ஆனந்த வாழ்வளிக்கும் ஆனைமுகன் கிருஷ்ணன் ஸ்லோகங்கள்அபூர்வ ஸ்லோகங்கள்

1.கணேச பஞ்சரத்னம்


முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்.

மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக்காப்பவர்.

நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங் களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி, புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன் மனம் தந்து விளங்கும் அவரை
வணங்குகின்றேன்.

அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்

ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர்.பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே  ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்

இந்த கணேச பஞ்சரத்னத்தை யார் தினமும் காலையில் ஸ்ரீகணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறானோ, அவன் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

2. ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம்


ஸ்ரீயாச்லிஷ்டோ விஷ்ணு: ஸ்திரசரகுருர்வேதவிஷயோ
தியாம்ஸாக்ஷீ சுத்தோ ஹரிரஸுர ஹந்தாப் ஜநயன:
கதீ சங்கீ சக்ரீ விமலவனமாலீ ஸ்திரருசி:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ க்ஷிவிஷய:

ஸ்ரீலஷ்மி தேவியை அணைந்து, சராசரத்திற்குத் தலைவராய் வேதப்பொருளாய், புத்திகளுக்கு சாக்ஷியாய், அசுரர்களை அழித்தவராய், கமலக்கண்ணனாய் கதை, சங்கு, சக்ரம், வனமாலை இவற்றைக் கொண்டவராய் உலகத்தாருக்கு காக்கும் விஷ்ணு வாய் இருக்கும் கண்ணபிரான் என் கண்ணுக்குத் தெளிவாய் காட்சி தரட்டும்.

யத:ஸர்வம் ஜாதம் வியதனிலே முக்யம் ஜகதிகம்
ஸ்திதௌநி     சேஷம் யோவதி நிஜஸுகாம்சேந மதுஹா
லயே ஸர்வம் ஸ்வஸ்ன் ஹரதி கலயா யஸ்து ஸ விபு:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:

ஆகாயம், காற்று முதலிய இந்த பிரபஞ்சம் முழுதும் எவரிடமிருந்து தோன்றியதோ, எவர் தனது ஆனந்தாம்சத்தால் தோன்றிய உலகை முழுமையாகக் காக்கிறாரோ, பிறகு, விபுவான எவர் ப்ரளயகாலத்தில் எல்லாவற்றையும் தன்னிடமே இழுத்து லயிக்கச் செய்கிறாரோ அத்தகைய உலக ரக்ஷகணான கண்ணன் என் கண்முன்னே தோன்றட்டும்.

அஸுநாயம்யாதௌ யமநியமமுக்யை: ஸுகரணை:
நிருத்யேதம் சித்தம் ஹ்ருதி விலயமாநீய ஸகலம்
யமீட்யம் பச்யந்தி ப்ரவரமதயோ மாயின மஸெள
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:

சான்றோர் சீரிய கரணங்கள் மூலம் யமம் நியமம் முதலியவற்றைச் செய்து, மனதைக் கட்டுப்படுத்தி, மற்றதெல்லாம் ஒடுங்கச் செய்து, மாயையை வசப்படுத்திய பரமனை நேரேகாண்கின்றார்களே அப்பரமன் என் கண்முன்னே காட்சியளிக்கட்டும்.

ப்ருதிவ்யாம் திஷ்டன்யோ யமயதிமஹீம் வேத நதரா
யத்யாதௌ வேதோ வததி ஜகதாமீசமமலம்
நியந்தாரம் த்யேயம் முனிஸுரந்ருணாம் மோக்ஷதமஸெள
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:

பூமியில் நின்றுகொண்டு பூமியைக் கட்டுப்படுத்துகிறார். ஆனால் அவரை எவரும் அறிந்துகொள்ளவில்லை என்று வேதம் கூறுகிறது. உலகை அடக்கியாளும் ஈசனை, தியானம் செய்ய வேண்டியவனை, முனிவர், தேவர்கள், மனிதர் ஆகியோருக்கு மோக்ஷம் அளிக்கும் அப்பெருமான் என் கண்முன்னே தோன்றட்டும்.

