வாருங்கள், நவகிரக தல சுற்றுலா செல்வோம்!



ஆன்மிகம் மாதமிருமுறை இதழும், கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சியும் இணைந்து அறிவித்திருந்த நவகிரக தல சுற்றுலா பொது அறிவுத்திறன் போட்டியில் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவருமே கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில்களை எழுதியதோடு, ஆன்மிகம் இதழ் பற்றிய தங்களது பல்வேறு கருத்துகளைச் சொல்லி எங்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்.

வாசகர் கண்ணோட்டத்தில் ஆன்மிகம் இதழ் பொலிந்திருக்கும் விதம் குறித்து பலர் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாலும், வேறு பலர் ஆன்மிகம் மாதமிருமுறை இதழ் இன்னும் எவ்வாறு சிறப்பாகப் பரிமளிக்க முடியும் என்றும் பல்வேறு யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இருபத்தைந்து வாசகர்களைத்தான் தேர்வு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், வந்திருந்த எல்லா போட்டிப் படிவங்களையும் குலுக்கல் முறையில்தான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

 இந்தப் போட்டியில் தேர்வு பெற்றவர்களது புகைப்படங்களையும் அவர்களது முகவரி களையும் இங்கே பிரசுரித்திருக்கிறோம். தேர்வு பெறாதவர்களுக்கு போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதற்காக எங்களது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்வு பெற்றவர்களோ, பெறாதவர்களோ அனைவரது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும், யோசனைகளுக்கும் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றி பெற்றோர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே, நவகிரக தல சுற்றுலா சம்பந்தமான அனைத்துத் தகவல்கள், ஏற்பாடுகள், வசதிகள் அனைத்தையும் விவரமாக எடுத்துரைக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கல் பப்ளிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநரும் ஆன்மிகம் இதழின் ஆசிரியருமான திரு.ஆர்.எம்.ஆர். ரமேஷ் அவர்கள் போட்டிக்கு வந்த படிவங்களைத் தேர்வு செய்கிறார். உடன் ஆன்மிகம் பொறுப்பாசிரியர் திரு.பிரபுசங்கர் (இடது) மற்றும் விளம்பரத் துறை பொது மேலாளர் திரு.நடேசன் (வலது). நவகிரக தல சுற்றுலாவுக்கு, வெற்றியாளர்களே, தயார்தானே! வெற்றியாளர்கள் விவரம்:

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்