தேவியருடன் நவகிரக நாயகர்கள்திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கருங்குளம் என்னும் சிற்றூர் உள்ளது. ஊரின் முகப்பில் சிறுகுன்றின்மீது திருமால் கோயில் உள்ளது. அடிவாரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இக்கோயிலில் புகழ்பெற்ற நவகிரகங்களின் சந்நதி உள்ளது. வழக்கமாக கோயில்களில் நவகிரகங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், இத்திருக்கோயிலில் தத்தமது தேவியருடன் நவகிரக நாயகர்கள் காட்சி

தருகின்றனர். அதாவது, சூரியன் - உஷாதேவி, சந்திரன் - ரோகிணிதேவி, அங்காரகன் - சக்திதேவி, புதன் - இனாதேவி, குரு - தாராதேவி, சுக்கிரன் - சுகீர்த்தி தேவி, சனீஸ்வரன் - நீலாதேவி, ராகு - சிம்கீதேவி, கேது - சித்ரலேகாதேவி. இவ்வாறு தம்பதி சமேதராக வீற்றிருக்கும் நவகிரகங்களை தரிசித்து வரும் தம்பதியினருக்கு கவலைகள் தீரும்.

- கோட்டாறு ஆ. கோலப்பன்.