பார் போற்றும் பங்காரு அடிகளாரின் பவளவிழா வைபவம்



மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு.பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் மார்ச் 3ம் தேதி அவருடைய 75 வயது பவளவிழா ஆண்டாக தொடங்கியது. அடுத்த ஆண்டு 2016 மார்ச் 3 வரையிலான இந்த ஆண்டை மிகவும் சிறப்பாக செவ்வாடை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அருள்திரு பங்காரு அடிகளார் மருவத்தூரிலும், வேலூர் மாவட்டம் கலவையிலும், நிறுவிய 15 கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலவையில் 9-2-15 அன்று நடத்திய ஒரு மாபெரும் மேடை நிகழ்ச்சியுடன் பவளவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

மேல்மருவத்தூரில் நடைபெறும் பவளவிழா துவக்க நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.5 கோடிக்கும் அதிகமான அளவில் பல பயனாளிகளுக்கு பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற உள்ளன.இந்தப் பவள விழா ஆண்டில் இயற்கையை நேசிக்கும் விதமாக 75000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியின் சார்பாக 75 ஏக்கர் பரப்பளவில் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட உள்ளதும், இயற்கை விவசாய சாகுபடி நடைபெற உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் திருமதி லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை யிலும், பவள விழாக் குழுத்தலைவர் ஏ.கே.வெங்கிடசாமி தலைமையிலும், சேலம், நாமக்கல் மாவட்டத் தலைவர்கள் முறையே சந்திரமோகன், கணேசன் பொறுப்பிலும் ஆதிபராசக்தி மன்றத் தொண்டர்கள் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மக்கள் நலப்பணிகளில் வழங்கப்பட உள்ள சில பொருட்கள்:

1. கல்வி: பள்ளிகளுக்கு மேசை, நாற்காலிகள், கரும்பலகைகள், மின்காற்றாடிகள், பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள், மடிக்கணினிகள், அச்சுக்கருவிகள், ஒலிபெருக்கிகள், இரும்பு பீரோக்கள், விஞ்ஞான ஆய்வுக்கருவிகள், போர்வெல் இயந்திரப் பம்புகள், குடிநீர்த்தொட்டிகள், கழிவறைகள் மேலும் பல.

2. விவசாயம்: மருந்து தெளிப்பான் கைக்கருவிகள், விசைக்கருவிகள், ஏர்க்கலப்பைகள், தென்னங்
கன்றுகள், மாடுகள் மற்றும் கன்றுகள், நீர்நிலை தேக்கங்கள் மற்றும் பல.

3. சுகாதாரம்: காதுகேட்கும் கருவிகள், உடற்பயிற்சிக் கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், புதிய கழிவறைகள் கட்டுதல், இரத்த அழுத்தம் சோதிக்கும் கருவிகள், மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் நாற்காலிகள் அமைத்தல், ஆம்புலன்ஸ் வண்டிகள், எவர்சில்வர் சாப்பாட்டு தட்டுகள் மற்றும் சமையல் சாமான்கள் மற்றும் பல.

4. வாழ்வாதாரம்: ஆட்டோ ரிக்ஷாக்கள், ஆவின் பால் பூத்துகள், செயற்கை ஆபரணக்கற்கள் உருவாக்கும் கருவிகள், கணினிகள் மற்றும் அதன் பயன்பாட்டு உபகரணங்கள், குளிர்
சாதனப்பெட்டிகள், சலவைப்பெட்டிகள், குளிர் ஊட்டப்படும் சவப்பெட்டிகள், தையல் இயந்திரங்கள், பேப்பர்கள், எம்ப்ராய்டரி முதலிய சிறப்பு தையல் இயந்திரங்கள், மீன்பிடிக்கும் வலைகள், இட்லி கொப்பரைகள், 15 லிட்டர் மாவரைக்கும் இயந்திரங்கள், பேப்பர்கள் கோப்பைகள் செய்யும் இயந்திரங்கள், பெட்டிக்கடைகள், ஜெராக்ஸ் நகல் இயந்திரங்கள், மூன்று சக்கர, இரண்டு சக்கர தள்ளுவண்டிகள் மற்றும் பல.

5. பண்பாடு: அனைத்து வயதுப் பிரிவினருக்குமான உடற்பயிற்சிக் கருவிகள், கால்பந்து, கைப்பந்து முதல் கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் வரையிலான பற்பல விளையாட்டுப் பொருட்கள், சிறுகுழந்தைகள் பள்ளிகள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் அறிவியல் சார்ந்த பல விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பல.

6. சமூகவியல்: பேருந்து நிழற்குடைகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், 5 லிட்டர் சமையல் குக்கர்கள், சமையல் பாத்திரங்கள், படுக்கைகள், தலையணைகள், குளிர்சாதனப் பெட்டிகள், பழச்சாறு கருவிகள், நீராவி சமையல் பாத்திரங்கள், தெருவிளக்குகள், தொலைக்காட்சி பெட்டிகள், மூன்று சக்கர வண்டிகள், துணிகள் சுத்தம்படுத்தி உலர்த்தும் வாஷிங் மிஷின்கள், நீர் சூடேற்றும் ஹீட்டர் கருவிகள், இரண்டு சக்கர வீல் நாற்காலிகள் மற்றும் பல.

7. ஆதிவாசிகளுக்காக சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் கல்வி கற்றுக்கொடுக்கும் அமைப்புகள் மற்றும் பல.

இவ்வாறு பல சமுதாயத் தொண்டுகளுடன் கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் உஸ்தமனம் காண்பதற்கு மேடை அமைத்தல், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் (கடற்கரையில்) அருகில் தங்குவதற்கான கூடம், தேனி, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில்  நோயாளிகள் காத்திருப்புக்கூடம் முதலான சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை செயலுருவாக மாற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அருள்திரு பங்காரு அடிகளாரின் கருணை உள்ளம் தமிழ்நாடெங்கும் அருள்வெள்ளமாய்ப் பொங்கிப் பெருகுகிறது என்பது கண்கூடான உண்மை.

- கங்காதரன்