ஸ்பீக்கரு...
‘‘நேர்காணல்ல கேட்ட கேள்விக்கு தலைவரால சட்டுன்னு பதில் சொல்ல முடியலையாமே... அப்படி என்ன கேட்டாங்களாம்?’’ ‘‘எத்தனை முறை கட்சி மாறியிருக்கீங்கன்னு கேட்டாங்களாம்!’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
என்ன தலைவரே! நைட்ல சரியா தூங்க முடியாம அவதிப்படறீங்களா... ஏன்?’’ ‘‘கூட்டணிக் கட்சித் தலைவர் மூணு மணி நேரமா பொதுக்கூட்டத்தில் ஆவேசமா பேசறபோது மேடையில் தூங்கித் தொலைச்சிடறேன்!’’ - ஏ.எஸ்.யோகானந்தம், ஒளவையார்பாளையம்.
தலைவர் தேர்தல் செலவுக்குப் பணம் இல்லாமல் தவிப்பதால், பேங்க் மேனேஜர்கள் மல்லையாவுக்கு லோன் கொடுத்ததுபோல் தலைவருக்கும் லோன் கொடுத்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி
‘‘வர்ற தேர்தல்ல நம்ம ஆட்சிதான்... கவலைப்படாதேய்யா!’’ ‘‘நான் கவலைப்படலை தலைவரே... அப்படி நடந்துடுமோன்னு மக்கள் கவலைப்படறாங்க!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தலைவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியிலேயே எது ஹைலைட்டுன்னு நினைக்கறே?’’ ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிகா வைரஸை கைது செய்து சாகும் வரை தூக்கிலிடுவோம்னு சொன்னாரு பாரு... அதான்!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி
எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறோம்...’’ - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அந்தக் கட்சிக்காரங்க மட்டும் விழுந்தடித்துக்கொண்டு வந்து வாங்கற அளவுக்கு, நீங்க என்ன புக் எழுதியிருக்கீங்க?’’ ‘‘30 நாட்களில் அவங்க கட்சித் தலைவர் பேசும் மொழியைக் கற்றுக்கொள்வது எப்படிங்கற புத்தகம்தான்..!’’ - சரவணன், கொளக்குடி.
|