உள்ள(த்)தை சொல்கிறோம்





அடுத்த பக்கத்துக்கு நகரவேயில்லை

காஞ்சி பரமாச்சார்யாரின் பிள்ளையார் சுழி மகத்துவத்தை படிக்கப் படிக்கப் பெருமையாகவும் பக்திமயமாகவும் இருந்தது. விக்னங்கள் தீர்க்கும் விநாயகரின் துணுக்குகள் அனைத்தும் அரிய தகவல்களாக இருந்தது.
- சி.பா. சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.

இறைவன் கொடுப்பதை நம்மால் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தாலே போதும். துன்பமில்லாப் பெருவாழ்வு வாழமுடியும் என்கிற வைர வரிகளை தலையங்கக் கட்டுரையில் வெளியிட்ட ஆசிரியருக்கு அனேக வணக்கங்கள்.
- இரா. கல்யாண சுந்தரம். வேளச்சேரி.

விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷலாக வெளிவந்திருந்த இம்மாத ஆன்மிகம் பலன் இதழ், பாதுகாக்கப்பட வேண்டிய ஆன்மிகப் பெட்டகம். ஏழுமலையான் பிரம்மோற்சவ வைபவம் குறித்த கட்டுரையும், படங்களும் அந்த வைபவத்தினை நேரில் கண்டு களித்த மனநிறைவைத் தந்தது.
- வி. மோனிஷாப்ரியங்கா, திருச்சி.

வாஞ்சாகல்பலதா ஸ்ரீவித்யாகணபதியின் அட்டைத் திருவுருவமும், உள்ளே விளக்கமும் பிரமிக்க வைத்தன. போதுமென்ற மனமே துன்பமில்லாப் பெருவாழ்வைத் தரும் என்று பொறுப்பாசிரியர் வழிகாட்டினாலும் அவ்வழி நடப்பது எளிதா என்ன?
- எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.

திருப்பதி காட்சிகள் அருமை. 38 ஆண்டுகள் 10 மாதங்கள் 20 நாட்கள் தில்லை நடராஜர் சிறைபட்டிருந்ததைப் படித்தபோது தெய்வமும் இயற்கை துன்பத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை என உணர்ந்தோம். ஸ்ரீவித்யாகணபதி கட்டுரை படித்தபோது மைசூருக்குச் சென்று அந்தக் கணபதியை தரிசிக்க ஆவல் எழுந்தது நிஜம். மணிகர்ணிகா காட் கட்டுரை அற்புதம்.
- பி.வி.குப்புசாமி, திருச்சி.

‘நமக்குள்ளே மூன்று கோட்டைகள்’ படித்தேன். தீயகுணங்களை நீக்கி மனிதனை ஆட்கொள்பவன் ஆடவல்லான். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற செய்தியும், தட்சனின் ஆணவம் அழிக்கப்பட்ட செய்தியும், மிக அருமையாக வெளிப்படுத்தப் பட்டிருந்தன.
- இராம.கண்ணன். திருநெல்வேலி.

சக்தி வழிபாடு தொடரில் ஆசிரியர் மூலாதாரம் பற்றியும், நரியைப் பரியாக்கியது பற்றியும், சப்தவிடங்கத்தில் அஜபா நடனம் பற்றியும், உலகில் முதல் ஏ.டி.எம் பற்றியும் சிறப்பாக, சிந்திக்க வைக்கும் வகையில் விளக்கியிருந்தது அருமை.
- ஏ.டி.சுந்தரம், ரக்க்ஷாம்பாளையம்.

அருணகிரியாரின் பாடல்கள் கொஞ்சம் கடினமான தமிழில் இருக்கும். அவரின் ராமாயணத்தை சித்ராமூர்த்தி அவர்கள் எளிய முறையில் பொருள் கூறிவருவது வெகு சிறப்பு. பாலகாண்டமே இத்தனை அற்புதம் என்றால், முழு ராமாயணம் இன்னமும் சுவையாக இருக்குமே!
- கே.வி. கமலா, தஞ்சாவூர்.

விநாயகர் பூஜைக்குகந்த 21 மலர்களைப் பற்றித் தங்கள் இதழ் மூலமே அறிந்தேன்.
- வி.கே.ராமசாமி, பொள்ளாச்சி.

அருள்புரிவீர் அஷ்ட விநாயகரே என்று எட்டு விநாயகர்கள் பற்றி அனைவருக்கும் எட்டும் வண்ணம் சொன்னது அபாரம். ஊர் அறிந்தால் பேர் அறியாமல், பேர் அறிந்தால் ஊர் அறியாமல் இருந்த நிலையில் ஊரையும் பேரையும் எங்களுக்குத் தெரிவித்ததற்கு நன்றி.
- கே. ஏ. நமசிவாயம், பெங்களூரு.

இனிக்கும் இதிகாசம், அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் என்று பக்கங்களுக்கு பக்கம் அரிய செய்திகள், அருமையான வியப்பூட்டும் தகவல்கள்.
- ஜி. நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல் முகப்பு அட்டையை விட்டு என் மனமும், கண்களும் அடுத்தப் பக்கத்துக்கு நகரவேயில்லை.
- முத்தூஸ், தொண்டி.


பெருமாளுக்கு விரதமிருக்கும் புரட்டாசி மாத தருணத்தில் ஏழுமலையான் பிரம்மோற்சவ வைபவத்தை விவரித்த கட்டுரை, வண்ணப்படங்களைக் கண்டு சிலிர்த்துப் போனோம். கூட்ட நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக அந்தக் கண்கொள்ளா வைபவத்தைக் கண்ட ஆனந்தம் மனதில் நிரம்பியது. நன்றி!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

செப்டம்பர் மாத பிரசாதங்கள், பண்டிகைகளை சந்தோஷமாகக் கொண்டாட, இறைவனுக்கு சமர்ப்பிக்க அருமையான செய்முறைகளை அறியத் தந்தது. ஆன்மிக அலமாரி வாசித்து மகிழ நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறது. அரளிச் செடியின் சிறப்புகளை தெளிவு பெறு ஓம் உணர்த்தியது. நன்றிகள் கோடி.
- எஸ். வளர்மதி, கொட்டாரம.

ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்? எளிமையாக விளக்கம் அளித்த அற்புதமான கட்டுரை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.