வெற்றி மயில் ஏறியவனே!




‘‘மதுரை நாட்டினி லேவாழ் வாகியஅருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும் மருவு மாற்றெதிர் வீறே டேறிட அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்பகலி ராத்திரி யோயா ஆலைகள் புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி லளகை போற்பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே. - என்பது இளையனார் வேலூர் பாடல்.மதுரையை தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டினில் வாழ்ந்திருந்த சமணர்களது மதக் கோட்பாடுகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னனின் உடம்பில் திருநீற்றைப் பூசி அதனால் பிறவியிலேயே அவனுக்கிருந்த கூனையும் நிமிர்த்தி, பெருகி  ஓடும் வைகை ஆற்றில் திருப்பாசுரம் எழுதப்பட்ட ஏடு வெள்ளத்தை எதிர்த்து மேலே செல்லவும், அழகு நிறைந்த மங்கையர்க்கரசியின் சிவ கதியின் பெருமையால், மாறுபட்டு பகைத்திருந்த சமணர் கூட்டம் பூண்டோடு அழியவும் வெற்றி பெற்ற  தலைவனே!

புதிதாகப் பழுத்த மாங்கனிகளிலிருந்து சிந்திய இனிய சாரல்கள், இரவு பகலாக வேலை செய்யும் கரும்பாலைகளில் விழுந்து மேலே ஓடி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில்போய் பாயும் படிச் சேருகின்ற இயற்கை வளத்தின் பெருமையினால் புகழ்  பெற்றதும், புலவர்களால் பாடப் பெற்றதுமான வேலூரில் விளங்கும் ஒப்பற்ற தலைவனே! தலத்தில் பாடிய மற்றொரு திருப்புகழ் பின்வருமாறு: ‘‘மாலால் உழன்றணங்கை ஆர் மாமதன் கரும்பின்வாகோடழிந் தொடுங்க முதல் நாடிவாழ்வான கந்த! முந்த மாறாகி வந்தடர்ந்தமாசூரர் குன்ற வென்றி மயிலேறிமேலாகும் ஒன்றமைந்த மேல் நாடர் நின்றிரங்கவேலால் எறிந்து குன்றை மலைவோனேவேய்போலவுத் திரண்ட தோள் மாதர் வந்திரைஞ்சுவேலூர் விளங்க வந்த பெருமாளே!சிவபிரான் மீது புஷ்ப பாணத்தைச் செலுத்து என்று தேவர்கள் கூறியதைக் கேட்டு காமன் அஞ்சி, மயங்கி ஏக்கமுற்றான். சிவபிரான் மீது அம்பு எய்ய மாட்டேன் என்று காமன் கூற பிரம்மன் உனக்கு சாபம் இடுவேன் என்றான்.

‘‘உனது சாபத்தால் துன்பம் அடைவதை விட ஈசன் மீது அம்பு செலுத்தி மாளுதல் நன்றெ’’னக் கூறினான் காமன். ‘‘நினது வாய்ச்சூளின் துன்புழந்து படுதலிற் காளகண்டன் முன்பு சென்று கணைகள் தூஉய் மாளினும் சிறந்த தம்ம மற்றும் உய்யலாகுமே’’ - கந்த புராணம்.அவ்வாறே சென்று சிவன் மீது அம்பு எய்து அவர் நெற்றிக்கண் நெருப்பினால் மாண்டான்.பொருளுரை : ‘இன்ன செய்வது’ என்று புரியாமல் மயங்கி, சிவபிரான் மீது மலர் பாணத்தைச் செலுத்தும்படி தேவர்கள் கூறியதைக் கேட்டு, இக்காரியம் செய்தால் நான் பிழைப்பேனோ?’’ என்று பெரும் வருத்தமுற்றான், காமன். தன்மீது கரும்பு  வில்லெறிந்த அவன் தன் கணையோடு உடலும் அழிந்து போகும்படி முன்பு செயலை முடித்தவரான சிவபெருமானின் செல்வ மைந்தனே! ஆணவத்தின் உந்துதலால் பகையைப் பூண்டு எதிர்த்து வந்து சூரபத்மன் முதலானோர் அடங்கும்படி  வெற்றி மயில் ஏறியவனே! மேலான பரம் பொருளைச் சதா தியானிக்கும் விண்ணவர்கள் அசுரர்களால் துன்பம் அடைந்து தம்குறை கூறி இரங்கி வேண்ட, வேற்படையால் கிரௌஞ்சத்தை அழித்தவனே!

