ஸ்பீக்கரு...



தலைவர் கூட்டணி அமைக்கறதுக்குள்ள...’’
‘‘வழக்கம் போல ‘தேர்தலும் கடந்து போகும்’னு சொல்லுங்க!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

தலைவரை வாக்கிங் போகக் கூடாதுன்னு ஏன் மேலிடத்துல சொல்லியிருக்காங்க..?’’
‘‘மறந்து போய் தொகுதிக்குப் போயிடறாராம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.



ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...’’
‘‘வர்ற தேர்தல்ல, ஓட்டு போட்ட பிறகு கைவிரல்ல மை வைப்பாங்களா? இல்ல... முதுகுல ஸ்டிக்கர் ஒட்டுவாங்களா எசமான்?’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

எதிர்க்கட்சியினரை நேராகவே கேட்கிறேன். நாங்கள் அடித்த கொள்ளையே எவ்வளவு என்று தெரியாத உங்களுக்கா எங்கள் கொள்கையைப் பற்றி தெரியப் போகிறது..?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

நேர்காணல்ல தலைவரை ‘இம்ப்ரஸ்’ பண்ணிட்டியா... எப்படி?’’
‘‘கட்சிக்காக எட்டு தடவ செல்போன் டவர்ல ஏறியிருக்கேன்னு சொன்னேன்!’’
- பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.

கூட்டணி பேசப் போன தலைவர் ஏன் சோகமா இருக்கிறார்?’’
‘‘தொகுதிகள்தான் தருவோம்... வேட்பாளர்கள் எல்லாம் தரமாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி

முதல் அமைச்சர் கனவு கலைந்து போய்விடக் கூடாது என்பதால்தான் எங்கள் தலைவர் பிரசார மேடையிலும் தூங்குகிறார் என்பதை...’’
- அஜித், சென்னை-126.