பம்மல் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை



சென்னை, பம்மல் சங்கர் நகரில் உள்ளது. ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம். இங்குள்ள ஸ்ரீ ஐயப்பனுக்கு நவம்பர் 24 அன்று தொடங்கிய  கோடி அர்ச்சனை டிசம்பர் 9 வரை நடைபெற உள்ளது.

கோடி அர்ச்சனை

ஒரு முறை அழைத்தாலே ஓடோடி வரும் ஐயப்பனை, கோடி முறை அழைத்தால்? ஆம், அன்பர்களே, கோடி முறை ஐயப்பனை அர்ச்சனை செய்யும்  ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இந்த வருடம் நமது பம்மல் சங்கர்நகர் ஸ்ரீ தர்மசாஸ்தா குருவாயூரப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு  கோடி அர்ச்சனை, நவம்பர் மாதம் 24ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 9ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஸ்ரீ தர்ம சாஸ்தா, சிவன் மலைக்கும்,  திருநீர் மலைக்கும் இடைப்பட்ட பம்மல் ஸ்ரீ சங்கர்நகரில் மலையடிவாரத்தில் அமைதியான சூழ்நிலையில் தர்மசாஸ்தா ஆலயம் அமைந்துள்ளது.

கோடி அர்ச்சனை விபரங்கள்

தினமும் அதிகாலை மகா கணபதி ஹோமத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பமாகும். ஏழு நாட்களுக்கு ஸப்த, ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெறும்.  கோடி அர்ச்சனை முடிவில் தன்வந்திரி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், பகவதி சேவை, சுதர்சன ஹோமம், சாஸ்தா ஹோமம், 108 சுமங்கலி  (சுவாசினி) பூஜையும், ஐயப்ப குருசாமிகளுக்கு குரு பூஜையும் நடைபெறும்.

கோடி அர்ச்சனை நேரங்கள்

காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை கோடி அர்ச்சனை.
மதியம் 12.30 மணி அளவில் அன்னதானம்.
மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோடி அர்ச்சனை.
இரவு 8.00 மணி அளவில் அன்னதானம்.

எல்லா நாட்களிலும் இரவு 7.30 மணியளவில் அத்தாழ பூஜை நடைபெறும் சமயத்தில் கோடி அர்ச்சனை செய்த விபூதியை கொண்டு ஸ்ரீ ஐயப்பனுக்கு  அபிஷேகம் நடைபெறும். மேற்படி கோடி அர்ச்சனையில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும், மன நிம்மதி பெறுவதற்கு ஸ்ரீ  தர்ம சாஸ்தாவை பிரார்த்தனை செய்வோம்.

09.12.2018 வரை - தினமும் காலை மஹா கணபதி ஹோமம் நடைபெறும்.
1.12.2018 முதல் 7.12.2018 வரை     - சப்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெறும்.
30.11.2018 மற்றும் 7.12.2018 (வெள்ளிக்கிழமை)-  மாலை. 6.30க்கு சிறப்பு பகவதி சேவை நடைபெறும்.
8.12.2018  காலை 7.30 மணி முதல் மஹாலட்சுமி ஹோமம் தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், சாஸ்தா ஹோமம் நடைபெற உள்ளது.
9.12.2018 காலை 7.30 மணி முதல் குருபூஜை மற்றும் அதனைத்தொடர்ந்து சுவாசினி பூஜையும் (108 சுமங்கலி பூஜை) நடைபெறும்.
ஸ்ரீ ஐயப்பனுக்கு பகல் 11.30 மணியளவில் சிறப்பு களபாபிஷேகம் (சந்தனாபிஷேகம்) பஞ்ச வாத்தியத்துடன் நடைபெறும்.

- நடேசன்