பசுமையான மூங்கில் போன்ற தோட்களை உடைய வள்ளியும் தெய்வயானையும் வந்து வணங்கி வழிபடும் பெருமாளே! வேலூரில் வந்து விளங்க வீற்றிருக்கும் பெருமாளே!’’வேலூர் வேலாயுதனை வணங்கி விட்டு உத்திரமேரூர் சென்று அங்கிருந்து மீண்டும், சுமார் 12 கி.மீ தொலைவிலுள்ள விசூரை வந்தடைந்தோம். ஊருக்குள் சென்று கோயில் சாவியை வைத்திருந்த அன்பரை அழைத்து வந்து கோயிலைத்  திறக்கச் செய்து உள்ளே சென்றோம். மிகப்பழமையான கோயில்; சரியான பராமரிப்பு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இறைவன் அகஸ்தீஸ்வரர்; இறைவி அகிலாண்டேஸ்வரி. முருகன் சிலை பின்னமடைந்து விட்டதால் புதிதான சிலை வடிக்கப்பட்டது என்று  கேள்விப்படுகிறோம். நவக்கிரகங்கள் உள்ளன. தற்போது விசூர் என்று அழைக்கப்படும் இத்தலமே அருணகிரியார் பாடிய ‘விசுவை’ திருத்தலம் என்ற நம்பிக்கையில் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

வரையைமு னிந்து விழவெக டிந்து
வடிவெலெ றிந்த ...... திறலோனே
மதுரித செஞ்சொல் குறமட மங்கை
நகிலது பொங்க ...... வரும்வேலா
விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த ...... முருகோனே
விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவைவி ளங்கு ...... பெருமாளே.
பாடலில்,
அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து
அறிவுமெ லிந்து ...... தளராதே
அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு
னடியிணை யன்பொ ...... டருள்வாயே
 - என்ற பிரார்த்தனையையும் குறிப்பிடுகிறார்.

விசுவை இறைவனை வணங்கி மீண்டும் உத்திரமேரூர் வந்தடைகிறோம். பிறகும் வெகுநேரம் கழித்துத்தான் கோயில் திறக்கப்பட்டது. கருவறையின் ஒருபுறம் திரிபுரசுந்தரியும் சோமநாதேஸ்வரரும் வீற்றிருக்க, பாலசுப்ரமணியப் பெருமான்  சுமார் ஆறு அடி உயரமுள்ள மூர்த்தியாக நிற்கிறார். ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு, சிவபெருமானைப் பூசை செய்யும் கோலத்தில் சற்று சாய்வாக உள்ளார். மூன்றாகப் பிரிந்து விளங்கும் ஜடாபாரம், கைகளில் நாகாபரணம்,  காதுகளில் குண்டலங்கள் மற்றும் ருத்ராட்சம் ஆகியவை காணப்படுகின்றன. கோட்டத்தில் சங்க நிதி, குபேரன் உள்ளனர். ஒரு ஓரத்தில் வரசித்தி விநாயகர், செல்வ கணபதி, விஸ்வநாதர், வைஷ்ணவி, பாலசுப்ரமணியர், அனந்தன், வாசுகி,  காமதேனு, வீரசாஸ்தா, தக்ஷகன், மயிலுடன் ஆறுமுகர் ஆகியோர் கருவறையைச் சுற்றி விளங்குகின்றனர். வலம் வருகையில் ஐந்து படிகள் இறங்கி சுமித்திர சண்டிகேஸ்வரரைத் தரிசிக்கிறோம்.கருவறை வாசலில் சுமுகன் - சுதேசன் எனும் இரு துவார பாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் இடதுகையில் தாமரையும் வலக்கையில் நீலோத்பலமும் பிடித்த கஜவல்லியின் உருவத்தையும் காண்கிறோம். முருகனின் இருதேவியரும் சேர்ந்த  திருவுருவம் இது என்று கேள்விப்பட்டு வியக்கிறோம். வெளியில் பலி பீடம், கொடி மரம் மற்றும் யானை ஆகியவற்றைக் காண்கிறோம். ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் தேவியும் உள்ளனர். கோயில் நுழைவாயிலின் அருகில் தர்ம சாஸ்தா சந்நதி உள்ளது. இது பிற்காலக் கோயில் என்றுதான் தோன்றுகிறது. உத்திரமேரூரில் அருணகிரியார் நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அவற்றின் ஒரு சில பகுதிகளைக் காண்போம்.‘சுருதி மறைகள்’ எனத் துவங்கும் பாடலில் முருகனின் திருவடிகளின் பெருமையைப் போற்றிப்பாடுகிறார்.

சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளிலிருடி யெழுபேர்கள்..... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லிடுவி னுலகோர்கள்...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி........ யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூற..... அருள்வாயே

