வலைப்பேச்சு



சுவிட்சர்லாந்துல வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அனைவருக்கும் மாதம் ரூ. 1.6 லட்சம் தரப் போறாங்களாம்!
# நம்ம அளவுக்கு பணக்கார நாடு இல்ல போலிருக்கு சுவிட்சர்லாந்து. நமக்குத்தான் மோடி கறுப்புப் பணத்தையெல்லாம் மீட்டுட்டு வந்து எல்லாருக்கும் சீக்கிரம் 15 லட்சம் பிரிச்சுத் தரப் போறாரே!
- தடாகம் முகுந்த்

@MrMarmaYogi 
பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 பைசா குறைப்பு!
# இவ்ளோ பெரிய அமவுன்ட் குறைச்சிருக்காங்களே, பேசாம இன்னொரு வண்டி வாங்கலாமா?

ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு மிருகம் தூங்கிட்டு இருக்குறது உண்மைதான். ஆனால் அது பூனையாகவும் புலியாகவும் வெளிப்படுவது, எதிரில் சிக்கும் ஆளைப் பொறுத்தது!
- குமரேஷ் சுப்ரமணியம்

@anugula 
கொச்சியிலிருந்து பெங்களூரு வரை கெயில் குழாய் திட்டத்திற்கு ஏன் தமிழ்நாடு விவசாயிகள் மட்டும் நிலத்தை இழக்க வேண்டும்?
# உச்ச நீதிமன்றம்

@tamizhanban08 
கெயில் குழாய் பதிச்சிக்க, அணு உலை அமைச்சுக்க, மீத்தேன் எடுத்துக்கங்க, டாஸ்மாக் நடத்திக்க!
# உச்ச நீதிமன்ற கட்டப் பஞ்சாயத்துக்கள்...

ஆறு கஜம் புடவையை பெண்கள் எவ்ளோ ஈசியா, கஷ்டப்படாம, சிரிச்சிக்கிட்டே கட்டறோம். ஆஃப்டர் ஆல் ஒரு ஆறு இன்ச் புடவை பில். இதைக் கட்ட அழறாங்களே இந்த ஆண்கள்!
- செல்லி சீனிவாசன்

அடப்பாவி மனுஷா... ஒரு 10 மாசத்துக்கு முன்னாடி ராஜினாமா பண்ணியிருந்தா இடைத்தேர்தல் வந்து மக்களுக்கு நாலு நல்லதாவது நடந்திருக்குமே!
- கார்ட்டூனிஸ்ட் முருகு

@lakschumi 
இந்த உறக்கம் மட்டும் இல்லையெனில் எத்தனை எத்தனை துயரங்கள் விழித்திருக்குமோ!?


பஸ் ஸ்டாண்ட் உரையாடல்:

அவர்: ஏன்யா! ஆளாளுக்கு தனியா தேர்தல்ல நின்னா, யார்தான் ஜெயிக்கறது?
இவர்: யார் ஜெயிச்சா என்னய்யா? நமக்கு எல்லா கட்சியிலிருந்தும் காசு வரும். நல்ல வருமானம்தான்...
‪#‎ வாழ்க_பணநாயகம்‬
- கிறிஸ்டில்டா என் பாண்டியன்


பெண்ணிடம் ஜோதிடர்: உங்க கணவரோட எதிர்காலத்தைப் பற்றி தெரிஞ்சுக்கணுமா?
பெண்: அவன் எதிர்காலத்தை நான் முடிவு பண்ணிக்குவேன். எனக்கு அவன் கடந்த காலம் பற்றி மட்டும் சொல்லுங்க!

தமிழக அரசு எவ்வளவு மொண்ணைத்தனமாக செயல்படுகிறது என்பதற்கு கெயில் வழக்கு சமீபத்திய உதாரணம். அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் போல அரசு வழக்கறிஞர்களுக்கும் கூன் விழுந்திருப்பதன் விளைவு... இந்த விவசாயிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
- பிரபல
எழுத்தாளர்


இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!அருணாச்சலம், இதெல்லாம் என்னனு தெரியுமா?
மோடிக்கு ஜெயலலிதா எழுதின லெட்டர்ஸ்!!

பழ.கருப்பையா வீட்ல தாக்குதல் நடத்துனவங்க அதிமுகவினர் கிடையாது! எப்படிச் சொல்றீங்க?
கல்லுலதான் அம்மா ஸ்டிக்கர் ஒட்டலையே!

ஏங்க, ‘இறுதிச்சுற்று’ல அந்தப் பெண்ணோட நடிப்பைப் பார்த்ததிலிருந்து, எனக்கும் பாக்ஸிங் கத்துக்கணும் போல இருக்குங்க.
‪#‎ சமீபத்திய_அதிர்ச்சிகள்‬
- ராஜா முகமது சீன தேசத்தில்இருந்து

@MrMarmaYogi 
சென்னை பெரு வெள்ளத்தை தமிழக அரசு தடுத்திருக்க முடியும்: மத்திய குழு அறிக்கை
# எங்கே சார்? அவங்களுக்கு ஸ்டிக்கர் அடிக்கவே நேரம் சரியா இருந்துச்சு!

