ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்



மந்திரம் என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும். இந்து மதத்தின் ஆனிவேர் வேதமாகும். நமது ஞானிகள் நமக்கு  அளித்து சென்ற பொக்கிஷம். நாம் தினந்தோறும் எதாவது மந்திரத்தை பூஜையறையில் காலை-மாலை நேரத்தில் சொல்வது சிறப்பாகும்.

இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை தினம் தோறும் பாராயணம் செய்தால் சகல பாவங்கள் விலகி, பயத்தை நீக்கி, துஷ்ட கிரகங்களின் தோஷத்தை நீக்கி, கல்யாணத்தை கைகூடி, கடன் தொல்லைகளில் இருந்து நீக்கி, குடும்பத்திற்கு தேவையான அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது.ஆஞ்சநேயரைப் பற்றி தமிழில் போதிய மந்திரங்கள் இல்லை. வட மொழியில் மிகுந்த அளவில் உள்ளன. அதனை தமிழில் தரும் முயற்சியே இந்த மந்திரம்.

ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஸ்லோகம் (மந்திரம்)

பஞ்சமுக ஆஞ்சநேயரை பக்தியுடன் தொழுதிடவே
அஞ்சுவது ஏதுமின்றி அருள் தந்து காத்திடுவார்!
வராகம் ஒரு முகம், வடக்கு முகம் பார்த்திருக்கும்
வராது இடரெல்லாம், வரம் தந்து காத்திருக்கும்!
நரசிம்மம் ஒரு முகமாம், நல்லருள் புரிந்திருக்கும்
சீரம தசை நீக்கி விடும், தெற்கு முகம் பார்த்திருக்கும்!

ஹயக்ரிவர் ஒரு முகமாம் மேல் முகம் பார்த்திருக்கும்
சகல கலா பாண்டித்யம், சந்தோஷம் தந்துவிடும்!
கருடனும் ஒரு முகமாம், கடிய விஷம் நீக்கிவிடும்
உருவான மேற்கு முகம், உந்து நோக்கும் திருமுகமாம்!

ஆஞ்சநேயர் ஒரு முகமாம் ஐந்தாவது திருமுகமாம்
வஞ்சனை விரோதங்கள் வரட்டுக் குரோதங்கள்
பில்லி சூனியங்கள், பெரும்பகை அகற்றிவிடும்
உள்ளமெல்லாம் நிறைந்திருந்து, உற்ற துணை ஆகிவிடும்!

கிழக்கு முகம் பார்த்திருக்கும் கேடின்றி காத்திருக்கும்
வழக்குகள் வெற்றிதரும் - வாழ்விலும் வெற்றி தரும்!
கன்னிமார் கல்யாண காலங்கள் கைகூடும்!
எண்ணம் போல் மழலைகள் எழிலாகத் தோற்றுவிக்கும்!

ஐந்துமுக ஆஞ்சநேயர் அனுதினமும் அருள்தரவே
செந்தூரப் பொட்டுமிட்டு சிந்தனை ஒன்றாக்கி
வாலில் பொட்டுமிட்டு வாழ்த்துக்கள் பாடிடுவோம்
பாலில் நைவேத்தியம் பழங்கள் படைத்திடுவோம்!

வெற்றிலை சுருளோடு வடையில் மாலைகளும்
சுற்றியே சாற்றிருவோம் பற்று நாம் கொண்டிடுவோம்!
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம!
ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம!!

மோகன்