வளம் பல தரும் வைகுண்ட ஏகாதசி



மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசிகள். ஒவ்வொரு மாதமும் சுக்ல பட்சம் என்ற வளர் பிறையிலும் கிருஷ்ணபட்சம் என்ற தேய் பிறையிலும் வரும் 11வது நாள், ஏகாதசி. ஏகம் என்றால் ஒன்று, தசி என்றால் பத்து என்று பொருள்படும். ஏகாதசி என்றால் 11வது நாள் என்பதாகும்.

ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஐக்கியப்படுத்தும் நாளே ‘வைகுண்ட ஏகாதசி’. மார்கழி மாத வளர்பிறையில் வருகிற ஏகாதசியே பெரிய ஏகாதசி அதாவது ‘வைகுண்ட ஏகாதசி’யாக கொண்டாடப்படுகிறது.

கிருதயுகத்தில் ‘நதிஜஸ்’ என்ற அரக்கனின் மகன் முரன், மக்களையும் தேவர்களையும் பயமுறுத்தி கொடுமை புரிந்து வந்தான். அவனால் பெருந்துன்பங்களை அடைந்த அவர்கள் பொறுக்க முடியாமல் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். மகா விஷ்ணு முரனுடன் கடும் போர் புரிந்து களைப்படைந்த நிலையில் ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நய வஞ்சமாக முரன் அவரைக் கொல்ல முற்பட்டான்.

அச்சமயம் மகாவிஷ்ணுவின் 11 இந்திரியங்களிலிருந்து ஒரு சக்தி, செளந்தர்ய தேவதையாகத் தோன்றி முரனுடன் போரிட்டு அவனை அழித்தாள்! தனது 11 இந்திரியங்களிலிருந்து தோன்றிய அவளுக்கு ஏகாதசி’ என்று பெயரிட்டார். ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்றும் கேட்டார். ‘‘இந்த நாளில் எவர் தங்கள் நாமத்தை ஜெபித்து விரதம் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் பாவங்களைப் போக்கி மோட்சம் (வைகுண்ட பதவி) அளிக்க எனக்கு சக்தி தர வேண்டும்’’ என்று கோரினாள் ஏகாதசி.

‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று திருமால் வரம் அருளிய நன்னாளே வைகுண்ட ஏகாதசி. ஒருமுறை ‘வைகுண்ட ஏகாதசி’ விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களை கடைபிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால், இது முக்கோடி ஏகாதசி என்றும், மோட்ச ஏகாதசி என்றும், பீம ஏகாதசி என்றும் வர்ணிக்கப்படுகிறது.

பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் ‘நஞ்சுண்ட ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. ‘‘அர்ச்சிப்பதற்கு துளசியும், விரதங்களில் ஏகாதசியும் எனக்கு உகந்தவை’’ என்று விஷ்ணு பகவான் கூறியிருக்கிறார். ‘ஏகாதசிக்கு சமமான விரதம் உலகில் இல்லை’ என்று அக்னிபுராணம் கூறுகிறது. இவ்விரதம் இருப்பவர்களுக்கு சகல பாக்கியங்கள் கிடைக்கும். கல்வி, உயர்பதவி குழந்தை பாக்கியம் கிட்டும். பாவங்கள் அகலும். எட்டு வயது முதல் 80 வயது வரை அனைவரும் இவ்விரதத்தை கடைப்பிடித்து பகவான் மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெற்று பேரின்பமாக வாழ்வோம்!

- அயன்புரம் த.சத்தியநாராயணன்

இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாளில், மஹாவிஷ்ணு கொலுவிருக்கும் 108 திவ்ய தேசங்களையும் போற்றிப் பாடுவது மிகப் பெரிய புண்ணியமாகும். அந்த 108 வைணவத் திருத்தலங்களில் 84 தமிழ்நாட்டிலும், 11 கேரளாவிலும், 2 ஆந்திராவிலும், 4 உத்தரப் பிரதேசத்திலும், 3 உத்தரகாண்ட்டிலும், 1 குஜராத்திலும், 1 நேபாளத்திலும், 2 வானுலகிலும் உள்ளன. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று (08.01.2017) இந்த 108 திவ்ய தேச பெருமாள்-தாயார் போற்றியைப் பாராயணம் செய்தால் 108 திவ்யதேசங்களையும் தரிசித்த புண்ணியமும் மஹாவிஷ்ணு-தாயார் திருவருளும் கிட்டும்.

