ஆற்றல் மிகு வடிவங்களும், எண்களும்!



வளம் தரும் வாஸ்து

பொருட்களின் வடிவங்களும் பெங்சூயின் ஒரு அம்சமாக உள்ளன. மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவை இயற்கையின் உருவங்களை ஒத்துப் போகக் கூடிய அளவில் பரிணமிக்கின்றன. பிரமிடுகள் மலையை போலவும், குளிக்கும் நீா்த் தொட்டிகள் குளங்களை போலவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஆழ்மனதில் தொடா்பு கொண்டு இவ்வித வடிவங்களை ஒத்திசைவு செய்து பார்க்கிறோம். கலைஞர்களும் மிகச்சரியான நுட்பமான வடிவங்களை தேர்ந்தெடுத்து வடிக்கின்றனர்.‘சிங்’ எனப்படும் வட்ட வடிவ காசு, வட்டத்தை அதாவது, சுவர்க்கலோகத்தை குறிப்பதாகவும், சதுர வடிவமான காசு நிலத்தை குறிப்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன.

பெங்சூயில் மிக ஆழமாக, அழுத்தமாக பொருள் கொள்ள முற்படும் போது, எவ்வித சுற்றுப்புற சூழலையும் இவ்வடிவங்கள் எதிரொலிக்கின்றன. இவை நம் நினைவுகளைத் தூண்டுபவையாகவும் உள்ளன. மேலும்  வடிவங்கள் முடிவான நிரந்தரமான ஆரோக்கிய மருந்தாகவும் கணிக்கப்படுகின்றன.கணித வடிவங்களாக உள்ள சில வடிவங்களுக்கு உரிய சிறப்பம்சமாக பெங்சூயி நிர்ணயிக்கிறது. வடிவங்களும் அவற்றின் அர்த்தங்களும்வட்ட வடிவம் - முழுமைத்தன்மை, தொடர்ச்சி, ஒற்றிணைந்த,  எண்ணங்களின் ஒற்றுமை,

 இனங்களின் உணர்வுசதுரம் - ஒருங்கிணைப்பு, நிரந்தரம், அசைவின்மை, நிலம்முக்கோணம் - நகர்தல், மாறுபாடு, குறிக்கோளை நோக்கிய பார்வை/திசைசெவ்வகம் - வளர்ச்சி, பெருகுதல், சமநிலை உள்வாங்குதல், எதிர்ப்பின்மைவளைவு - நெகிழும் தன்மை, ஒருவருக்கு ஒருவர்  உரையாடல்கள், கடைபிடிக்கும் தன்மை,அலைபோன்ற  ஓடும் கோடுகள் -  நிலை, சக்தி பிரவாகம், எதிலும் பிடிப்பின்மை.

நேர் கோடுகள் - தொடர்ச்சியான நகர்தல், ஒருமுகத்தன்மை, எதிலும் வெற்றி, ஆழ்ந்த சிந்தனைவடிவங்களை போலவே எண்களுக்கும் சில செயல்பாடுகளை
பெங்சூயி வகுத்துள்ளது.

எண்கள் கணக்கீட்டின் அளவுகளாக நாம் கருதுகிறோம். எனினும் எண்கள் தம்முள்ளே மந்திரப்பூர்வமான பல அர்த்தங்களை உள்ளடக்கி உள்ளன. எண்ணியல் சாஸ்திரம் பற்றிய அறிவு ஒவ்வொரு எழுத்து மற்றும் எண்களுக்கான தன்மையை புரிந்து கொள்ளும் முறையிலேயே பெங்சூயியும் கருத்துகளை முன் வைக்கிறது.

ஒவ்வொரு எண்ணும் தனக்கென உள்ள சிறப்பான சக்தி ஆற்றலையும், அதிர்வு தன்மையையும் கொண்டுள்ளது. இவை பரிகாரமாக பெங்சூயில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வடிவங்களையும், எண்களையும் பரிகாரமாக பயன்படுத்தும் வகையில் அவற்றுள் சக்தி புதைந்து கிடக்கிறது. எண்களும் அவற்றின் சக்தி ரூபதன்மையும்:

‘‘0” ஒருங்கிணைப்பு, முழுத்தன்மை, தொடர்ச்சி, அரவணைக்கும் நிலை, உள்ளடக்கும் சக்தி, யதார்த்த நிலை, புரிந்து கொள்ள முடியாத நிலை, முதிர்ச்சி, ஏகாந்தம், வெளிப்பாடு, இறைநிலை, சுமுக ஆதரவு, எதிலும் சேரும் தன்மை.‘‘1” ஆரம்பம், தனித்துவம், தொடர்கிற நிலை, எண்ணங்கள் ஈடேறுதல், ஒட்டி உறவாடுதல், சுக போகம், ஆனந்தம், பிறப்பு.

