்டுமே அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்து சிறு வியாபாரிகள் தலையில் மண்ணை அள்ளிப் போட நினைத்த முன்னாள் காங்கிரஸ் அரசுக்கு கண்டனங்கள்!
- ரிட்டயர்டு ரவுடி

ஒரு பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ஆண் மருத்துவருடன் தனி அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘டாக்டர், வெளியே நிற்கிற என் வீட்டுக்காரரையும் உள்ளே கூப்பிடுங்களேன்!’’ என்றாள் பெண்.
டாக்டர் சொன்னார், ‘‘என்னை நம்பும்மா! நான் ஒரு ஜென்டில்மேன்’’
‘‘அது பிரச்னை இல்லை டாக்டர். வெளிய உங்க ரிசப்ஷனிஸ்ட் தனியா இருக்காங்க. என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’



@kumarfaculty 
காய்கறி வாங்கினால் இலவசமாகத் தந்த கறிவேப்பிலையும், கொத்துமல்லித் தழையும் விலைப் பட்டியலில் இணைந்ததே, விவசாயமும் மனிதாபிமானமும் குறைந்ததால்தான்.

பிரதமர் மோடிக்கு ரெண்டாயிரம் கோடி ரூபாயில் பிரத்யேக விமானம்...
# ஏம்பா! அந்த கேஸ் மானியம் விட்டுக் குடுக்குறதுக்கு ஒண்ணை அமுக்கச் சொன்னோமே, அமுக்கிட்டீங்களா? ஏழை வீட்டுல அடுப்பெரியணும்!
- திப்புசுல்தான் கே

தியேட்டரில் படம் பார்க்கும்போது, தேவையில்லாத பாட்டோ, ஃபைட்டோ, வசனமோ வந்தா என்னையறியாமல் என் கை ரிமோட்டைத் தேடுகிறது... உங்களுக்கும் அப்படித்தானா?
- வசந்த மலர்

@bommaiya 
ஓடுற அத்தனை டிரெயின்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டி வச்சிட்டு, ‘திறந்தவெளில மலம் கழிக்காதீங்க’ன்னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ்  பண்றாங்க...

வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் பல காலம் இருந்தவர்களது மரணம் தராத வலியையும் பயத்தையும் இளவயதில் சம்பவிக்கும் திடீர் மரணங்கள் தந்து விடுகின்றன!
- மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் - செய்தி
# உலகமே செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குதான்னு தேடுது... நம்மாளுக சன்னி லியோனை தேடியிருக்காங்க!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்



‘‘மத்திய அரசால் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது தி.மு.க என்ன செய்துகொண்டிருந்தது’’ என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்டிருக்கிறார். 1974ல் தி.மு.க இதற்காக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது என்பதற்கு அந்தக்கால நாளிதழ்களில் வந்திருக்கும் செய்திகளே ஆதாரமாக இருக்கின்றன. மாநில அரசின் ஆட்சேபணையை புறந்தள்ளியே கச்சத்தீவு இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டது.

அதே ஆண்டு நாளிதழ்களைப் புரட்டினால் அப்போது ஜெயலலிதா என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது. அவர் ‘வைரம்’ என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிந்தார். இன்று சட்டமன்றத்தில் போர்முழக்கம் இடும் செம்மலை மாதிரி அ.தி.மு.கவினர், ‘நேற்று இன்று நாளை’, ‘உரிமைக்குரல்’ போன்ற படங்களுக்காக எம்.ஜி.ஆருக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்துகொண்டிருந்தார்கள்.

@writercsk 
தக்காளி விலை ஏறியதைக்கூட சமாளிக்கலாம். தக்காளி, இனி அதை வைத்து ஜோக் எழுதித் தள்ளுவார்களே என எண்ணும்போதுதான் பீதியாகிறது!

@aruntwitz 
வாழ்க்கையில் எப்பவாவது கெத்தா ‘பாட்ஷா’ தீம் மியூசிக் நமக்கு வரும். ஆனா, பெரும்பாலும் கேட்குறது ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ மியூசிக்தான்.

@i_am_v_jey 
எந்த வியாதிக்கு ஆஸ்பத்திரி போனாலும் டிஸ்சார்ஜ் ஆகி வரும்போது நெஞ்சு எரிச்சல் வயிறு எரிச்சலோடுதான் வருவாங்க... ஏன்னா, பில் அப்படி!

@HELLOME787 
ஒரிஜினல் எலுமிச்சையை வண்டி டயர்களில் வைத்து நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்துக் கொண்டிருக்கிறோம்.

@naatupurathan 
டீசல், பெட்ரோல், பால் எல்லாமே லாரியிலதான் எடுத்துட்டு போறாங்க. ஒரு சொட்டுகூட ஒழுகறதில்ல. ஆனா தண்ணீர் லாரி மட்டும் ஏன் அவ்ளோ ஒழுகுது? யாரோட அலட்சியம்?