மஹேந்த்ராதிர்தேவோ ஜயதி திதிஜான்யஸ்ய பலதோ
ந கஸ்ய ஸாவாதந்த்ர்யம் க்வசிதபி க்ருதௌ யத்க்ருதி ம்ருதே
பலாரா தேர்கர்வம் பரிஹரதியோஷிஸெள விஜயிந :
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணே ஷிக்ஷிவிஷய:

மகேந்திரன் முதலிய தேவர், அவரது பலத்தை கொண்டு அசுரர்களை வெல்கின்றனர், அவர் வேலையன்றி எவருக்கும் எதிலும் தன்னுரிமை கிடையாது. இந்திரன் வெற்றி பெற்றாலும் கர்வம் அடையாவண்ணம் அவனையாளும், உலகம் போற்றும் அந்த ஈசனை நான் கண்ணால் காண விழைகிறேன்.
விநா யஸ்ய த்யானம் வ்ரஜதி பசுதாம்ஸுகர முகாம்
விநா யஸ்ய த்யானம்  ஜநிம்ருதிபயம் யாதி ஜனதா
விநா யஸ்ய ய்ம்ருத்யா க்ரு சதஜநிம் யாதி ஸ விபு :
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷிவிஷய:

உலக மக்கள் அவரை தியானம் செய்யவில்லையெனில் பன்றி முதலிய ஐந்தறிவிகளாகவே ஆகி விடுவார்கள். பிறப்பு இறப்பு ஆகியவற்றால் பயத்தையும் கொள்வர். அவர் நினைவின்றி இருந்தால் ஜடப்பொருட்களாகவும் அவர் பிறப்பர். அத்தகைய அகில லோக சரண்யணான கிருஷ்ணன் என் கண்முன்னே தோன்றட்டும்.

நராதங்கோட்டங்க:: சரணசரணோ ப்ராந்திஹரணோ
கனச்யாமோ வாம:வ்ரஜ சிசுவயஸ்யோ ரர்ஜூனஸக:
ஸ்வயம்பூர் பூதாநாம் ஜனக உசிதாசாரஸகத:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ ஷிக்ஷவஷய:

மனிதரின் கவலையை யகற்றுபவர், சரணம் என்போர்க்கு பாதுகாப்பு அளிப்பவர், மயக்கம் தெளிவிப்பவர், நீருண்ட மேகமெனத்திகழ்பவர், குறும்புக்காரர், யாதவ நண்பர், அர்ஜூனனுக்குத் தோழர், தானேதோன்றியவர், ஜீவராசிகளுக்குத்தந்தை, நல்லொழுக்கமுடையோருக்கு சுகமளிப்பவர், அத்தகைய கிருஷ்ணர் எனக்கு காட்சியளிக்கட்டும்.

யதா தர்மக்லாநிர்பவதி ஜகதாம் ஜகத்..கரணீ
ததாலோகஸ்வாமீ ப்ரகடிதவபு:ஸேது த்ருகஜ:
ஸதாம் தாதா ஸ்வச்சோ நிகமகண கீதோ வ்ரஜபதி:
சரண்யோ லோகேசோ மம பவது க்ருஷ்ணோ க்ஷிவிஷய:

உலகையழிக்கும் தர்ம நலிவு ஏற்படும் பொழுதெல்லாம் தானே தோன்றி உலகைக் காப்பவர். ஸேதுவை கட்டிய பழையவர். நல்லோரைத் தாங்குபவர், தூயவர், வேதம் போற்றும் யது குலத்தலைவர், அத்தகைய க்ருஷ்ணர் எனக்கு காட்சியளிக்கட்டும்.

தொகுப்பு : ந. பரணிகுமார்