அட்டைப்படம் அட்(டை)டகாசம்!



அட்டைப்பட சரஸ்வதி தரிசனம் கண்களை விட்டு அகலவே இல்லை. தங்கள் இதழ் பக்தி பரவசத்தை அள்ளி அள்ளி வழங்கியது.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

இறைவழிபாட்டால் ஏற்படும் இழப்புகள் கட்டுரை சிந்திக்க வைத்தது. இறைபக்தி நம்மிடம் உள்ள கோபம், பொறாமை, வன்மம், சுயநலம் என்ற மாயைகளை அழிக்கின்றது என்ற உயர்ந்த தத்துவத்தை இயல்பாக ஆசிரியர் வர்ணித்தது அருமையிலும் அருமை. வாசகனாகிய எனது பார்வையில் சொல்ல வேண்டுமென்றால்,
நம் ஆன்மிகம் இதழ் தரும் இறைபக்தி, மேற்கண்ட மாயைகளை அழித்து நிம்மதி, அமைதி, சந்தோஷத்தை அளிக்கின்றது.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை.
 
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும்
நேரத்தில் கைகூப்பி கும்பிட வைத்த ஓவியத்தைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. தெளிவு பெறுஓம் பகுதியில் வாரிசுகள் பதில் மனதை உலுக்கிவிட்டது. ச்யாமளா தண்டகம் ஸ்லோகம் ப்ளஸ் தமிழ் விளக்கம் இதுவரை யாருமே செய்திடாத அரிய முயற்சி.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

சக்தி வழிபாடு அற்புதம். தேவியரின் திருக்கோலங்களும் அவர்களைப் பற்றிய செய்திகளும் அருமையிலும் அருமை.
தொடரட்டும் தங்கள் இறைப்பணி.
- ராகவன், புதுச்சேரி.

சரஸ்வதி பக்தி ஸ்பெஷல் தொகுத்தளிக்கப்பட்டிருந்த கல்விக்கு நல்லருள் புரியக்கூடிய கலைவாணியின் ஆலயங்கள் குறித்த தகவல்கள் சரியான சமயம் பார்த்து வந்திருந்த சமய சஞ்சீவியாக அமைந்திருந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா.

வேதாரண்யம் சந்நதியில் வாணி, திருக்கரங்களில் வீணை இல்லாது வீற்றிருப்பது ஆச்சரியமான தகவலாக இருந்தது. அத்தல அம்பிகையின் பெயரான யாழைப்
பழித்த மொழியாள் என்பதற்கான பெயர்க்காரணத்தையும் அறிந்தோம்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

கல்விக்கடவுளரின் கனிவான தரிசனம் என்ற தலைப்பில்  தொகுத்தளிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள சரஸ்வதியின் பேரருளுக்கு பாத்திரமாகக் கூடிய ஆலயங்களைப் பற்றிய தகவல்கள், தங்கள் இதழிற்கு என்றென்றும் நன்றி பாராட்டும் வகையில் அமைந்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
 
வாசக பக்தர்கள் பங்கேற்ற நவகிரக தலங்கள் சுற்றுலாபயணக் கட்டுரையும் புகைப்படங்களும் நாமும் அதில் பங்கேற்ற உணர்வையும் மகிழ்வையும் ஏற்படுத்தி விட்டன. ஆன்மிகம் பலன் இதழின் இந்த புனிதமான சுற்றுலா பணி போற்றுதற்குரியது. கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியின் அழகிய அட்டைப்படம் கலைமகள் எழுந்தருளியுள்ள அபூர்வ திருத்தலங்களை தரிசிக்க வைத்த கட்டுரையும் விடுமுறை முடிந்து குழந்தைகள் பள்ளி செல்லும் சமயத்தில் வந்த பொருத்தமான அன்பளிப்பு.
- அயன்புரம். த.சத்தியநாராயணன்.

இறைவழிபாட்டால் ஏற்படும் இழப்புகள் என்று படித்தபோது சற்று துணுக்குற்றேன். ஆனால், இழந்தவை இவைதான் என்று அறிந்தபோது அவை இழக்க
வேண்டியவைதான் என்று மனம் தெளிந்தது. உள்ளம் களிப்புற்றது.
- கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.