‘‘2” இணை சேர்தல்,  உச்சநிலை, இடையிடையே இணங்குதல், உபகாரம், செல்வாக்கு, எதையும் அரவணைத்தல், சுமுக உறவாடி சந்தோஷம் சேர்ப்பது, உணவுப் பொருட்கள், நீர் சம்பந்தப்பட்டவை, வேகமான செயலாற்றல் உடையவை.‘‘3” உற்பத்தி ஸ்தானம், வளர்ச்சி, ராஜ தன்மை, மந்திரி பதவி, குறிக்கோளை நோக்கிய பார்வை, பாதை, உறவுகள், பெரியவர் நேசம், பரிபாலனம், நிலைத்தன்மை, அண்டை அயலார் உறவு.‘‘4” நிலைத்த ஆற்றல், நிரந்தரத்தன்மை, உள்ளங்களில் இடம் பிடிப்பது, பின்னோக்கிப்  பயணிப்பது, குறைவற்ற செல்வம், மக்கட்பேறு, தானமளிப்பது, சுகம், மேன்மை, அடுத்தவர்  நலனில் அக்கறை.

‘‘5” மாற்றங்கள், செயலின் வெளிப்பாடு, இரட்டை நிலை, வேகம், பலரின் பாராட்டு, இளவரசர், பதவி உயர்வு, பல் தொழில் நுட்ப அறிவு, கலைகளில் ஆர்வம், அரசப்பதவி, எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை.

‘‘6” கூட்டுறவு, கொடுக்கல் வாங்கல் தன்மை, ஆடம்பரம், செல்வாக்கு, பெண்மை, வாகனப்பிரியம், கடல் சார்ந்த பணி, உயர் வகுப்பினர் இணக்கம், ஒற்றுமை, போக பாக்கியம், எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.

‘‘7” விலகுதல், தன் உணர்வுகளையும் ஆசாபாசங்களையும் தானே ஆய்வு செய்தல், எதிராக செயல்படுவது, தன்னடக்கம், எளிமை, மற்றவர் கருத்தை ஏற்க இயலாமை, ஞானி.‘‘8” பணம், வியாபாரம், பொருண்மை சக்தி, ஆழ்கடல் பயணம், முரண்பாடு, எளிதில் நுழையமுடியாத இடம், இருட்டு, பயம், நோய், வழக்கு, விவகாரத்தில் ஈடுபாடு, நல்நடத்தை, ஆன்மிகத்தில் ஈடுபாடு, உழைப்பாளி.‘‘9” முழு திருப்தி, முடிவு, வேகம், ராணுவ ஈடுபாடு, ரசாயனத்தன்மை, நிலம் சம்பந்தப்பட்ட செயல்கள், நெருப்பு, எரிபொருட்கள் துறை.

(இரட்டை இலக்க எண்கள் அதற்கு மேற்பட்டவை குறித்த பெங்சூயி குறிப்புகளும் உள்ளன. )இனி   இவற்றின் பயன்பாட்டை காண்போம்.பணிகளில், வியாபாரங்களில் நிலையான தன்மை இல்லையெனில் சதுரவடிவ பொருட்களை காட்சிப் பொருளாக வைக்கும் போதும், அதனுள் 5 (அ) 9 என்ற எண்களை பதிக்கும் போதும், பொது மக்கள் ஊழியர்கள் கண்களில் படும் வகையில் அதனை அமைக்கும்போதும் குறைபாடு நீங்கப்பெறும்.நேர்கோடுகளை கொண்ட ஓவியம், 3 (அ) 6 என்ற எண்களை அதில் பயன்படுத்தும் போது வெளிநாட்டு வியாபாரம், பணி, வெற்றி, உணர்வு பூர்வ செயல்பாடுகளில் மேன்மை அடைய முடியும்.

எளிய உடனடி பரிகார முறைகள்அடுப்பு வைத்துள்ள இடத்திற்கு அருகில் கண்ணாடி ஒன்றைப் பொருத்தி, எரியும் நிலையை எதிரொலிக்கும் போது, சுவையான உணவாகவும், விரயமாகாத உணவாகவும், விருந்தோம்பல் சிறப்பும், உணவு விடுதிகளில் அடிக்கடி சாப்பிடும் நிலையை மாற்றி விடும் அற்புதம். இப்படி செய்வதால் 10 தினங்களில் மாற்றத்தை காண முடியும்.கண்ணாடி பிரதிபலிப்பதால் இரட்டை உருவம் இருப்பதால் இவை நிகழ்வதாக பெங்சூயி நம்புகிறது.

தீக்குச்சியைக் கொண்டு ஒரு முறையேனும் அடுப்பினை ஏற்றுவது நல்லது. உணவுப்பற்றாக்குறை உள்ள வீட்டிலும் இப்படி செய்வதால் 3 வேளை உணவு கிடைப்பதுடன் அது சுவையானதாகவும் இருக்கும்.

அடுப்பினை எப்போதும் கிழக்கு நோக்கியே (சூரிய திசை) செயல்படுத்தும் போது மட்டுமே முழுத் திறன் வெளிப்படும்.இன்றைக்கும் கோயில்களில் விறகை பயன்படுத்தியே அடுப்பு ஏற்றப்பட்டு வருவதால் அவ்வாறு தயாரிக்கப்படும் பிரசாதங்கள் தெய்வீகமாகவும், சுவையாகவும் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

(தொடரும்)