@im_appavi 
சொந்தக்காரங்க நலம் விசாரிக்கும்போது எல்லாம் நல்லபடியா சொல்லிடணும். இல்லன்னா அவங்களுக்குள்ள இருக்கற 100 சாக்ரடீஸ நம்ம மேல ஏவி விட்ருவாங்க!

@Kounter_twitts 
நாய் ரொட்டித் துண்டுக்கு அலைஞ்ச காலம் போய், இப்ப நாம அலையறோம். கேட்டா இதுக்கு பேரு ‘பீட்சா’வாம்...

@palanikannan04  
எங்கேயோ தூரத்தில் கேட்கும் ஒரு பாடலால், நம் மனதிற்குப் பிடித்தவர்களின் நினைவைக் கொண்டு வர முடிவதே ஒரு ஆகச் சிறந்த இசையின் திறமை!

ஆண்களின் கர்ப்பம் வழுக்கை. ஒரு கட்டத்துக்கு மேல மறைக்க முடியாது!
- ரசனை ஸ்ரீராம்

பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல இருக்கானேன்னு பாக்கப் போனேன்... ‘‘என்னய்யா... உடம்பு   கொதிக்குது?’’னு கேட்டா, ‘‘நெருப்புடா... கபாலிடா....’’ங்குறான்!
# ‘‘சாவுடா’’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

மனைவி:
ஏங்க, புண்ணியம் செஞ்சவங்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க?
கணவன்:
Unmarriedனு சொல்லுவாங்க!
மனைவி:
யோவ் நில்லுய்யா... ஓடாதே!

டீச்சர்:
2 + 2 எவ்வளவு?
மாணவன்: 7
டீச்சர் (கோபத்துடன்): எப்படிடா?
மாணவன்: சர்வீஸ் டாக்ஸ், VAT, ஸ்வச் பாரத் செஸ், க்ரிஷி கல்யாண் செஸ் எல்லாத்தையும் சேர்த்த பிறகு டீச்சர்!

நயன்தாரா மீண்டும் காதல் தோல்வி - செய்தி
* சென்னை விமான நிலைய மேற்கூரை உடைந்தது
* பெட்ரோல் விலை மீண்டும் பத்து பைசா உயர்ந்தது. நேற்று நள்ளிரவு முதல் அமல்.
* தமிழகத்தில் புதிய எழுச்சி படைப்போம் - வைகோ
* திருட்டு விசிடியை ஒழிப்போம் - விஷால்
# திரும்ப 6 மாதம் கழிச்சி படிச்சீங்கன்னாலும் இந்த நியூசெல்லாம் ஃப்ரஷ்ஷாவே இருக்கும்யா...
- சுரேஷ் ஆதித்யா

@gokula 15sai 
‘சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு பக்கத்து இருக்கை காலியாக விடப்படுவது எதற்கு’ என்று விவாதிக்கத் தயாரா நடுநிலைவாதிகளே..?

@apssara 2013 
எங்கோ ஏதோ குழந்தை இன்னமும் சாப்பிடாமல் திரியுமெனில், நாம் பேசும் அரசியல், சினிமா, அறிவியல் எல்லாவற்றிலும் அநியாயம் ஒன்றே மிஞ்சுகிறது.

சார்ஜ் போட்ட பவர் பேங்க்கை காணோமே... ஏய், என் பைக் சாவி இங்கதானே இருந்தது... அந்த ஹெல்மெட்டை கொடு... சமையல் ரூமில இருந்துக்கிட்டே பதில் சொன்னா எனக்கு கேக்குமா? வெளியே வந்து சொல்லு... அய்யய்யோ, டைம் ஆயிடுச்சே! நான் கிளம்புறேன்...
# இவ்ளோ டென்ஷனா இவர் எங்க கிளம்புறாரு..? யோகா க்ளாசுக்குதான்‬!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

அன்பில் மட்டும் ஒரு டீஸ்பூன் அளவு குறைந்தாலும் எளிதில் உணர்ந்து விட முடிகிறது.
- சுரேஷ் ஆதித்யா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக தக்காளியும் ஆப்பிளும் ஒரே விலைக்கு விற்கப்படுகின்றன. ஏழை தக்காளியை பணக்கார ஆப்பிளுக்கு இணையாக உயர்த்துவதற்குக் கடுமையாக உழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக தக்காளியும் ஆப்பிளும் ஒரே விலைக்கு விற்கப்படுகின்றன. ஏழை தக்காளியை பணக்கார ஆப்பிளுக்கு இணையாக உயர்த்துவதற்குக் கடுமையாக உழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி!

நான் இதைச் சொன்னால் ‘பணத்திமிர்ல பேசறேன்’னு சொல்லுவாங்க! 
இருந்தாலும் சொல்றேன்... இன்றைக்கு என் வீட்டில்,
# தக்காளி சட்னி