உள்ள(த்)தைச் சொல்கிறோம்



சக்தி வாய்ந்த இறைவியான துர்காதேவியின் ஒன்பது வடிவங்களில் மூன்றாவது  ஆற்றல் மிக வடிவமாய்த்தகழ்ந்து சங்கடங்கள் தீர்க்கும் வல்லமை கொண்ட  ‘சந்திர கண்டா தேவி’யின் மகத்துவங்களை விவரித்த கட்டுரையும்  வண்ணப்படங்களும் சிலிர்ப்பு கலந்த பரவசத்தில் ஆழ்த்திவிட்டன. 

மேலும், ஸ்ரீ  அக்ஷாப்ய தீர்த்தர் என்ற மகான் பற்றிய மகத்துவங்களை அற்புதமாக விவரித்த ரெங்கராஜன் அவர்களின் கட்டுரையைப் படித்தபோது மகோன்னத மகான்கள்  வாழ்ந்திருப்பதை உணர்ந்து மனம் உவகை அடைந்தது.

அழகிய திருமகளின்  வண்ணமயமான அட்டைப்படத்துடன் அற்புதங்கள் நிகழ்த்தும் திருநாளாயத்திகழும்  அட்சய திருதியையின் மகத்துவங்களை முப்பது முத்துக்களாய்த் தொகுத்து வழங்கப்பட்ட  கட்டுரை மனதில் மகிழ்ச்சி ஒளியைப்பரவச் செய்து, வாழ்வில் ஐஸ்வர்யங்கள்  நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பாண்டிச்சேரிக்கு அருகில் பஞ்சசேத்திர பணிகள் நிகழும் தருணத்தில் `இந்த அடியவன் பார்த்த அற்புதங்கள்’ என்று ரமணி அண்ணா தந்துள்ள தகவல்களும் தரிசனப் படங்களும் பக்திப்
பரவசமூட்டின!
 - ஆர்.வள்ளி பாலன், திருநெல்வேலி.

அட்சய திருதியையன்று நகை நட்டு போன்றவைகளைத் தான் வாங்க வேண்டும் என்ற தவறான  கருத்து நிலவி வரும் சூழலில், அப்புண்ணிய தினத்தன்று நடத்தக்கூடிய 30  வகையான செயல்பாடுகள் குறித்து AtoZ விளக்கமளித்திருந்தார், எஸ்.கோகுலாச்சாரி அவர்கள். அதற்கு பாராட்டுக்கள்.
 - இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பகுதி - 18 வரை வந்திருக்கும் ``ராஜகோபுர மனசு’’ கட்டுரை, குமரன் லோகபிரியாவின் தனித்துவமிக்க உரைநடையில் தூள் பரந்து வருகிறது. சுல்தான் படையினரை கண்முன்னே காட்டுகிறது இந்த கட்டுரை. விரிவான தகவல்கள், அடுத்த ஓரிரு கட்டுரையில் முடியும் தருவாயிலில் இருக்கிறது. எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.
 - சி.திவ்யபாரதி, சென்னை.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள், அதனோடு சித்திரை மாத ராசிபலன்கள், கூடவே  அட்சய திருதியை பக்தி ஸ்பெஷல் என ஏப்ரல் மாத இதழ் செம கலக்கல்!
 - ஆர். கே. லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

இரட்டை கோயில்கள்’ கீழையூர் சிற்பமும் சிறப்பும் பகுதி ஆறு அடுக்கு கிரீடம் போல் அழகூட்டிவிட்டது! அருள் தரும் ஆன்மிகம் வாசகர்களுக்கு பெருமை!
 - மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.

கல்யாணமான புதிய தம்பதிக்கு அளவில்லா மகிழ்ச்சியை அள்ளித்தரும் மலையாமரங்க சுவாமியின் பகுதி மிக அற்புதமாக இருந்தது. எனக்கு தெரிந்த புதுமண தம்பதியை இந்த கோயிலுக்கு செல்ல அறிவுருத்தினேன்.
 - கோபாலகிருஷ்ணன், திருச்சி.

‘அட்சய பாத்திரமாய் அருளும் அக்ஷேப்ய தீர்த்தர்’ என்னும் கட்டுரை கண்டேன். அவரின்  விளக்கங்கள் அருமையாக இருந்தன. அவருக்கு தனி மடம், இரண்டு முறை  பிருந்தாவனம் மற்றும் அந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை  துல்லியமாக கூறியது அருமை! மேலும், ‘எது என்னுடைய ஆன்மிகம்’ என்னும் தலையங்கம் கண்டேன். 

அதாவது இது வேலி என்று புரிந்துக்கொண்டால் ஆன்மிகம் என்கிற தெளிவு தானாக வந்துவிடும் என்ற கருத்து மிக அருமை. அதுமட்டுமா.. ‘‘ஏழாமவன்’’ என்னும் கட்டுரையில் விபிஷணன் பற்றி அழகாக கூறியது, படுஜோர். இப்படி துல்லியதாக யாரும் கூறியது  இல்லை.
 - வண்ணை கணேசன், சென்னை.

நல்லண எல்லாம் தரும் அபிராமி’’ படங்களும் தகவல்களும் பரவச மூட்டின பரமானந்தத்தை எட்டின!
 - ஆர். உமா காயத்ரி, நெல்லை.