பொருள் : உபநிடதங்கள், வேதங்கள், இந்திரன், அக்னி, எமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் அஷ்ட திக் பாலகர்கள், 48,000 முனி சிரேஷ்டர்கள், அத்ரி, ஆங்கிரஸர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர், வசிஷ்டர்,  விஸ்வாமித்திரர் எனும் குற்றமற்ற ஏழு ரிஷிகள், சூரியன், சந்திரன், அக்னி எனும் முதன்மை ஒளி கொண்ட மூவர், இத்தன்மைத்தவர் என்று சொல்லுதற்கு இல்லாதவரும், யுக முடிவில் அழியாது இருப்பவருமான பிரகிருதி புருடர்கள்,  அநாதிநாதர், ஆதிநாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர், சகோதநாதர், சத்ய நாதர், மச்சேந்திர நாதர், மதங்க நாதர், வெகுளிநாதர் எனப்படும் நவநாத சித்தர்கள், எண்ண இயலாத விண்மீன்கள் உலகில் இருப்பவர்கள், வேத விற்பன்னர்கள், கோடிக்  கணக்கிலுள்ள அரிய சமயவாதிகள், வானவர் முதல் அடியார்கள் வரையிலான நூறு கோடியர், திருமாலும், பிரமனும் ஆன சாரூப கதி பெற்ற ஒரு கோடியர் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் மீண்டும் முயன்று அறிந்து கொள்ள  முடியாத உனது திருவடிகளை அடியவனும் அறிந்து கொள்ளும்படி அறிவுள் புகுந்து ஊற்றெடுக்க அருள்வாயாக ! கொள்ளும்படி அறிவுள் புகுந்து ஊற்றெடுக்க அருள்வாயாக!
 
பாடலின் பிற்பகுதி :-
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள்........ சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லிடுவி னுலகோர்கள் ....... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி............... யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறிவு மறிவூற....... அருள்வாயே

மலைகள் யாவும் பொடிந்து போக, அவுணர் நகர்களும் அழிவுடைய, மகர மீன்களை உடைய கடல் வற்றி சேறாக, மாசூரன் ஆட்சி அடங்க, போய்கள் கூத்தாட, வெற்றி மகள் மகிழும்படி தொல்லை அவுணர் தலைகள் துள்ளி விழ, இரை தேடி  வரும் நாய்களும் நரிகளும் காக்கைகளும் பசி தணிய, அலை மோதும் ரத்த ஆறுகள் எங்கும் பரவிப்பாய எமனும் அஞ்சி அடி வணங்க, இரு கமல கரங்களில் ஒன்றில் உள்ள விடுவேற்படையை வேகமாக ஏவி விட்ட முருகப் பெருமானே!  வடமேரு நகரில் (உத்திரமேரூர் ) உறையும் தேவர்கள் பெருமாளே!
 
‘‘வாலசுந்தர் சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை
 வாணி பஞ்சபாணி தந்த முருகோனே
மாயை ஐந்து வேகம் ஐந்து, பூதம் ஐந்து, நாதம் ஐந்து
 வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே
வேலை அன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே
வீரமங்கை வாரிமங்கை பாரின் மங்கை மேவுகின்ற
மேருமங்கை ஆள வந்த பெருமாளே!

பொருள்:- இளம் பிறைச்சந்திரனைத் தரித்தவரும், பல சந்தங்களிலுள்ள வேத மந்திர உருவத்தினளும் அம்பிகையும் கலைமகளை ஒரு கூறாகக் கொண்டவளும், ஐந்து மலர்ப் பாணங்கள் உடையவளும் (மா, அசோகு, நீலோத்பலம், முல்லை,  தாமரை) ஆகிய தேவியும் தந்தருளிய முருகோனே! மாயை ஐந்து :-

4தமம் (ஜீவ சைதன்யத்தை மறைப்பது)
4மாயை - (ஜகத்தை உண்டாக்குவது )
4மோகம் - விபரீத ஞானத்தைக் கொடுப்பது .
4அவித்தை - உண்ைம அறிவை மறைப்பது .
4அநித்தியம் - நித்ய பொருளுக்கு
அந்நியமாவது.
 
வேகம் ஐந்து :- ஐம்புலன்களை வேகமாகச் செலுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் பஞ்ச தன் மாத்திரைகள். [ மனோ வேகம், வாயு வேகம், ஒளி வேகம், அசுவ வேகம் என்றும் கூறுவர்].பூதம் ஐந்து :- நிலம், நீர், தீ, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி.[ சிவம், சக்தி, சதா சிவம், ஈஸ்வரம், சுத்த வித்தை எனும் ஐந்து சிவ தத்துவங்களைக் குறிப்பதாக குக ரசபதி அவர்கள் கூறியுள்ளார்]கூப்பிட்ட நேரத்தில் அன்புடன் உதவி புரிய வந்த ஒற்றைக் கொம்புடைய விநாயகப் பெருமானான யானையைக் கண்டு வேடர் குலப் பெண்ணாகிய வள்ளி பயந்து ஓடி வந்து அடைக்கலம் புக அவளை அணைத்தவனே! வீரலட்சுமி. பாற்கடலில் தோன்றிய லட்சுமி, பூதேவி இவர்களனைவரும் விரும்பி வாழ்கின்ற உத்தர மேருவில் ஆட்சி புரியும்

பெருமாளே!
‘‘அனைவரும் துதிக்கின்ற உன் திருவடிகளையும், அதிபல
வஜ்ரவாகுவாம் பன்னிரு தோள்களையும், அழகிய
கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும்
எப்போதும் தியானிப்பேனோ’’
- என்ற விருப்பத்தையும் பாடலில் முன்

வைத்துள்ளார்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி