கிளுகிளு...கிறுகிறு!



‘அப்பாவின் மகள்கள்’ படித்தபோது ஏங்கித்தான் போனேன், ‘எனக்கொரு மகள் இல்லையே’ என்று! அப்பாக்களின் சார்பில் பெண் படைப்பாளிகளின் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்!
- கி.ரவிக்குமார், நெய்வேலி.



பெண்கள் சந்திக்கும் முதல் ஆண்  அவர்களின் தந்தைதானே! தந்தையர் தினத்தில் அப்பாக்கள் குறித்த மகள்களின்  பகிர்வு, அற்புதமான நேசப் பரிமாறல்!
- பி.சுந்தரமனோன்மணி, திருவள்ளூர்.

குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்குள் இருந்த நல்ல உள்ளத்தைக் கண்டு வியந்தேன்.
- ஜெ.ராஜ், காரமடை.

அன்பை வெளிக்காட்டாமல் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் அப்பாக்களுக்கு அர்ப்பணிப்பாக அமைந்தது ‘உறவெனும் திரைக்கதை’. துவக்கமே சிறப்பு!
- பு.மா.ஜீவா சுப்ரமணி, வேலூர்.

3டியில் பிரின்ட் செய்த வீடு, பைக் பற்றி பேசிய பேச்சோடு கடைசியாக  விரும்பியபடியான மனைவியையும் பிரின்ட் செய்யப் பார்த்தது
வர்ஜின் குறும்பு சார்!
- சி.யோவான், திருவண்ணாமலை.

கவிஞர் தாமரையின் ‘டவுன்லோடு மனசு’ பகுதியில்  மனம் கனத்துப்போனது. அவரின் அழகான பாடல்களுக்குப் பின்னால் இவ்வளவு ஆழமான துயரமா?
- ப.தமிழ்மதி, கோவை

ரஜினி  இந்தியாவின் ஆல் கிளாஸ் சூப்பர்ஸ்டார் என்பது நடிப்பில் மட்டுமல்ல, நட்பிலும்தான் என நிரூபித்தது தாணுவின் பேட்டி!
- ஜி.சிவநாதன், சென்னை-78.

புதிய பகுதிகள் எல்லாமே வாசிக்க சாரல் மழை. குறிப்பாக, குங்குமம் டாக்கீஸில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் போட்டோக்கள் காக்டெய்ல்
கிளுகிளு கிறுகிறுப்பு!
- அ.குமரேசன், திருப்பூர்.

மருத்துவர் கு.கணேசனின் ‘செகண்ட் ஒப்பீனியன்’, காலத்துக்கு ஏற்ற பயனுள்ள தொடர் என்பதுதான் எங்கள் ஒட்டுமொத்த ஒப்பீனியன்!
- சி.என்.ரமாதேவி, சென்னை-70.

வணிகப்படிப்புகளில் விரிந்து கிடக்கும் வாய்ப்புகளைப் பட்டியலிட்டு, வளம் குன்றாத துறை எனக் குறிப்பிட்டது மாணவர்களுக்கு குளுக்கோஸ் எனர்ஜி!
- கே.பாலாமணி, சென்னை-4.

இறுதி மூச்சு உள்ளவரை போராட்ட குணம் மனதில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய முகமது அலி அமேஸிங்!
- மு.சண்முகவேலன், தஞ்சாவூர்.

‘மனிதநேயம் என்றும் லாபம் பார்ப்பதில்லை’ என்பதன் யதார்த்த சாட்சி, பத்து ரூபாய் சாப்பாட்டுக் கடை ராமு தாத்தா! யாரும் மதிப்பிட முடியாத பணி அவருடையது!
- ஜி.சங்கீதா பரமு, புதுச்சேரி.