செம குளிர்ல குளிக்கும்போது முதல் மக்குல பச்ச தண்ணிய மொண்டு மேல ஊத்திக்கும்போதுதான் இந்த பிரேக் டான்ஸ கண்டுபிடிச்சிருப்பாங்க போல...
- பனிமலர் வைத்தி


அடிமைகளை வைத்து ஆண்டு கொண்டிருக்கும் இந்த அரசு, விதம்விதமாக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது... நாஞ்சில் சம்பத் இந்த கசப்பான உண்மைகளை மறைப்பதற்கு உளறினார்; பழ.கருப்பையா உளறல்களில் இருந்து தப்பிக்க உண்மைகளைக் கூறினார். இரண்டுக்கும் ஒரே ரீயாக்‌ஷன்தான்... நீக்கம்!
# சம்பத் பாவம். மூடியிருக்கும் இன்னோவா காருக்குள் சிக்கியிருக்கும் கொசுவைப்போல வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பழ.கருப்பையா மனதில் பட்டதைக் கொட்டிவிட்டு பெஞ்ச் தட்டுகிற வேலையிலிருந்து தப்பித்து விட்டார்.
- செல்வ குமார்

@BoomiB 
டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனை ‘‘எந்திரி’’ என்போம். அம்மா காலடி யில் குப்புற விழுந்து கிடப்பவரை ‘‘மந்திரி’’ என்போம்.

கேள்வி: அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் என்ன வேறுபாடு அரக்கரே?
பதில்: அமெரிக்காவில் அந்த நாட்டுக்கொடியில் ஜட்டி தைத்துப் போட்டுக்கொண்டாலும் பிரச்னையில்லை; ஆனால் சக அமெரிக்கரை மதிக்க வேண்டும். இந்தியாவில் சக இந்தியனை சாதியின் பேரால் 1000 ஆண்டுகளாக கக்கூஸ் கழுவ விட்டாலும் பிரச்னை இல்லை; ஆனால் கொடியை மதிக்க வேண்டும்!
-  கிளிமூக்கு அரக்கன்

ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் செல்லாதீர்கள்: மத்திய அரசு அறிவுரை.
இந்த விஷயத்தை நம்ம பிரதமர் மோடியிடம் சொல்லி வைங்கப்பா!
- இளையராஜா அனந்தராமன்

@mani_kuttans 
கட்சி பேனரில் கட்டாயம் எழுத வேண்டிய கடைசி வரி, ‘இதில் இடித்து கீழே விழுந்தால் நாங்கள் பொறுப்பல்ல!’

@shaza_shazu 
லவ் ஃபெயிலியர் ஆனா தாடியை மட்டும்  வளர்த்தா போதும். லவ் சக்சஸ் ஆகிட்டா பொண்டாட்டி, பிள்ளையையும் சேர்த்து வளர்க்கணும். ஸோ, யோசிச்சு முடிவெடுங்க!

அழகான பொண்ணைப் பார்த்தா நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே... அதப் புடிச்சி சாகடிச்சிட்டா போதும். நாம வாழ்க்கையில முன்னேறிடலாம்!


காதல் பண்ணிட்டு அழுவுற ஆண்களை விட கல்யாணம் பண்ணிட்டு அழுவுற ஆண்கள்தான் ஊருக்குள்ள அதிகம்!

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டுதான்... பேசும்போது கேட்டுக்கிட்டே இருக்கணும்; ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்!

உலகின் ஆகச்சிறந்த கை விலங்குகள் எந்த உலோகத்தாலும் செய்யப்படுவதில்லை. மாறாக அன்பால் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் உடைப்பதற்குக் கடினமாக இருக்கிறது!
- ப்ரீதா ராஜேஷ்

@GabaliTwits 
நீ லவ் பண்றியான்னு சொல்லு, உன் பர்ஸ் காலியான்னு நான் சொல்றேன்!

கரு.பழனியப்பனை கட்சிலருந்து தூக்காம, பழ.கருப்பையாவை தூக்குனதுக்கே ஒரு கட் அவுட் வைக்கலாம்.
- பிரபல எழுத்தாளர்

வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோதுகூட அமைக்கப்படாத ‘அழைப்பு மையம்’, இப்போது அறிவிக்கப்பட்டு எப்போதும் ‘பிஸி’யாகவே இருக்கிறது.
- கார்ட்டூனிஸ்ட் முருகு

அந்த 4 பைசா பிச்சையையும், வறுமையில் வாடும் அந்த எண்ணெய் நிறுவனங்களுக்கே போட்ருங்க ஜீ!
- பாலா சேலம்

@madhu_offl  
அம்மா தரும் சாப்பாட்டை பாராட்டத் தயங்காதீர்! சிலருக்கு அம்மா இல்லை; சிலருக்கு சாப்பாடே இல்லை!

நமக்கு நல்லது செய்யிறதுக்கு இந்த கட்சிக்காரங்க எல்லாம் கெடந்து பாடா படுறத பாத்தா... கண்ணுல ஜலமா கொட்டுது!
- திப்புசுல்தான் கே‘

@kountermoney 
ஆறுலயும் சாவு; நூறுலயும் சாவு. என்ன... ஆறுல செத்தா ஆம்லெட்டு; நூறுல செத்தா சில்லி சிக்கன்...