* திருவரங்கம். ரங்கநாதப்பெருமாள்  ஸமேத ரங்கநாயகி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் பகுதி) அழகிய மணவாளப் பெருமாள் ஸமேத வாசலட்சுமி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்தஞ்சை மாமணிக் கோயில். நீலமேகப்பெருமாள் ஸமேத செங்கமலவல்லித்தாயார்திருவடிகள் போற்றி போற்றி.
* அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் வடிவழகியநம்பி பெருமாள் ஸமேத அழகியவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* உத்தமர் கோயில் புருஷோத்தமப்பெருமாள் ஸமேத பூர்ணவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவெள்ளறை புண்டரீகாக்ஷப்பெருமாள் ஸமேத பங்கயச் செல்வித்தாயார்  திருவடிகள் போற்றி போற்றி.
* புள்ளபூதங்குடி வல்வில் ராமன் ஸமேத பொற்றாமறையாள் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* கோயிலடி அப்பக்குடத்தான் ஸமேத இந்திராதேவி (கமலவல்லி) தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ஆண்டளக்குமய்யப் பெருமாள் ஸமேத ரங்க நாயகித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.

* தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் ஆமருவியப்ப பெருமாள் ஸமேத செங்கமலவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.   
* திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் அருள்மாகடல் பெருமாள் ஸமேத திருமாமகள் திருவடிகள் போற்றி போற்றி.   
* திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் சாரநாதப்பெருமாள் ஸமேத சாரநாயகித்தாயார்திருவடிகள் போற்றி போற்றி.  
* தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் ஸமேத தலைச்சங்கநாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* கும்பகோணம் சார்ங்கபாணி சுவாமி கோயில் சார்ங்கபாணி, ஆராவமுதப்பெருமாள் ஸமேத கோமளவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் ஹரசாபவிமோசனப்பெருமாள் ஸமேத - கமலவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* ஒப்பிலியப்பன்  ஒப்பிலியப்பப்பெருமாள் ஸமேத  பூமிதேவி திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் ஸமேத கண்ணபுர நாயகி திருவடிகள் போற்றி போற்றி.   

* திருவாலி-திருநகரி கோயில்கள் வயலாளி மணவாளப்பெருமாள் ஸமேத அம்ருதகடவல்லித்தாயார், வேதராஜப்பெருமாள் ஸமேத
* அமிர்தவல்லித்தயார் திருவடிகள் போற்றி போற்றி.
* நாகப்பட்டினம் (திருநாகை) சௌந்தர்யராஜப்பெருமாள் ஸமேத சௌந்தர்யவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* நாச்சியார்கோயில் நறையூர் நம்பிபெருமாள் ஸமேத வஞ்சுளவல்லி நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* நாதன் கோயில் ஜகந்நாதப்பெருமாள் ஸமேத செண்பகவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருஇந்தளூர் மாயவரம் பரிமளரங்கநாதப்பெருமாள் ஸமேத புண்டரீகவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருச்சித்ரகூடம் (சிதம்பரம்) கோவிந்தராஜப்பெருமாள் ஸமேத புண்டரீகவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) தாடாளப்பெருமாள் ஸமேத லோகநாயகி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.

* திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகப்பெருமாள் ஸமேத - பத்மாசானவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கண்ணங்குடிலோகநாதப்பெருமாள் ஸமேத லோகநாயகி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.   
* திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் ஸமேத அபிஷேகவல்லித்தாயார்திருவடிகள் போற்றி போற்றி.
* கபிஸ்தலம் கஜேந்திரவரதப்பெருமாள் ஸமேத ரமாமணிவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் ஸமேத  மரகதவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருமணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணப்பெருமாள் ஸமேத  புண்டரீகவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதப்பெருமாள் ஸமேத வைகுண்டவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தபெருமாள் ஸமேத அம்ருதகடவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்தேவனார்த் தொகை தேவநாயகப்பெருமாள் ஸமேத சமுத்ரதனயா தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவண்புருடோத்தமம் புருஷோத்தமப்பெருமாள் ஸமேத புருஷோத்தமநாயகி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கப்பெருமாள் ஸமேத ஸ்வேதபுஷ்பவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் பெருமாள் ஸமேத செங்கமலவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருமணிக்கூடம் மணிக்கூடநாயகப்பெருமாள் ஸமேத  திருமகள் நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்காவளம்பாடிகோபாலக்ருஷ்ண பெருமாள் ஸமேத செங்கமலநாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவெள்ளக்குளம் ஸ்ரீ நிவாசப்பெருமாள் ஸமேத பத்மாவதி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் பெருமாள் ஸமேத தாமரைநாயகி தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருமாலிருஞ்சோலை கள்ளழகப்பெருமாள் ஸமேத சுந்தரவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கோஷ்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் ஸமேத மகாலட்சுமித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருமெய்யம் சத்யகிரிநாதப்பெருமாள் ஸமேத உஜ்ஜீவன நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்புல்லாணி  கல்யாணஜகந்நாதரப்பெருமாள் ஸமேத கல்யாணவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்தண்கால் தண்காலப்ப பெருமாள் ஸமேத அன்னநாயகித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருமோகூர் காளமேகப்பெருமாள் ஸமேத மோகனவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* கூடல் அழகர் கோயில் கூடலழகப் பெருமாள் ஸமேத மதுரவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிபெருமாள் ஸமேத ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி.
* ஆழ்வார்திருநகரி கோயில், திருக்குருகூர் ஆதிநாதப்பெருமாள் ஸமேத ஆதிநாதவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்துலைவில்லி மங்கலம் அரவிந்தலோசநப்பெருமாள் ஸமேத விசாலக்ருஷ்ணாக்ஷி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* வானமாமலை தோத்தாத்ரி நாதப்பெருமாள் ஸமேத சிரீவரமங்கை தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்புளிங்குடி காய்ச்சினவேந்தப்பெருமாள் ஸமேத  மலர் மகள்நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பேரை மகரநெடுங்குழைக்காத பெருமாள் ஸமேத குழைக்காதுவல்லி நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி. 
* வைகுண்டம் கள்ளப்பிரான் பெருமாள் ஸமேத வைகுந்தவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவரகுணமங்கை (நத்தம்) விஜயாசனப்பெருமாள் ஸமேத வரகுணவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்குளந்தை மாயக்கூத்த பெருமாள் ஸமேத குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)த்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி பெருமாள் ஸமேத  குறுங்குடிவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் ஸமேத கோளூர்வல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி அனந்தபத்மநாப பெருமாள் ஸமேத ஸ்ரீஹரிலட்சுமி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) திருக்குறளப்ப பெருமாள் ஸமேத கமலவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்காட்கரை காட்கரையப்ப பெருமாள் ஸமேத வாத்ஸல்யவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருமூழிக்களம் திருமூழிக்களத்தான் பெருமாள் ஸமேத  மதுரவேணி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்புலியூர் மாயப்பிரான் பெருமாள் ஸமேத பொற்கொடிநாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருச்செங்குன்றூர் இமய வரப்ப பெருமாள் ஸமேத செங்கமலவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருநாவாய் நாராயணப்பெருமாள் ஸமேத மலர்மங்கை நாச்சியார்  திருவடிகள் போற்றி போற்றி.
* திருவல்லவாழ் கோலப்பிரான் பெருமாள் ஸமேத செல்வத்திருக்கொழுந்து தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவண்வண்டூர் பாம்பணையப்ப பெருமாள் ஸமேத கமலவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஸமேத மரகதவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி.     
* திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் ஸமேத வித்துவக்கோட்டுவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கடித்தானம் அற்புதநாராயணப்பெருமாள் ஸமேத கற்பகவல்லி நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவாறன்விளை திருக்குறளப்ப பெருமாள் ஸமேத பத்மாசனி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவயிந்திபுரம் தேவநாதப்பெருமாள் ஸமேத ஹேமாப்ஜவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருக்கோவலுர் திரிவிக்ரம பெருமாள் ஸமேத  பூங்கோவல்நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கச்சி வரதராஜப்பெருமாள் ஸமேத பெருந்தேவி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* அட்டபுயக்கரம் ஆதிகேசவப்பெருமாள் ஸமேத அலர்மேல்மங்கை தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருத்தண்கா (தூப்புல்) தீபப்ரகாசப் பெருமாள் ஸமேத மரகதவல்லித்தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருவேளுக்கை அழகிய சிங்கப் பெருமாள் கோயில் முகுந்தநாயகப்பெருமாள் ஸமேத வேளுக்கைவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பாடகம் பாண்டவ தூதப்பெருமாள் ஸமேத ருக்மிணி-சத்யபாமா திருவடிகள் போற்றி போற்றி.    
* திருநீரகம் ஜகதீசப்பெருமாள் ஸமேத  நிலமங்கைவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* நிலாத்திங்கள் நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் ஸமேத நேரொருவரில்லாவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திரு ஊரகம் உலகளந்தபெருமாள் ஸமேத அம்ருதவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவெக்கா யதோத்தகாரி பெருமாள் ஸமேத கோமளவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்காரகம் கருணாகரப் பெருமாள் ஸமேத பத்மாமணி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கார்வானம் கள்வர் பெருமாள் ஸமேத கமலவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கள்வனூர் ஆதிவராஹ பெருமாள் ஸமேத அஞ்சிலைவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருப்பவள வண்ணம் பவளவண்ணப்பெருமாள் ஸமேத பவளவல்லிநாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பரமேச்சுர விண்ணகரம் பரமபதநாத பெருமாள் ஸமேத வைகுந்தவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் ஸமேத மரகதவல்லித் தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் ஸமேத சுதாவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் வைத்ய வீரராகவப்பெருமாள் ஸமேத கனகவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருநீர்மலை நீர்வண்ணபெருமாள் ஸமேத அணிமாமலர்மங்கை தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவிடவெந்தை நித்யகல்யாணப் பெருமாள் ஸமேத  கோமளவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாள் ஸமேத நிலமங்கை நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஸமேத ருக்மிணி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருக்கடிகை (சோளிங்கர் யோகநரசிம்மப் பெருமாள் ஸமேத அம்ருதவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவேங்கடம் திருவேங்கட முடையான் ஸமேத  அலர்மேல் மங்கை தாயார் திருவடிகள் போற்றி போற்றி. 
* அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) லட்சுமிநரசிம்மர் ஸமேத செஞ்சுலட்சுமி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருவயோத்தி சக்ரவர்த்தித் திருமகன் ஸமேத சீதாபிராட்டி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* நைமிசாரண்யம் தேவராஜ பெருமாள் ஸமேத ஹரிலட்சுமி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* முக்திநாத் ஸ்ரீமூர்த்திபெருமாள் ஸமேத ஸ்ரீ தேவி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.    
* பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயண பெருமாள் ஸமேத அரவிந்தவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* தேவப்ரயாகை நீலமேகப்பெருமாள் ஸமேத புண்டரீகவல்லி தாயார் திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பிரிதி பரமபுருஷ பெருமாள் ஸமேத பரிமளவல்லி தாயார் திருவடிகள்  போற்றி போற்றி.
* திருத்துவாரகை கல்யாணநாராயணபெருமாள் ஸமேத - கல்யாணநாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* வடமதுரை கோவர்த்தனகிரிதாரி ஸமேத  சத்யபாமா நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன் ஸமேத ருக்மிணி, சத்யபாமா திருவடிகள் போற்றி போற்றி.
* திருப்பாற்கடல் க்ஷீராப்திநாதன் ஸமேத கடலமகள் நாச்சியார் திருவடிகள் போற்றி போற்றி.
* பரமபதம் பரமபதநாதன் ஸமேத  பெரியபிராட்டியார் திருவடிகள் போற்றி போற்றி.   

தொகுப்பு: பி.எஸ்., ந.பரணிகுமார்

இம்மாதம் 12ம் தேதி ரமண மகரிஷியின் ஜெயந்தி தினமாக அமைகிறது. அதைப் போற்றும் வகையில் பகவானின் பொன்மொழிகள் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிவிடுகின்றன.