வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்-சந்த்ர கவசம் - 14



நம் நடை முறை பேச்சு பழக்க வழக்கங்களில் சந்திரன் போன்று வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டுமா? என்று கேட்பார்கள். அவ்வளவு முக்கிய வாய்ந்த கிரகம் சந்திரன்.

சந்திரன் உலகத்தின் மன தத்துவம்.
ஆதி புருஷ்னனையும், உலகத்தை சிருஷ்டிக்கின்றவனையும், அதற்கு ஆதாரமாயும் உள்ள நாராயணன் ஆன்மாக்களுக்கு கர்மசுத்தி உண்டாவதன் பொருட்டு தனது ஆன்மாவை சூரியனிலும், மனதைச் சந்திரனிலும், தனது பல சக்திகளை மற்ற  கிரக நட்சத்திரங்களிலும் பரிணமிக்கச் செய்து கொண்டிருக்கிறான் என்று வேதங்களும், மகான்களும் கூறுகின்றனர். சந்திரன் பூர்ண கலைகளுடன் இருக்கும் காலத்தில் தேவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறார்.

எனவேதான் பௌர்ணமி காலத்தில் அம்பிகை, ஸத்ய நாராயண பூஜைகளைச் செய்கிறார்கள். க்ஷிண் கலைகளிலும் இருக்கும் காலத்தில், முக்கியமாக அமாவாசைகளிலும் இருக்கும் ராகு கேது பிடித்த போதும் பித்ருக்களுக்குச் சந்தோஷம் கொடுக்கிறார் . எனவே தான் அச்சமயங்களில்  முன்னோர்களுக்கு தர்ப்பனங்கள் செய்கிறார்கள். ஜாதகத்தில் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் வரும் போது சந்திராஷ்டமம் என்பர். சந்திரனுக்குரிய நோன்புகளில் ஸோமவார விரதம் முக்கியமானதாகும்  நவக்ரஹ க்ஷேத்திரங்களில் சந்திரனுக்கு உரியது திருப்பதி. மூர்த்தியின் பெயர் ஸ்ரீவேங்கடாசலபதி.

நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாகிறார் என கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் இந்த சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாக கெட்டிருக்கும் போதோ சந்திர கிரக தோஷம் ஏற்பட்டு மனிதனுடைய வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க ஏற்படுகிறது.

சந்த்ர கவசம்
அஸ்யஸ்ரீ சந்த்ரகவச மந்த்ரஸ்ய கௌதம ரிஷி: அனுஷ்டுப்சந்த:
ஸோமோ தேவதா ரம்பீஜம் ஸம்ஸக்தி: ஓ கீலகம் ஸோமக்ரஹ
ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

ஸோமம் த்விபுஜபத்மஞ்ச முக்தாபரண பூஷணம் |
ஸ்வேதாஸ்வரதமாருஹ்ய மேரும் யாந்தம்
ப்ரதக்ஷிணம் ||

ஸுப்ரம் சதுர்புஜம் தேவம் கேயூர மகுடோஜ்வலம் |
ஸங்கரஸ்ய ஸிரோரத்னம் பஜே நக்ஷத்ரநாயகம் ||
ஸஸீபாது ஸிரோதேஸம் பாலம் பாது கலாநி: |

சக்ஷுஷு சந்த்ரமா: பாது ஸ்ருதிம்பாது கலாத்மக: ||
க்ராணம் பக்ஷகர: பாது முகம் குமுதபாந்தவ: |
ஸோம: கரௌதுமே பாது ஸ்கந்தெள
பாதுஸுதாத்மக: ||

ஊரூமேsத்ரிஜநி: பாது மத்யம் பாது நிஸாகர: |
கடிம் ஸுதாகர: பாதுபாதூர: ஸஸலாஞ்சன: ||
ம்ருகாங்கோ ஜானுனீ பாது ஜங்கேபாது
அம்ருதாப்திஜ: |

பாதௌஹிமகர: பாதுபாது சந்த்ரோ அகிலம்வபு: ||
ஏதத்ஹி கவசம் புண்யம் புக்தி முக்தி ப்ரதாயகம் |
ய: படேத் ஸ்ருணுயாத்வாபி ஸர்வத்ரவிஜயீபவேத் ||

ஸ்வேதாம்பரோ ஜ்வலதனும் ஸிதமால்யகந்தம் |
ஸ்வேதாஸ்வ யுக்தர தகம் ஸுரஸேவிதாங்க்ரிம் ||
தோர்ப்யாம் த்ருதாபயகரம் வரதம் ஸுதாம்ஸும் |

வத்ஸ மௌக்திகதாம் ப்ரணமாமி சந்த்ரம் ||
சந்திர பகவானின் இந்த கவசத்தை  தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் சந்திர பகவானின் கவசத்தை 108 முறைகளுக்கு மேலாக சொல்பவர்களுக்கு  மனோ தைரியம் அதிகரிக்கும்.

கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமலும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் அதிகரித்து. செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இந்த 108 முதல் 1008 முறை வரை தினமும் சொல்பவர்களுக்கு சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கி வாழ்க்கையில் நன்மை கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது.

- கவசம் தொடருவோம்

(அடுத்த இதழில் குரு கவசம்)

அனுஷா